Author: லிங்கேஷ்

  • Vishnu Gayathri Manthiram

    விஷ்ணு காயத்ரி மந்திரம் :

    ஓம் நாராயணாய வித்மஹே

    வாசுதேவாய தீமஹி

    தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

    ஆபத்துகளில் இருந்து விடுபட தினமும் விஷ்ணு காயத்ரி மந்திரத்தை சொல்லி வர வேண்டும். ஆபத்துகள் மட்டும் அல்ல பாவங்களும் உங்களை விட்டு அகலும். அதுமட்டுமல்ல நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள். 
     

  • Kadavulidam Varam Peruvadhu Eppadi

    ஆழ்ந்த பக்தியுடையவர்கள் படைத்த கடவுளையும் கட்டிப்போடலாம். வரம் கேட்கலாம். அந்த வரங்களைக் கேட்குமுன் எவற்றையெல்லாம் சிந்தித்து கேட்கவேண்டும் என்பதை மகாபாரதம் விளக்குகிறது.

    மகாபாரதத்தில் கௌரவர்களுடன் விளையாடிய சூதாட்டத்தில் தோற்றதால் பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் கழிக்க நேர்ந்தது.

    இது முடிந்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பாண்டவர்கள் திரும்பப்பெற விரும்பினார்கள். ஆனால் அதைத் தருவதற்கு துரியோதனன் விரும்பவில்லை. இதனால் பஞ்ச பாண்டவர்களில் பீமனும் அர்ஜுனனும் கடும் கோபம் கொண்டனர். கௌரவர்களிடம் போரிட விரும்பினர்.

    ஆனால் உறவையும் நட்பையும் அமைதியையும் பெரிதும் விரும்பியவன் தர்மன். தங்களது கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துச் சொல்லி தங்களுக்குச் சேரவேண்டிய ராஜ்ஜிய பாகத்தைப் பெறுவதற்கு பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை தூதுவனாக அனுப்ப விரும்பினான்.  அப்போது அவன் மனக்கண்ணில் தோன்றியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன். எனவே, ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்து இப்படிச் சொன்னான்: 

    ''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறேன். துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லையென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி போர் வராமல் தடுத்து தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

    ''தர்மா! நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீங்கள் கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி புறப்பட்டான் கண்ணன்.

    பீமனை கண்ணன் சந்தித்து இதுபற்றி பேசியபோது, "ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் நான் செய்த சபதம் நிறைவேற போர் வந்தே ஆக வேண்டும்" என அவன் கர்ஜித்தான். அதேகருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

    ''அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

    ''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் சகாதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன்'' என்றுவிட்டு கண்ணன் கிளம்பினான்.

    சகாதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன். அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த சகாதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து வரவேற்றான்.

    ''சகாதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்… அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ணன். 

    தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

    ''கண்ணா, கேள்… பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் சகாதேவன்.
     

  • January 23 – Rasi Palangal

    ஜனவரி 23 
    விளம்பி வருடம் – தை 9
    23-ஜன-2019 புதன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    கா    7.06
    நட்சத்திரம்    :    மகம்    இ    1.15
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   முயற்சி 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – பக்தி   
    கடனம் –  ஆரோக்கியம் 
    சிம்மம் – கோபம் 
    கன்னி – சிக்கல் 
    துலாம் –  பணிவு 
    விருச்சிகம் – நலம் 
    தனுசு – நட்பு
    மகரம் – கவலை
    கும்பம் – தெளிவு 
    மீனம் – உற்சாகம் 

  • Subramaniya Swamy Veedhi Ula

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு ஒரு முறை. வீதி ஊர்வலம் வலம் வரும் இரண்டு உற்சவ முர்த்திகள்.

