Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Gemini – June Horoscope

    கிரகநிலை:

    ராசியில்  குரு – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் – தைரிய வீரிய  ஸ்தானத்தில்  கேது – பாக்கிய ஸ்தானத்தில்  சனி, ராஹு – லாப  ஸ்தானத்தில் சுக்கிரன் – அயன சயன போக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன் என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025 அன்று புதன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.14-06-2025 அன்று சூரிய பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    22-06-2025  அன்று புதன் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    வாக்குவாதத்தில் தனது அறிவுத் திறமையுடன் ஈடுபட்டு எதிரில் இருப்பவர்களை தன் வசப்படுத்தும் மிதுன ராசியினரே நீங்கள் அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள்  பெருகும், உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். 

    குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் அஷ்டமபாக்கியாதிபதிபதி சனி ஐந்தில் அமர்வதால் பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். 

    உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 

    வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். 

    கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். 

    அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். 

    மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

    திருவாதிரை:

    இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

    இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். 

    பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள் : 14, 15, 16 

    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

  • Taurus – June Horoscope

    கிரகநிலை:

    ராசியில்  சூர்யன், புதன் – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  குரு – தைரிய வீரிய  ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் – சுக ஸ்தானத்தில்  கேது – தொழில்  ஸ்தானத்தில் சனி, ராஹு – அயன சயன போக  ஸ்தானத்தில்  சுக்கிரன் என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்.

    02-06-2025  அன்று புதன் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  தைரிய வீரிய  ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025  அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெற்ற ரிஷபராசியினரே நீங்கள் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு பூமி மூலமும், வீடு வாகனங்கள் மூலமும் லாபங்கள் இருக்கும். தடைபட்ட பணம் கைக்கு கிடைக்க  வகை செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு  வெற்றி காண்பீர்கள்.  இருப்பினும் குரு அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.  விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

    தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.  எல்லா நற்பலன்களும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம்.

    குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.  பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.

    அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியத்தை சாதிக்க எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகலாம். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே  அடிக்கடி  வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. 

    பெண்கள் இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது  நல்லது. 

    மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. 

    கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    கார்த்திகை 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

    ரோகிணி:

    இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

    மிருகசிரீஷம் 1, 2, பாதம்:

    இந்த மாதம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும்.

    பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில்  சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள் : 12, 13 

    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

  • June Horoscope: Life is about to turn upside down for these zodiac signs; who knows?

    கிரகநிலை:

    ராசியில் சுக்கிரன் – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், புதன் – தைரிய ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – பஞசம  ஸ்தானத்தில் கேது – லாப  ஸ்தானத்தில் சனி, ராஹு என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்

    02-06-2025  அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-06-2025 அன்று செவ்வாய் பகவான்  சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-06-2025 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-06-2025  அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    29-06-2025 அன்று சுக்ர பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசியினரே நீங்கள் காரணமில்லாமல் யாரிடமும் சினம் கொள்ள மாட்டீர்கள். இந்த மாதம் உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளை தரும் மாதமாக அமையும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். 

    தொழிலில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள்  சரியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

    தாய் – தாய் வழி உறவினர்கள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரங்களில் தகராறு உண்டாகும். இருந்தாலும் அனைத்தையும் திறமையாக சமாளீத்து விடுவீர்கள்.  பூர்வீக சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை  இழுபறியாக இருக்கும்.  வழக்குகளில் சுமூக முடிவுகள் வந்து சேரும்.. வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.

    பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகளும் தீரும். 

    மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள். வாகனம் ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. 

    கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும்.

    அஸ்வினி:

    இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

    பரணி:

    இந்த மாதம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை தோறும் முருகன் கோவிலுக்குச் சென்று வருவது நல்ல பலன் தரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி; 

    சந்திராஷ்டம தினங்கள் : 10, 11 

    அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

  • Beads created by Lord Shiva and their uses

    சிவபெருமான், இந்த பிரபஞ்சத்தின் ஆதி கடவுளாக, பல அதிசயங்களை படைத்தவர். அவரால் தோற்றுவிக்கப்பட்டதாக நம்பப்படும் நவரத்தின மணிகள், மனித வாழ்வில் செல்வம், ஆரோக்கியம், ஞானம், வெற்றி மற்றும் பல நன்மைகளை அளிக்கும் ஆற்றல் பெற்றவை. இந்த பதிவில், மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம், வைடூரியம் ஆகிய மணிகளின் பயன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    1. மாணிக்கம்

    • பயன்கள்: செல்வம் பெருகும்; பூத, பிரேத பயம் விலகும்.

