இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – பொறாமை
ரிஷபம் – பாராட்டு
மிதுனம் – லாபம்
கடனம் – செலவு
சிம்மம் – நஷ்டம்
கன்னி – உழைப்பு
துலாம் – மகிழ்ச்சி
விருச்சிகம் – நற்செயல்
தனுசு – வெற்றி
மகரம் – நன்மை
கும்பம் – ஜெயம்
மீனம் – ஆதரவு
Author: லிங்கேஷ்
-
Indraya Rasi Palangal
-
Indraya Nalla Neram
ஜனவரி 29
விளம்பி வருடம் – தை 15
29-ஜன-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : நவமி
திதி நேரம் : நவமி இ 8.06
நட்சத்திரம் : விசாகம் இ 8.22
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Archanaiku Ugandha Pookal
கடவுளுக்கு மிக நெருக்கமான விஷயம் பூக்கள். பூக்கள் இல்லாமல் கடவுள் பூஜை நிறைவு பெறுவது இல்லை. அதனால் தான் இறைவனை அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம். எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் குறிப்பிட்ட கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் என்பதே ஐதீகம்.
விநாயகருக்கு, அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். அதேபோல செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே விநாயகர் வழிபாடுக்கு பயன்படுத்தப்படுகிறது.
முருக பெருமானுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் உகந்தவை.
துர்க்கை அம்மனுக்க்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.
அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை செய்யப்படும்விஷ்ணுவிற்கு தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்சனை செய்யப்படும்.
-
Ganapathi Homam Payangal
காரிய தடை நீங்க கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம். கணபதி ஹோமத்தை எல்லா நேரத்திலும் செய்து விட முடியாது. அதிகாலை நேரத்தில், அதாவது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரத்தில் செய்வது தான் கணபதி ஹோமத்திற்கு பலன்களைத்தரும்.
கணபதி ஹோமத்தின் பலன்கள்…
அரசு பதவிகள், ராஜ வசியம் பெற தேன், பால், நெய் கலந்த கலவையை கணபதி ஹோமத்தில் இட வேண்டும். தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
அதேபோல திருமணத் தடை நீங்கவும், வாழ்க்கை வளமோடு இருக்கவும் நெல் பொரி, திருமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும்.நீங்கள் எடுத்துக் கொண்ட காரியம் வெற்றி பெற நெய் அப்பத்தினால் ஹோமம் செய்ய வேண்டும். தொட்டதெல்லாம் ஜெயமாக கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தல் நல்லது. பொருள் வளம் பெற வேண்டுமெனில் கரும்புத் துண்டால் ஹோமம் செய்ய வேண்டும். நெய், தேங்காய்த்துண்டு, சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவல், வாழைப்பழம், வில்வ சமித்து, அருகம்புல், சர்க்கரைப் பொங்கல் இவைகளால் ஹோமம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்தால் கடன் தொல்லை, வறுமையிலிருந்து விடுபடலாம்.
பவுர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கணபதி ஹோமத்தை செய்தால், நாம் வேண்டும் பலன்கள் நிச்சயம் கிட்டும்.
-
January 28 – Rasi Palangal
ஜனவரி 28
விளம்பி வருடம் – தை 14
28-ஜன-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 8.36
நட்சத்திரம் : சுவாதி இ 8.16
யோகம் : அமிர்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – செலவு
ரிஷபம் – வரவு
மிதுனம் – லாபம்
கடனம் – ஜெயம்
சிம்மம் – பயம்
கன்னி – ஆதரவு
துலாம் – உதவி
விருச்சிகம் – பெருமை
தனுசு – போட்டி
மகரம் – ஆக்கம்
கும்பம் – உழைப்பு
மீனம் – மகிழ்ச்சி -
Kumari tpty Kumbabishegam
குமரியில் கட்டப்பட்டு இருக்கும் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் வெகு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது.
விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. 5.25 ஏக்கர் நிலத்தில் ரூ. 22.50 கோடி மதிப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் இன்று நடைபெற்றுள்ளது. அதிகாலை 4 முதல் காலை 7 மணி வரை சுப்ரபாதம், அதனை தொடர்ந்து காலை 7 முதல் 7.30 மணி வரை உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றுள்ளது. அன்பிறகு காலை 7.30 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள் மகா சம்ப்ரோட்ஷணம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி முதல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். . இக்கோயிலுக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஒற்றையால்விளை வழியாக செல்லலாம். மேலும், பக்தர்கள் வசதிக்காக அதிகாலை 5 மணி முதல் மாலை வரை நாகர்கோவில் வடசேரி, களியக்காவிளை, தக்கலை, வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
Selvam tharum Sangu Poojai
தினம் தோறும் சங்கு பூஜை செய்தால் செல்வம் சேரும். பிணிகள் விலகும். சங்கை நீரில் மூழ்கி எடுத்து துடைத்து சந்தனம், குங்குமம், புஷ்பம் சாற்றி சங்கில் தூய நீர் விட்டு இறைவனை பூஜித்து வழிபட வேண்டும்.
இந்த வழிபாடு முடிந்த பின் சிறிது நீரை தலையில் தெளித்துக் கொண்டு, மறு நாள் அந்தச் சங்கு நீரை குடித்துவிட வேண்டும். இந்த சங்கு தீர்த்தம் அருந்துவதால் உங்கள் புகழ் ஓங்கும். சங்கு தீர்த்தத்தால் செய்யப்படும் ஆராதனையானது, பூமா தேவிக்கு மிகுந்த அமைதியை அளிப்பதாக விளங்குகிறது.
இயற்கை சீற்றங்களைக் கூட மாற்றுகிற ஆற்றால் சங்கு ஒலிக்கு உண்டு என்கிறது புராணம். கல்வியும்,செல்வமும், சகல ஐஸ்வர்யமும் பொங்கும், சங்கில் கலைமகளின் கடாட்சியமும், நிறைந்திருக்கிறது. நான் முகனும், கலைமகளும் தம்பதி சகிதமாக அருள் வழங்குகிறார். சங்கிற்கு அருகில் இருக்கும் பொருட்களுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம், பேனா , பென்சில் போன்றவற்றை வைத்து கல்விக்காவும் தொழிலுக்காகவும் பயன்படுத்தினால் எடுக்கும் முயற்சியில் இனிதே வெற்றி கிடைக்கும்.
-
January 27 – Rasi Palangal
ஜனவரி 27
விளம்பி வருடம் – தை 13
27-ஜன-2019 ஞாயிறு
சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி இ 9.33
நட்சத்திரம் : சித்திரை இ 8.36
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நற்செயல்
ரிஷபம் – பாராட்டு
மிதுனம் – வரவு
கடனம் – பிரிவு
சிம்மம் – ஆதாயம்
கன்னி – பக்தி
துலாம் – தனம்
விருச்சிகம் – பேராசை
தனுசு – முயற்சி
மகரம் – அமைதி
கும்பம் – விவேகம்
மீனம் – ஊக்கம் -
sooriyanar Vazhipatta Thalam
சூரிய பகவான் வழிபட்ட தலங்களை பஞ்ச பாஸ்கரத் தலங்கள் என வகைப்படுத்தியுள்ளனர். திருவாரூர் – தலைஞாயிறு, நீடாமங்கலம் – திருப்பரிதி நியமம், ஆடுதுறை – திருமங்கலக்குடி, நன்னிலம் – திருச்சிறுகுடி மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள ஞாயிறு ஆகியவை தான் அவை. சாபம் நீங்க சிவனாரை வழிப்பட்ட தலங்கள் தான் இவை.
ஒருமுறை பிரம்மாவின் சாபத்தால் தொழுநோய் கண்டு சூரிய பகவான் அவதிப் பட்டார். அப்போது சாப விமோசனம் பெறுவதற்கு சிவ பெருமானை எண்ணி சூரிய பகவான் தவம் செய்தார்.
