Author: லிங்கேஷ்

  • Sruttapalli Pallikondeswarar Yaga Salai Poojaigal

    தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா  வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் 100 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள்  மூலம் யாகசாலைகள் பூஜைகள்  நடைபெற்று வருகின்றன.

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துகோட்டை அடுத்த ஆந்திர மாநிலம்  சுருட்டப்பள்ளியில் உள்ளது பள்ளிக்கொண்டேஸ்வர் ஆலயம்.வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் சிவன் லிங்கமாக இல்லாமல் வேறெங்கும் காண முடியாத வகையில் முழுஉருவமாக  பள்ளிகொண்டு காட்சி அளிப்பதால் புண்ணிய ஸ்தலமாக பக்தர்களால் பார்க்க படுகிறது.தற்போது இந்த ஆலயத்தில்  ஸ்ரீ மரகதாம்பிகா ஸ்மேத வால்மிகிஸ்வரர் மற்றும் மங்களாம்பிகா ஸ்மேத பள்ளிக்கொண்டேஸ்வரர் ஆகியோருக்கு வரும் 23ம் தேதி மஹா கும்பாபிஷேக விழாவானது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது.

    இதையொட்டி  ஆலயத்திற்கு எழில்மிகு வண்ணம் தீட்டப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.கும்பாபிஷேக விழாவினை காஞ்சி காமக்கோடி விஜேந்திர சரஸ்வதி சாமிகள் நடத்த உள்ளனர்.இதற்காக நூற்றுக்கும் மேற்ப்பட்ட  சிவாச்சாரியார்கள் ஆலயத்தில் முகாமிட்டு யாக சாலை பூஜைகள் துவக்கியுள்ளனர்.பிரசித்திபெற்ற இந்த ஆலய கும்பாபிஷேக விழாவில் தமிழக மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான   பக்தர்கள் வருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.எனவே ஆலய நிர்வாகம் மற்றும் ஆந்திரா இந்து சமய அறநிலைய துறை சார்பாக பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • January 21 – Rasi Palangal

    ஜனவரி 21
    விளம்பி வருடம் – தை 7
    தைப்பூசம்
    மருதமலை முருகன் தேர்
    21-ஜன-2019 திங்கள் 
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    கா    11.41
    நட்சத்திரம்    :    பூசம்    அ.கா    4.32
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   இன்பம் 
    ரிஷபம் – இறக்கம் 
    மிதுனம் – உயர்வு 
    கடனம் –  நட்பு 
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – அலைச்சல்
    துலாம் –  நஷ்டம் 
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – நற்செயல்
    மகரம் – களிப்பு 
    கும்பம் – சுகம்  
    மீனம் – நலம் 

  • Kandhanukku Ettanai Kavadigal

    தை மாதம் பூச நட்சத்திரம் பௌர்ணமி நாளில் பார்வதி முருகப் பெருமானுக்கு வேல் தந்து அருளிய நாளையே தைப்பூசத் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். பழநியில், தைப்பூசம் பத்து நாட்கள் திருவிழாவாக பல்வேறு சமூகத்தவரும் கலந்து கொண்டாடும், சமத்துவத் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. பழநிக்கு பாதயாத்திரையாக காவடி சுமந்து முருக பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் லட்சக்கணக்கில் குவிவது வழக்கம். பழநிக்கும் காவடிக்கும் நெருங்கின சொந்தம் உண்டு. இங்கே, பழநியில் மலைக்கோயில், இடும்பன் கோயில் என இரு மலைகளுமே காவடிகளாகவே காட்சியளிக்கின்றன. 

    முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்ததே காவடிதான். இதில்தான் எத்தனை வகை! பால்காவடி, பழக்காவடி, பூக்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, கரும்பு, தீர்த்த காவடி என எத்தனையோ! மலைக்கோயில் நவபாஷாண சிலை வடிவான முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர், பால், எண்ணெய், தேன், பழம், விபூதி, சந்தனம், பூ என அனைத்தும் காவடி உருவில்தான் மலைக்குச் செல்கின்றன. 
     