    • மாணிக்கம் செம்மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்கும் இந்த மணி, செல்வ வளத்தை அதிகரிக்கும். பயம் தரும் அமானுஷ்ய சக்திகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சிவபெருமானின் அருளால், இது வாழ்வில் நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறது.

    2. முத்து

    • பயன்கள்: வறுமை விலகி, ஆயுள் விருத்தியடையும்.

    • வெண்மையான முத்து, அமைதியையும் செழிப்பையும் கொடுக்கும். வறுமை நீங்கி, நீண்ட ஆயுளைப் பெற இது உதவுகிறது. சிவபெருமானின் படைப்பில், இது மனதை சாந்தப்படுத்தி, வாழ்வில் நிலைத்த புரட்சியை ஏற்படுத்தும்.

    3. பவளம்

    • பயன்கள்: புத்திர பாக்கியம் உண்டாகும்.

    • சிவந்த பவள மணி, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இது வரமாக அமைகிறது. சிவபெருமானின் அருளால், இது குடும்ப ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் பெருக்குகிறது.

    4. மரகதம்

    • பயன்கள்: புகழைக் கொடுக்கும்.

    • பச்சை நிற மரகதம், அழகு மற்றும் புகழின் சின்னமாக விளங்குகிறது. சமுதாயத்தில் மதிப்பையும், புகழையும் பெற விரும்புபவர்களுக்கு இது சிறந்தது. சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இம்மணி, உங்கள் திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்தும்.

    5. புஷ்பராகம்

    • பயன்கள்: வெற்றியைக் கொடுக்கும்.

    • மஞ்சள் நிற புஷ்பராகம், வெற்றியின் அடையாளமாகும். வாழ்க்கையில் போட்டிகளிலும், சவால்களிலும் வெற்றி பெற இது உதவுகிறது. சிவபெருமானின் ஆற்றலால், இது உங்களுக்கு தன்னம்பிக்கையையும், வெற்றி பாதையையும் காட்டும்.

    6. வைரம்

    • பயன்கள்: பகைவர் பயம் நீங்கி, துஷ்ட மிருகங்கள் அண்டாது.

    • பிரகாசமான வைரம், பாதுகாப்பு மற்றும் வலிமையை அளிக்கிறது. பகைவர்களிடமிருந்தும், தீய மிருகங்களிடமிருந்தும் காக்கும் ஆற்றல் பெற்றது. சிவபெருமானால் படைக்கப்பட்ட இது, உங்கள் வாழ்வில் பாதுகாப்பு கவசமாக விளங்கும்.

    7. நீலம்

    • பயன்கள்: சனி தோஷம் விலகும்.

    • நீல நிற நீல மணி, சனி கிரகத்தின் தோஷங்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாழ்வில் தடைகளையும், துன்பங்களையும் போக்கி, மன அமைதியைத் தருகிறது. சிவபெருமானின் அருளால், இது உங்கள் வாழ்க்கையை சீர்படுத்தும்.

    8. கோமேதகம்

    • பயன்கள்: பாவங்கள் விலகி, அஞ்ஞானம் நீங்கும், ஞான மார்க்கம் பிறக்கும்.

    • கோமேதகம், ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் மணியாகும். பாவங்களைப் போக்கி, அறியாமையை நீக்குகிறது. ஞானத்தின் பாதையை வெளிப்படுத்தி, வாழ்வில் தெளிவை அளிக்கிறது. சிவபெருமானின் படைப்பில், இது ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.

    9. வைடூரியம்

    • பயன்கள்: அறிவு வளரும், சமுதாயத்தில் மதிப்பும் கௌரவமும் உயரும்.

    • பூனைக்கண் போன்று பிரகாசிக்கும் வைடூரியம், அறிவாற்றலை அதிகரிக்கிறது. சமுதாயத்தில் மரியாதையையும், கௌரவத்தையும் பெற உதவுகிறது. சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இம்மணி, உங்கள் புத்திக்கூர்மையையும், சமூக அந்தஸ்தையும் உயர்த்தும்.

    சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நவரத்தின மணிகள், நம் வாழ்வில் பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. செல்வம், ஆரோக்கியம், புகழ், வெற்றி, ஞானம், பாதுகாப்பு என அனைத்தையும் பெற இவை உதவுகின்றன. இந்த மணிகளை அணிவதற்கு முன், ஜோதிடர் அல்லது ஆன்மீக ஆலோசகரை அணுகி, உங்களுக்கு ஏற்ற மணியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. சிவபெருமானின் அருளால், உங்கள் வாழ்வு செழிப்பும், சந்தோஷமும் நிறைந்ததாக அமையட்டும்!

     

  • The vision of Garuda and its benefits!