    ஆறு படை வீடுeளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் தைப்பூச திருநாளான இன்று திருக்கோயிலின் உபகோயிலான பழனியாண்டவர் திருக்கோயிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தைபூச சிறப்பு நிகழ்வாக பழனியாண்டவர் சன்னதி உற்சவர் முருகன் தெய்வானையுடனும், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி உற்சவர் சுப்பிரமணியர் – தெய்வானை ஆகிய இரு உற்சவர்களும் இணைந்து கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் ஸ்வாமி வீதி உலா வருவது மிகவும் சிறப்பான நிகழ்வாகும் அதுவும் ஆண்டுக்கு  ஒரு முறை இரு உற்சவர்.  வீதி உலா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
     

  • Palani Thai poosa therottam

    பழனியில் தைப்பூச தேரோட்டம், நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் ஆணையாளர் மற்றும் இணை ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டனர்.

  • January 22 – Rasi Palangal

    ஜனவரி 22
    விளம்பி வருடம் – தை 8
    22-ஜன-2019 செவ்வாய் 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    9.27
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    இ    2.52
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   கவலை 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – கவனம்  
    கடனம் –  நற்செயல் 
    சிம்மம் – உயர்வு 
    கன்னி – அச்சம் 
    துலாம் –  போட்டி  
    விருச்சிகம் – அனுகூலம்  
    தனுசு – பக்தி
    மகரம் – குழப்பம்  
    கும்பம் – செலவு
    மீனம் – பாராட்டு

  • Vallalar thayar illathil

    தை பூசத்தையோட்டி சின்னகாவனம் கிராமத்தில் வசித்த வள்ளலார் தாயார் இல்லத்தில் வள்ளலார் வருவிக்க திருவிழா பக்தர்கள் சார்பில் சிறப்பு பிராத்தனைகளுடன் பொது மக்களுக்கு பசியாற்றுவித்தார் நிகழ்ச்சி நடைபெற்றது 

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் திரு அருட்பிரகாச வள்ளலாரை பெற்றுஎடுத்த தாயார் சின்னம்மையார் பிறந்த கிராமமாகும். 
    வள்ளலார் தனது தாயாருடன் குழந்தை பருவத்தில் 1824முதல் 1827 வரை தாயாருடன் வளர்ந்து வந்தார் வள்ளலாரின் தாயார் வசித்த இடத்தில் பக்தர்கள் சார்பில் வள்ளலார் தாயார் சின்னம்மையார்நினைவு இல்லம் அமைக்கப்பட்டு நாள்தோரும் அன்னதானம் நடைபெற்று வருகின்றன.
    இங்கு ஆண்டு  தை பூச திருநாளில் திரு அருட்பிரகாச வள்ளலார்  அவதரித்தநாளை  பக்தர்கள் சார்பில் வள்ளலார் வருவிக்க திருவிழா கடைபிடிக்க பட்டு அங்குள்ள அமைக்கப்பட்டுள்ள அணைய வள்ளலார்ஜோதி விளக்கு முன்பு திருவருட்பா ஓதுதலுடன்  சிறப்பு வள்ளலார் ஜீவகாருணிய ஒழுக்க பிராத்தனைகளுடன்  பொது மக்கள் அனைவருக்கும்  பசியாற்றுவித்தல்  அன்னதான நிகழ்ச்சியுடன்  தை பூச வள்ளலார் வருவிக்க திருவிழா சிறப்பாக  நடைபெற்றது இவ்விழாவில் சென்னை ,காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த வள்ளலார் மெய் அன்பர்களும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

  • Sabari Malai Nadai Adaippu

    மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு சபரிமலை நடை அடைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை  பிரசித்தி பெற்றது. மகரவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. பொன்னம்பலமேட்டில் தோன்றிய மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்துள்ளனர். ஜனவரி 20ஆம் தேதி மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. இதனை அடுத்து சபரி மலையில் நடை அடைக்கப்பட்டுள்ளது. 

  • Thiruthani Murugan Thai Poosam

    திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர்.

    ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கும் மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

     விழாவை முன்னிட்டு வெளியூர்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பஸ், கார்கள் மலைக்கோயிலில் வந்து குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தைப்பூச விழாவையொட்டி 50 ரூபாய், 100 ரூபாய் சிறப்பு கவுன்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அதுபோல் பொதுவழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

  • Mayilam Thee Middhi Thiruvizha

    திண்டிவனம் அருகே மயிலம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடம்பில் வேல் குத்தியடி காவடி எடுத்துவந்து கோவிலில் வழிபாடு செய்தனர். கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.