திருநள்ளாறு கோயிலில் புதிதாக தயாரிக்கப்பட்ட இந்திர விமானத்தில், சனீஸ்வரருக்கான சப்பரத்தின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் உள்ள பழைமையான இந்திர விமானம் காரைக்கால் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருவிழாவின்போது சுவாமி வீதியுலாவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால், திருநள்ளாறு கோயிலுக்கென்று தனியாக இந்திர விமானம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. நன்கொடை மூலம் ரூ.11 லட்சத்தில் புதிதாக இந்திர விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய இந்திர விமானம் தரைமட்டத்திலிருந்து 15 அடி உயரம், 6.5 அடி அகலத்தில் பர்மா தேக்கு மரத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 3.5 டன் ஆகும். மேலும், கோயில் நிர்வாகத்தின் செலவில் பெல் நிறுவனத்தின் மூலம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் வீதியுலாவுக்கென இரும்பால் சப்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Author: சக்தி ஆன்லைன் டீம்
-
2016-09-09-04-56-37
-
2016-09-08-14-58-38
வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்.
பொதுவாக வீட்டில் அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும்.
அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும்.
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.
குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும்.
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.
அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.
சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.
ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.
தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.
ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும்.
ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.
அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.
துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.
சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். -
veetil-vaithu-vanaga-koodiya-deivangal

2016-09-08-13-59-04
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14-ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுள்ளது.
உள்ளூர் விடுமுறைக்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
-
2016-09-08-10-04-02
பிரம்மோற்சவ விழாவிற்காக திருப்பதில் கூடுதலாக 7 லட்சம் லட்டுகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருமலையில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இத குறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தலைமையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், பிரம்மோற்சவ விழாவிற்கு வரும் பக்தர்களுக்குத் தங்கு தடை யின்றி லட்டு பிரசாதங்கள் வழங்க 7 லட்சம் லட்டுகள் இருப்பில் இருத்தல் அவசியம் என சாம்பசிவ ராவ் கூறினார். மேலும், பிரம்மோற்சவத் திற்கு வரும் அனைத்து பக்தர் களும் திருப்திகரமாக சுவாமியை தரிசித்துச் செல்லும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யப்படும் என தெரிவித்தார்.
அதேபோன்று திருப்பதி, திருமலை யில் உள்ள தங்கும் அறைகளையும் மராமத்து செய்ய வேண்டும் கனவும் தரிசனம், இலவச அன்னபிர சாதம், தங்கும் அறை, பாதுகாப்பு, போக்குவரத்து போன்றவற்றில் எந்தவித குறைகளும் இன்றி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் மாட வீதிகள், முக்கிய சத்திரங்கள், பேருந்து நிலையம், தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பது மிக அவசியம் என வலியுறுத்திய அவர், கருட சேவையின் மாதிரி வீதி உலா வரும் 16-ம் தேதி நடைபெறும் என சாம்பசிவ ராவ் பேசினார்.
-
2016-09-07-11-59-47
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களுக்கு செல்ல நெல்லையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என நெல்லை மண்டல போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளான அதாவது செப்டம்பர் 17, 24–ந் தேதிகளிலும், அக்டோபர் மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு இரவில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது.
நபர் ஒருவருக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பஸ் கட்டணத்தை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -
2016-09-07-11-27-13
திருப்பதியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பிரம்மோற்சவமும், 7-ந் தேதி கருட சேவையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. 3-ந்தேதி மாலை 4 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.
4-ந்தேதி காலை சின்ன சேஷ வாகனமும், இரவு அன்ன பறவை வாகனமும், 5-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல், 6-ந் தேதி கல்ப விருட்சம் வாகனமும், இரவு சர்வபூபாள வாகனம்.
7-ந்தேதி காலை மோகினி அவதாரம் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கருட சேவையும் நடக்கிறது.
8-ந் தேதி அனுமந்தம் வாகனம், மாலையில் தங்க ரதம், இரவு யானை வாகனமும், 9-ந் தேதி காலை சூர்யபிரபை, மாலை சந்திர பிரபை, 10-ந் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.
கடைசி நாளான 11-ந் தேதி காலை தீர்த்தவாரியும், மாலையில் கொடி இறக்கமும், இரவு தங்க பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.
மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி, உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் தீவிரமாக செய்து வருகிறது -
2016-09-06-15-57-40
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 1.25 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துவதாக திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவில் 6 அரங்குகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக தற்போது ஒரு அரங்கு பக்தர்களுக்கு காற்றோட்டமாகவும் பிற வசதிகள் நிறைந்ததாகவும் புனரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய, கோயில் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 1.25 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துவதாகவும், இதில், 1.10 கோடி பேர் மொட்டை அடித்தும், மீதமுள்ள பெண் பக்தர்கள் தங்களது தலைமுடியின் கொனை முடியை காணிக்கையாக செலுத்துவதாகவும் கூறினார். அதன்படி, தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும், தொற்று நோய்கள் பரவாத வகையிலும் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த அவர், அதில் தற்போது முதல் கட்டமாக 6 அரங்கில் ஒரு அரங்கு புனரமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல், அனைத்து அரங்குகளும் புனரமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
மேலும், சவர தொழிலாளர்களுக்கு தொற்று நோய்கள் பரவாத வகையில் மருத்துவ சோதனை நடத்தப்படுவதாகவும், 282 சவரத்தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதில், 1200 ஒப்பந்த சவர தொழிலாளர்களுக்கு ஒரு மொட்டைக்கு 7 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருவதாக கூறிய சாம்பசிவ ராவ். தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக காலை 8 மணி முதல் 12 மணி வரையில் தான் அதிகளவிலான பக்தர்கள் வருவதாக கூறினார். வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கூடுதலாக சவர தொழிலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். -
2016-09-06-15-24-01
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவ விழா செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுகிறது.
அதன்படி இந்த ஆண்டு பவித்ரோற்சவ விழா செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் பக்தர்கள் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.
இந்த விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து 183 வகையான வாசனை திரவியங்களை கொண்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.பவித்ரோற்சவ விழாவை முன்னிட்டு 3 நாட்கள் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி மாலை அங்குரார்ப்பணம், 14-ந் தேதி பவித்ரோற்சவ விழா, மற்றும் பவித்ர பிரதிஷ்டையும், 15-ந் தேதி பவித்ர சமர்ப்பணமும், 16-ந் தேதி பூர்ணாஹூதி, பவித்ரோற்சவம் நடபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2016-09-06-05-46-01
வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
இந்த ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதா பாடல்களை பாடிய படி புனிதப் பாதையில் சென்றனர்.தொடர்ந்து 7 ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடக்கிறது.
விண்மீன் ஆலயத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.
பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்று இரவு பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாகண்ணியில் குவிந்தவண்ணம் உள்ளனர்.