இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – உதவி
ரிஷபம் – பொறுமை
மிதுனம் – போட்டி
கடனம் – வெற்றி
சிம்மம் – ஆதரவு
கன்னி – அமைதி
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – புகழ்
தனுசு – பிரீதி
மகரம் – பாசம்
கும்பம் – நலம்
மீனம் – சுபம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
Author: லிங்கேஷ்
-
Indraya Rasi Palan
-
Indraya Nalla Neram
ஜனவரி 31
விளம்பி வருடம் – தை 17
31-ஜன-2019 வியாழன்
கரிநாள்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி இ 8.38
நட்சத்திரம் : கேட்டை இ 10.03
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Periyapalayam Amman Maha Kumbabishegam
சென்னை ராயபுரம் அடுத்த அட்டப்பாடி மீனவ கிராமத்தில் உள்ளது பழமையான பெரியபாளையத்தம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் 36 ஆண்டுகள் கழித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று கைலாய வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர் இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யாகசாலை பூஜையில் 40 நாட்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜகள் நடைபெற்றது கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று நான்காம் காலயாக பூஜையில் மஹா பூர்ணாஹீதி நிறைவுபெற்று வேத பாராயணம் முழங்க சிவாச்சாரியார்களால் இராஜகோபுரம் மற்றும் சன்னதி கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
-
Sivan Koilil Kumbabishegam
அறந்தாங்கி கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சமேத விசாலாட்சியம்மன் கோவிலின் கொடிமரம் நடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடிமரம் நடும் நிகழ்ச்சியில் சிவனடியார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி கோட்டை பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் மிகவும் பழைமை வாய்ந்த கோவில் திருப்பணிகள் ஏதும் செய்யபடாமல் சிதிலமடைந்து சுமார் 400 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமலும் இருந்து வந்தது.அப்பகுதி வாழ் மக்களின் முயற்சியால் கோவில் புதுபொலிவு பெற்று வருகின்ற பிப்ரவரி 17ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்க்கு முன்னராக கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கொடி மரமானது இலுப்ப மரத்தில் செய்யபட்டது இதன் உயரம் சுமார் 25 அடி இக்கொடி மரத்தை கிழபனையூர் எனும் பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்டு அறந்தாங்கி முக்கிய வீதிகள் வழியாக கொண்டுவரப்பட்டு வழி எங்கும் பக்தர்களுக்கு தீபாரதனை கட்டபட்டது சிவ பக்தர்கள் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பின்னர் பக்தர்களால் சிவபுராணம் பாட பெற்றது கொடிமரத்திற்க்கு சிறப்பு அபிஷேகங்கள் திபாரதனைகள் செய்யபட்டு நமச்சிவாய எனும் முழக்கங்களுடன் கொடிமரம் நடபெற்றது. வரும் பிப்ரவரி 17ம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.
-
Indraya Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – மேன்மை
மிதுனம் – பாராட்டு
கடனம் – ஆக்கம்
சிம்மம் – பிரீதி
கன்னி – நட்பு
துலாம் – பாசம்
விருச்சிகம் – சினம்
தனுசு – சாதனை
மகரம் – சிந்தனை
கும்பம் – இரக்கம்
மீனம் – இன்பம் -
Suba mhoortha naal
ஜனவரி 30
விளம்பி வருடம் – தை 16
காந்திஜி நினைவு நாள்
30-ஜன-2019 புதன்
சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : தசமி
திதி நேரம் : தசமி இ 8.06
நட்சத்திரம் : அனுஷம் இ 8.58
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Sevvai Gragam
ராசியில் செவ்வாய் கிரகத்துடன் சூரியன் சேர்ந்து இருந்தால் நிறைகுறைகள் சில இருக்கும். உடல் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ற தொழில்களைச் செய்வார்கள். அடிக்கடி தொழில் மாற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையில் யோகம் உண்டு. இவர்கள் உஷ்ணதேக அமைப்பு உடையவர்களாக இருப்பர்.
செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் அவர்கள் கைராசி மிக்கவர்களாக இருப்பார்கள். தாயார் வழியில் சொத்து சேரும். வாக்குபலிதம் உள்ளவர்களாக இருப்பர். உணர்ச்சிவசப்பட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள். நண்பர்களால் அவ்வப்போது பிரச்னைகளை சந்திப்பார்கள்.
செவ்வாய் கிரகத்துடன் புதன் கிரகம் சேர்ந்திருந்தால் விதண்டாவாதம், கூடாநட்பு உண்டாகும். ஸ்திரத்தன்மை அற்றவராக இருப்பார். இவர்களின் உடலில் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஏற்படும். முன்யோசனை இல்லாமல் எதையும் செய்வார்கள்.