அப்போது 'தாமரை மலர்கள் பூத்திருக்கும் தடாகத்தில் நீராடி, அங்கே தாமரைப் பூவில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளும் சிவனாரை வழிபட சாபம் நீங்கும் என்று அசரீரி ஒலித்தது.
அசரீரி ஒலியை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சூரியனார், அசரீரி சொல்லியபடி, ஞாயிறு தலத்துக்கு வந்து தடாகத்தில் நீராடி, சிவ பூஜை செய்தார். அப்போது, தாமரையில் இருந்து தோன்றிய சிவனார், இவருடைய சாபத்தை நீக்கி அருளினார்.
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் உள்ளது இந்த ஞாயிறு திருத்தலம். சூரிய பகவான் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஊருக்கு ஞாயிறு என்றும், மலரில் வெளிப்பட்டவர் ஆதலால் இறைவனுக்கு ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் என்றும் திருப்பெயர் அமைந்ததாகச் தல புராணம் சொல்கிறது!
சோழ மன்னன் ஒருவன், ஒருமுறை இந்த வழியே வந்த போது, அருகில் உள்ள பகுதியில் சிலகாலம் தங்கினானாம் . அருகில் உள்ள வனத்துக்கு வந்த மன்னன், தாமரை தடாகத்தைக் கண்டு பரவசம் அடைந்தான். சிவ பூஜைக்காக பூக்களைப் பறித்தான். அப்போது ஒரு பூ மட்டும் விலகி விலகிச் சென்றதாம்! பல முறை முயன்றும் அந்தப் பூவைத் தொடக்கூட முடியாததால் ஆத்திரம் கொண்ட மன்னன், கத்தியை எடுத்து மலரை வெட்டினான். அந்தப் பூவில் இருந்து ரத்தம் பீறிட்டது; தடாகம் முழுவதும் ரத்தம் பரவியது. அதிர்ந்த மன்னன், மயங்கிச் சரிந்தான்.
பிறகு மயக்கம் தெளிந்த போது, தனது கண்கள் பார்வையை இழந்து விட்டதை அறிந்து கதறி அழுதான்! தனது தவறை எண்ணி வருந்தியவன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்ட… அந்த நிமிடமே அவன் முன்னே காட்சி தந்த சிவ பெருமான், 'இங்கே… இந்தத் தலத்தில், சூரியன் வந்து வழிபடும் வகையில் ஆலயம் ஒன்றை எழுப்பு!' என்று அருளினார்.
அதன்படி, சிவாலயம் ஒன்றை எழுப்பிய மன்னன், ஸ்வாமிக்கு ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி, வணங்கினான். அம்பாளின் திருநாமம் – ஸ்ரீசொர்ணாம்பிகை; சுவாமியின் வலது புறத்தில் சந்நிதி கொண்டிருக்கிறாள். ஆகவே திருமண பாக்கியம் அருளும் தலம் என்கின்றனர்!
வருடந்தோறும், சித்திரை மாதம் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள், சிவனார் மற்றும் அம்பாள் சந்நிதியில் விழுகின்றன. இந்த நாளில், இறைவனை தரிசிப்பது பெரும்பலன் தரும் என்பது ஐதீகம்.
-
Thriuchendur Uthra varushabishegam
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்தர வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. தை உத்திரம் ஸ்ரீபலி மூலவர் பிரதிஷ்டாதின வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூர்த்திகளுக்கும், விமானங்களுக்கும் கலசாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
வருஷாபிஷேகத்தை ஒட்டி காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 3.30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனையும், 5 மணிக்கு அபிஷேகமும், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து காலை 7 மணிக்கு மகாமண்டபத்தில் தங்ககுடம் கும்ப பூஜை நடந்தது. 8.35 மணிக்கு கோயில் மேல்தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி மற்றும் வள்ளி, தெய்வானை சன்னதி விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.