    புராணங்களின் படி, கருடன் தரிசனம் ஆன்மீகத்தில் சிறந்த பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் ஞாயிறு அன்று கோவில்களில் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கட்கிழமை தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நலத்தை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பது துணிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர்.

    புதன்கிழமை தரிசனம் பகைவர்களின் தொல்லைகளை அகற்றும் என்று பலரும் நம்புகின்றனர். வியாழக்கிழமை கருடனை தரிசிப்பது நீண்ட ஆயுளை வழங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தரிசனம் செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெறுத்தரும் என்பதால், பக்தர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சனிக்கிழமை கருட தரிசனம் முக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கிறது.

    தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களில், குறிப்பாக திருநள்ளாறு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் கருடாழ்வார் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி, பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆன்மீக விவாதங்களில், கருட தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் விளக்கமளித்து, இதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர்.

     

  • Worship of Lord Murugan gives spiritual strength, peace, and success to the devotees. For more details, visit spiritual websites.

    சென்னை: தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் ஆன்மீகத்தில் முருகன் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. முருகப் பெருமான், ஞானத்தின் கடவுள், வீரத்தின் அடையாளம், மற்றும் தடைகளை அகற்றும் தெய்வமாக விளங்குகிறார். ஹிந்து புராணங்களின்படி, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகன், கார்த்திகேயன், சுப்பிரமணியன், ஷண்முகன், சரவணன் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். முருகன் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஆன்மீக நிபுணர்கள் பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    முருகனை வழிபடுவதால், மன அமைதி, தைரியம், மற்றும் ஞானம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, திருமணத் தடைகள், கல்வியில் முன்னேற்றம், மற்றும் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முருகன் அருள் உதவும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக கார்த்திகை நட்சத்திர நாளில், முருகன் கோவில்களில் வேல் வழிபாடு, அபிஷேகம், மற்றும் அர்ச்சனை செய்வது சிறப்பு. தைப்பூசம், பங்குனி உத்திரம், மற்றும் வைகாசி விசாகம் போன்ற பண்டிகைகளில் முருகனை வணங்குவது பக்தர்களுக்கு பெரும் புண்ணியத்தை அளிக்கும்.

    ‘கந்த சஷ்டி கவசம்’ பாராயணம் செய்வது, முருகனின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை ஆகியவற்றுக்கு சென்று வழிபடுவது பக்தர்களிடையே பிரபலமாக உள்ளது. இது தீய சக்திகளை அகற்றி, உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு பிடித்த மலர்களான செண்பகம், புரசு, மற்றும் பால், தயிர், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது ஆன்மீக உயர்வை அளிக்கும்.

    குழந்தைகளுக்கு கல்வி ஞானம், இளைஞர்களுக்கு தைரியம், மற்றும் குடும்பத்தினருக்கு நிம்மதி தருவதாக முருகன் வழிபாடு கருதப்படுகிறது. ஆன்மீக நிபுணர்கள், “முருகனை மனதார வணங்கினால், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும்,” என்கின்றனர்.

  • Worship of the ancestral deity: On which days does worshiping yield the best results?

    சில குடும்பங்கள் தொடர்ச்சியான சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றன. இவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று முறையாக வழிபாடு செய்யும்போது, அவர்களின் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணரலாம்.

    எனவே, முடிந்தவரை மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. ஆனால், சிலரால் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். இவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டில் குலதெய்வத்தை மனதில் நினைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

    எல்லா நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றவை என்றாலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மிகவும் உகந்தவை என ஆன்மிக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நாட்களில் கோயிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு பிடித்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

    அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் செல்ல முடியாதவர்கள், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.

    குலதெய்வத்தின் தன்மைக்கு ஏற்பவும் குறிப்பிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்தவை:

    • சிவபெருமான் அல்லது முனீஸ்வரர் போன்ற சிவனுடன் தொடர்புடைய தெய்வங்கள் குலதெய்வமாக இருந்தால், திங்கட்கிழமை வழிபாடு மிகவும் பொருத்தமானது.

    • முருகன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால், செவ்வாய்க்கிழமை வழிபடுவது சிறந்தது.

    • பெருமாள் தொடர்புடைய குலதெய்வங்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகள் உகந்தவை.

    • அம்பாள் போன்ற தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு மிகுந்த ஆன்மிக அருளை வழங்கும்.