இதேபோல செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் சாதக, பாதகங்கள் உண்டு. கலைத்துறையில் இவர்களின் ஜீவனம் அமையும். சாகசச் செயல்களில் வெற்றி அடைவார்கள். முரட்டு பிடிவாதம் அதிகம் இருக்கும். காம இன்பத்தில் மூழ்கிக் கிடப்பார்கள். தகாத சேர்க்கைகள், பழக்கவழக்கங்கள் இருக்கும்.
செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் எதிலும் நிபுணத்துவம் உண்டாகும். வாக்குபலிதம், சாஸ்திர ஆராய்ச்சி, ஜோதிடம், குறி சொல்லுதல், ஆசிரியர் பணி, வக்கீல், நிதி நீதித்துறையில் ஜீவனம் அமையும். பிராமண நேசம், விவசாய நிலங்கள் சொத்து சேர்க்கை உண்டு.
செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் இரும்பு, இயந்திரங்கள் சம்பந்தமான வகையில் ஜீவனம் அமையும். ஏதாவது வழக்கு, பஞ்சாயத்து என்று அலைந்து கொண்டிருப்பார்கள். முரண்பாடான கருத்துகள் இருக்கும். உடல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். சங்கீத ரசனை இருக்கும்.
செவ்வாய் கிரகத்துடன் ராகு சேர்ந்திருந்தால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையும் செய்வார்கள். சினிமா துறையில் ஜீவனம் அமையும். விளையாட்டில் ஆர்வம் இருக்கும். தகாத சேர்க்கை, நீச்ச பழக்க வழக்கங்கள் உண்டாகும்.
செவ்வாயுடன் கேது சேர்ந்திருந்தால் மருத்துவம், ரசாயனம் சம்பந்தமாக படிப்பு, ஜீவனம் அமையும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உண்டாகும். உற்சாகமாக செயல்பட்டாலும் மனச்சோர்வு அடைவார்கள். விவசாய விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.
-
Meenatchi amman koil masi thiruvizha
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்போது மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் ரிஷப உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது அருள்மிகு மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினார்.
கொடியேற்றத்தை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி, அம்மன் கோயில் 2ம் பிரகாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். -
Palani Murugan koil Hundiyal vasool
பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவின்போது பக்தர்கள் ரூ. 2 கோடியே 71 லட்சத்து, 48 ஆயிரத்து 680 ரொக்கமாக காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 627 கிராம் தங்கம், 26,190 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
பழனி முருகன் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை மலைக் கோயிலில் உள்ள உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அந்த வகையில், கடந்த 15 நாள்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ. 2 கோடியே 71 லட்சத்து, 48 ஆயிரத்து 680 ரொக்கமாக காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 627 கிராம் தங்கம், 26,190 கிராம் வெள்ளி மற்றும் 371 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Chandrastama Vilaivugal Thaniya
சந்திராஷ்டமம்….. ஒவ்வொரு ராசிக்கும் எட்டாமிடத்தில் சந்திரம் வரும் பொழுது அதைச் சந்திராஷ்டமம் என்கிறோம். பொதுவாக ஒரு ராசிக்கு சந்திராஷ்டம தினத்தில் மனம் நிலைபாடு இல்லாமல் இருக்கும். அலைச்சல்கள், எதிர்ப்புகள் இருக்கும்.
காரியத்தடை போன்றவற்றால் அவதி உண்டாகும். இதுபோன்று சந்திராஷ்டமத்தின் விளைவுகள் தணிய வலம்புரி சங்குகளில் குங்குமத்தை பூஜித்து, பவனானுக்குரிய மந்திரங்கள் ஓதி நெற்றியில் இட வேண்டும். அரிசியை சங்கில் வைத்து வழிப்பட்டு அதை எடுத்து இருக்கும் அரிசியுடன் சேர்த்து தானம் செய்தாலும் நல்லது.
அதுமட்டுமல்ல தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து பூஜை அறைக்குச் சென்று நேற்று சங்கில் ஊற்றி உள்ள நீரை வீட்டின் வாசல்படி மற்றும் முக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும். சங்கை மலர்களால் அர்ச்சித்து ஓம்,ஓம்,ஓம் என்று கூறி தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.
இதேபோல வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். மறு நாள் சனிக்கிழமை அந்தப் பசும்பாலையும், துளசியையும் சாப்பிட்டு வந்தால் எப்படி நாள்பட்ட வியாதியும் குணமாகும்.
இந்த சங்கு பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வழி பட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் நாடி வரும். தினம் தினம் சங்கு பூஜை செய்பவர் இல்லத்தில் எல்லா எதிர்ப்புகளும் நீங்கி, அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு கிட்டும்.