திருப்பதி திருமலையில் உள்ள ஜபாலி தீர்த்தம் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகாந்த சேவை தொடங்கியது.
அஞ்ஜனாத்திரி மலையில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி தீர்த்தக்கரையில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலில், திருமலைக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி ஆஞ்சநேயரை வணங்கிச் செல்வது வழக்கம்.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோயில் திறந்திருக்கும். அடர்ந்த வனத்துக்குள் இருக்கும் இக்கோயிலுக்கு செல்ல தேவஸ்தானம் படிகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் இதுவரை ஏகாந்த சேவை நடத்தப்படவில்லை. அதனால் கோயில் பூஜாரி மாதவதாஸ் தலைமையில் முதல்முறையாக தீபாவளி நாளான கடந்த 29-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவை தொடங்கப்பட்டது.
ஏகாந்த சேவையின்போது பயன்படுத்தப்படும் ஊஞ்சல் வடிவ மரக்கட்டில், பட்டால் ஆன மெத்தை, தலையணை, துப்பட்டி உள்ளிட்டவற்றை பக்தர் ஒருவர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.
தற்போது, உள்ளூர்வாசிகள், பக்தர்கள் என தினமும் ஏராளமானோர் ஏகாந்த சேவையில் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர்.
Author: சக்தி ஆன்லைன் டீம்
-
2016-11-03-13-09-45
-
2016-11-03-12-45-54
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாளில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி கந்தசஷ்டி திருவிழா கடந்த திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கும், 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கும் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. 3-ஆம் நாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மூலவருக்கு உச்சிகால அபிஷேகத்துக்கு பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட, சண்முகவிலாச மண்டபத்துக்கு வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். -
188
திருமலை, திருப்பதி நகரத்தை அழகுபடுத்த 188 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களில் நடைபெற உள்ள மனகுடி திருவிழாவுக்காக ரூ.66 லட்சத்து 93 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல நவம்பர் மாதம் இறுதியில் ஐதராபாத்தில் உள்ள சன்சாபாத் நகரில் சீனிவாச கல்யாண உற்சவத்தை நடத்துவது எனறும், திருமலை, திருப்பதி நகரை அழகுபடுத்தவும், மின் விளக்குகள் அமைக்கவும், பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.188 கோடி நிதி ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், சொர்லோப்பள்ளி, சீனிவாசமங்காபுரம் சாலைகளை சீர் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்குவது. 6 மாதங்களுக்குத் தேவையான 21 லட்சத்து 50 ஆயிரம் கிலோ எடையிலான நெய் கிலோ ரூ.364 வீதம் ரூ.78 கோடியே 28 லட்சம் செலவில் கொள்முதல் செய்வது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சந்திரபிரபை வாகனம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் செலவில் தாயார் செய்வது. அதற்காக 165 கிலோ எடையிலான வெள்ளியை வழங்குவது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆராதனை பீடம், சிம்மாசனம் ஆகியவற்றுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் செலவில் தங்க முலாம் பூசுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. -
2016-11-02-04-55-42
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்துக்கான அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
டிசம்பர் 4-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையையும், சுவரொட்டியையும் தேவஸ்தான அதிகாரிகள் திருமலையில் வெளியிட்டனர்.பிரம்மோற்சவ அட்டவணை:
நவம்பர் 26 –
காலை – கொடியேற்றம், இரவு – சின்னசேஷ வாகனம்,
நவம்பர் 27-
காலை பெரியசேஷ வாகனம், இரவு – அன்னப் பறவை வாகனம்
நவம்பர் 28 –
காலை முத்துப் பந்தல் வாகனம், இரவு – சிம்ம வாகனம்
நவம்பர் 29 –
காலை – கல்ப விருட்ச வாகனம், இரவு – அனுமந்த வாகனம்
நவம்பர் 30 –
காலை – பல்லக்கு உற்சவம், மாலை – வசந்தோற்சவம், இரவு – யானை வாகனம்,
டிசம்பர் 1-
காலை – சர்வபூபால வாகனம், மாலை – தங்க ரதம், இரவு – கருட வாகனம்,
டிசம்பர் 2 –
காலை – சூரிய பிரபை வாகனம், இரவு – சந்திர பிரபை வாகனம்
டிசம்பர் 3 –
காலை – ரத உற்சவம், இரவு – குதிரை வாகனம்,
டிசம்பர் 4 –
காலை – பஞ்சமி தீர்த்தம், மாலை – கொடியிறக்கம், இரவு – தங்கப் பல்லக்கு வாகன சேவை ஆகியவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. -
15
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மகர விளக்கு முன்னிட்டு நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும் நடை டிசம்பர் 26-ஆம் தேதி இரவு மூடப்படுகிறது.
நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை தினந்தோறும் காலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.மகர விளக்கு பூஜையை முன்னிட்டு டிசம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 20.1.2017 காலை நடை மூடப்படும்.
மண்டல மகர விளக்கு பூஜை நாட்களில் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 19.1.2017 வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை நடை திறந்து 17-ஆம் தேதி இரவு நடை மூடப்படும்.
புதிய கொடி மரம் பணிகள் நடைபெற்று வருவதால் ஆண்டு உற்சவம் ஜூன் மாதம் மாற்றப்பட்டுள்ளது தேதி முடிவு செய்யப்படவில்லை. -
2016-11-02-02-56-49
திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன நுழைவுச்சீட்டுகள், சென்னையில் உள்ள இரு அஞ்சலகங்களில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…
திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை சென்னை தியாகராய நகர், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளும் வசதி செவ்வாய்க் கிழமை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்த சேவையை வழங்குவதாகவும், இதன் படி, ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை இந்த இரு அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அஞ்சல் மூலம் நுழைவுச்சீட்டு பெற விரும்புவோர் அதற்காக 56 நாட்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஒரு நுழைவுச்சீட்டில் அதிகபட்சம் 6 பேரை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பயணிகள் குழுவைச் சேர்ந்தவர் களில் யாரேனும் ஒரு நபர் நேரில் வந்து, நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். புகைப்படங் களை தரவேற்றம் செய்து அவர் களுக்கு பார்கோடு பதியப்பட்ட நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் வழங்கப்படும். கூடுதல் லட்டு தேவைப்படுவோர், ஒரு லட்டுக்கு ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ள லாம்.
காலை 10, 11, நண்பகல் 12, பகல் 1 மணி ஆகிய நேரங் களில் தரிசனம் செய்ய வசதியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். -
2016-11-01-10-19-42
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது
நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது. -
pradosha-kalathil-sivalayangalai-valam
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.
பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது
நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது. -
2016-10-31-14-22-15
சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள் குறித்த சில அறிய தகவல்களை பார்க்கலாம்.
பதஞ்சலி சித்தர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
அகஸ்தியர் – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
குதம்பை சித்தர் – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
கோரக்கர் – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
தன்வந்திரி சித்தர் – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
சுந்தராணந்தர் – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
கொங்ணர் – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
சட்டமுனி – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
வான்மீகர் – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
ராமதேவர் – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
நந்தீஸ்வரர் – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
இடைக்காடர் – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
மச்சமுனி – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
கருவூரார் – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
போகர் – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
பாம்பாட்டி சித்தர் – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்…. -
2016-10-31-14-12-52
திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது வரும் நவம்பர் 6-ம் தேதி வரை 7 நாட்களுக்கு வெகு விமரிசையாக சஷ்டி விழா நடைபெற உள்ளது.
இதில், தினந்தோறும் காலை புஷ்பம், பட்டு, தங்கக் கவசம், திரு வாபரணம், வெள்ளி மற்றும் சந்த னக் காப்பு ஆகிய அலங்காரங் களில் சுப்ரமணிய சுவாமி அருள் பாலிக்க உள்ளார். மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான நவ.6-ம் தேதி காலை 11 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறும். இன்று முதல் நவ.5-ம் தேதி வரை உற்சவரான சண்முகருக்கு லட்சார்ச்சனையும், நவ.5-ம் தேதி மாலை 5 மணியளவில் புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது. நவம்பர் 5-ம் தேதி வரை இருவேளைகளில் தேவார பாராயணம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.