    குலதெய்வ வழிபாட்டின் மூலம் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் தடைகளைத் தாண்டுவதற்கான ஆற்றல் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

     

  • “Karuppu Swami, who appears as a stone and acts as a guard”!,

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாவலடி கருப்பசுவாமி திருக்கோவில் உள்ளது.    முற்காலத்தில் வணிகர்கள் சிலர் ஊர் ஊராகச் சென்று' தங்களது வணிகத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இரவு நேரம் ஆகிவிட்டது. இதனால் வழிப்பறி கொள்ளையர்களுக்கு, பயந்து அன்று இரவு மட்டும் இப்பகுதியிலேயே தங்க முடிவு செய்து.

    அங்கிருந்த நாவல் மரத்தடியில்'தங்கினார் அப்போது தங்களிடம் இருந்த பொற்காசுகளை கள்வர்களுக்கு பயந்து பூமியில் குழி தோண்டி அதில் புதைத்து வைத்துவிட்டு, அதன் மீது படுத்து உறங்கினர் பொழுது விடிந்ததும், சொந்த ஊர் திரும்புவதற்காக புதைக்கப்பட்ட பொற்காசுகளை எடுப்பதற்காக மீண்டும் குழி தோண்டிய போது அதன் மீது சிறிய கல் ஒன்று இருப்பதை கண்டு, அக்கல்லை எடுக்க முற்பட்டனர். ஆனால்' அதனை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அப்போது வணிகர் ஒருவரின் உடலில் இறங்கிய கருப்பசுவாமி, தான் சுயம்புவாக தோன்றியுள்ளதாகவும், இந்த இடத்திலேயே தங்கி கிராம மக்களுக்கு துணையாக நின்று அருள் புரிய விரும்புவதால், கல் இருக்கும் இடத்தை சுற்றி கோவில் கட்டுமாறு, அருள்வாக்கு கூறியுள்ளார்.

    அதன்படியே கிராம மக்கள் அவ்விடத்தில் அருள்மிகு ஸ்ரீ கருப்புசாமிக்கு திருக்கோவில் கட்டி இன்று வரை வழிபட்டு வருகின்றனர். நாவல் மரத்திற்கடியில் நின்று கருப்புசாமி கோவில் கொண்டதால்' காவல் தெய்வத்திற்கு' “நாவலடியான்” என்ற திருப்பெயரும் உண்டு. கருவறையில் ஸ்ரீ கருப்புசாமி முதன்மை கடவுளாக காட்சி தருகிறார். தாயார் அருள்மிக ஸ்ரீ செல்லாண்டியம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு செல்லமாக வேண்டிய வரங்களை அள்ளித் தருகிறாள்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Krishna sleeping in the cradle”  Devotees singing lullabies!

    கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி அருகே கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது.13 ஆம், நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட' ஆதித்தவர்மன் என்ற அரசன் தன் கனவில் குழந்தை வடிவில் கிருஷ்ணன் பானையில் உள்ள வெண்ணையை திருடி தின்பது போன்று' கனவு  கண்டதின் பலனாக இங்கு'அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ணன், என்ற திருப்பெயரில் கோவில் கட்டியுள்ளான்.

    கருவறையில் குழந்தை வடிவில் நின்ற திருக்கோளத்தில்'  இரு கரங்களிலும், வெண்ணெயை ஏந்தி நிற்கும் பாலகிருஷ்ணனை, இரவு நேர வழிபாட்டின் போது, பக்தர்கள்  வெள்ளித் தொட்டிலில் தாலாட்டுபாடி  தூங்க வைக்கும் வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பரந்தாமனுக்கு நெய்வேதனம் செய்யப்பட்ட, வெண்ணெய், பால் ஆகியவை பக்தர்களுக்கு' பிரசாதமாக வழங்கப் படுகிறது. பாலகிருஷ்ணனை, தொடர்ந்து மூன்று அஷ்டமி, அல்லது ரோகிணி நட்சத்திர தினத்தில் வெண்ணெயுடன் வந்து வழிபட்டால்' குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுயம்பு திருமேனியாக  கிருஷ்ணன் அவதரித்த இடம் என்பதால் இப்பகுதி கிருஷ்ணன் கோவில் ஊர் என அழைக்கப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “The Blessed Lord Krishna” carrying butter in both hands

    மதுரை வடக்கு மாசி வீதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் உள்ளது. இங்கு இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய திருக்கோளத்தில் நவநீத கிருஷ்ணன்  சத்தியபாமா, ருக்மணி தாயார் ஆகியோருடன் அருள் பாவிக்கிறார்.

    வசீகரத் தோற்றத்துடன் காணப்படும் பரந்தாமனின் பேரழகை காண கண் கோடி வேண்டும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் வடக்கு கோபுர திசையில் அருள் புரியும் இக்கோவிலானது நாடிவரும் பக்தர்களின் குறைகளை மீனாட்சி யின் பேரருளால் நீங்க செய்துவிடும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்