    பக்தர்கள் பரவசத்துடன் காவடி எடுத்து ஆடுவதைக் கண்டால் உடல் சிலிர்த்துப் போகும். வணிகத்தில் வருமானம் ஈட்டிய நகரத்தார் தம் பொருளை பெரும் தானமாக பழநி முருகனுக்கு வழங்கிடவே தைப்பூசத்தில் பாதயாத்திரையாக காவடி சுமந்து வர ஆரம்பித்தனர். இதுவே மிகப் பிரபலமாகி தைப்பூச பாத யாத்திரையாக பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. வீட்டிற்கொரு மயில் தீர்த்தக் காவடி என கடும் விரதமிருந்து, சுமந்து நடைப்பயணமாக பழநி நோக்கி செல்கிறார்கள். வரும் வழியெல்லாம் அன்னதானம், தர்மமென அவர்களுக்கு பண்போடு பக்தி தொண்டு செய்கின்றனர் அந்தந்த ஊர்க்காரர்கள். 

    திரும்பவும் ஊர்சேரும் வரை காவடிகளுக்கு அவர்கள்  காட்டும் பாதுகாப்பு மிகத் தெய்வீகமானது. கொங்கு மண்ணின் மக்கள் காவிரி தீர்த்த காவடியை கடும் வெயிலையும் பாராமல் சுமந்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். தங்கள் மண்ணில் விளையும் பொருட்கள் எல்லாம் எங்கள் குலதெய்வம் மேற்கு நோக்கிய பகவான் முருகனுக்கே என கேரள மக்களும் காவடி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். காவடி தூக்கி வரும் பாலர் முதல் முதியோர் வரை படியேறி மலைக்கோயில் செல்வது பார்க்க அழகாக இருக்கும். 

    பழநியில் ஒவ்வொரு திருவிழாவின் போதும் லட்சக்கணக்கில் படைக்கப்படும் காவடிகள் குவிந்துவிடும். இன்றும் முருக பக்தர்கள் இல்லத்திலும் பரம்பரை சொத்தாக  பழம்பெரும் காவடிகள் பத்திரமாக இருப்பதைக் காணலாம். எடப்பாடி பருவத ராஜகுல சமூகத்தினர் முருகப் பெருமானை தம் குலச் செல்வி வள்ளியை மணமுடித்ததால் மாப்பிள்ளை என்ற குடும்பப் பாசத் துடன் குமரனின் பாதணியை தம் தலையில் இரு முடியாக சுமந்து 300 கி.மீ. தூரம் நடந்தே பழநிக்கு சென்று வருகின்றனர்.

     

  • Kavaadi Eduppadhu En

    தைப்பூசம் தினத்தன்று முருகன் தலங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் காவடிகளாக இருக்கும். அதற்கு காரணம், தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான். இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?

    அகத்திய முனிவர் ஒரு தடவை தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.

     
    அகத்திரியின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியா கக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். 
    பழனி தலம் வந்த போது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான். பிறகு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணான்டி யாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பன் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.

    ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடினான். கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான்.

    இதைக்கண்ட அகத்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்தி, சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.

    அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.

  • Thai poosam pada vendiya padalgal

    தைப்பூசத்தன்று முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடினால் துன்பங்கள் நீங்கி வளமான வாழ்வை பெறலாம்.

    தைப்பூசம் அன்று பாடவேண்டிய முருகன் பாடல்
    அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில் 
    ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்

     முருகாஎன்று ஓதுவார் முன்.

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
    குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    தொளைத்த வேலுண்டே துணை.

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
    மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
    வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
    சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

    திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
    பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
    மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
    குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.

    கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
    உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
    தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
    வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

    மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
    வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
    கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க 
    எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

    காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி மேருவையே.

    ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
    ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
    மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!

  • Poosa Natchatiram Kavanikka vendiyadhu

    பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும்.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர். 

    பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம். 

    பூச நட்சத்திரக்காரர்கள் அய்யப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.

  • Thai Poosa Viradha Vazhipadu

    தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது.

    அதாவது சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது ஆற்றல் உச்சம் பெறும். அதுவே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

    தைப்பூசத் தினத்தன்று தான் அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு அம்பிகை ‘வேல்’ வழங்கினார். எனவே தான் முருகனின் அருளைப்பெற விரும்புபவர்கள் தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.

    தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். நோய்கள் ஏதேனும் இருந்தால் விலகி விடும்.

    இதனால் தான் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது முக்கிய இடம் பிடித்துள்ளது. முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.

    ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும், இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன். முருகனை வணங்கினால் எல்லாக்கடவுள்களையும் வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம்.

    தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். இன்று (புதன்கிழமை) தைப்பூச தினமாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான். 

    சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத் தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

    தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

    தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
     

  • January 20 Rasi palangal

    ஜனவரி 20
    விளம்பி வருடம் – தை 6
     பவுர்ணமி 
    குன்றக்குடி முருகன் தேர்
    20-ஜன-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ம    1.51
    நட்சத்திரம்    :    திருவாதிரை    கா    7.31
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பொறுமை 
    ரிஷபம் – ஆக்கம் 
    மிதுனம் – பாசம் 
    கடனம் –  உயர்வு 
    சிம்மம் – விவேகம் 
    கன்னி – அனுகூலம் 
    துலாம் –  தோல்வி 
    விருச்சிகம் – ஆதரவு   
    தனுசு – சிரமம் 
    மகரம் – அசதி 
    கும்பம் – மேன்மை 
    மீனம் – மகிழ்ச்சி 

  • Sivaperuman thiripurathai azhitha naal

    சிவபெருமான் இத்தினத்தில் தான் மும்மலங்களாகிய திரிபுரத்தை சிரித்தே அழித்தார். அதை விரிவாகப் பார்க்கலாம். ஒருகால கட்டத்தில் தாரகாக்ஷன், வித்யுன்மாலி, கமலாக்ஷன் என்ற பெயர்களுடைய மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் பிரம்ம தேவனைக் குறித்து தவம் இருந்து, சிரஞ்சீவித் தன்மை வேண்டினர். ஆனால் பிரம்மனோ அது சர்வேஸ்வரனாகிய சிவபிரானுக்கு மட்டுமே உரித்தது எனக் கூறி, வேறு ஏதாவது கேட்கச் சொன்னார்.

    அதன்படி மூவரும் விண், மண், நடு ஆகிய மூன்று இடங்களிலும் சஞ்சாரம் செய்யக் கூடிய, பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களினால் ஆன அழிவில்லாக் கோட்டைகளைக் கேட்டனர். “தை மாதத்தின் பூச நட்சத்திரத்தின் போது, முப்புரங்களும் ஒரே இடத்திற்கு, ஒரு கணத்தில் ஒரு சிறிய பகுதி நேரத்திற்கு வரும்போது சிவனால் மட்டும் அழிக்கக் கூடியதான கோட்டைகளை வேண்டுமானால் தருகிறேன்’  எனக் கூறி, பிரம்மனும் வரம் கொடுத்தார். மயன் மூலமாக நகரம் நிர்மாணிக்கப்பட்டது. அவற்றுடன் சகலவிதமான போகங்களும் செல்வங்களும் அளித்து, அசுரர்களுக்கு மிகுந்த வீரமும் தைரியமும் கிடைக்க பிரம்மா அருளினார். யாவையும் நிர்மாணித்த மயன் அசுரர்களுக்கு நல்ல புத்திமதிகளையும் செய்தார்.

    “தேவர்களுக்குத் தேவனான சிவனை சிவலிங்க ரூபமாக வழிபட்டு, இறைவனின் அன்பைப் பெறுதல் வேண்டும். வழிபட்டவர்களுக்கு நன்மையும், எதிரிகளுக்கு அழிவையும் தருபவன் சிவன் ஆவான்,” எனக் கூறி பூஜைக்குரிய சிவலிங்கங்களையும் அசுரர்களுக்குக் கொடுத்தார். அசுரர்களும் நியம நிஷ்டைகளுடன் சிவ பூஜை செய்து அவர்களுக்கு வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு தேவர்களையும், தேவிகளையும் அவர்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு, முழு உலகங்களுக்கும் அந்தப் பறக்கும் கோட்டைகளை இறக்கி, அமர்ந்து, அங்கிருந்தவர்களை நொறுக்கி அழித்து, கொடுமை செய்தனர். இதனால் வருத்தமுற்ற விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள் முதலியோர் யாவரும் மேரு மலையில் கூடி, யாகம் செய்வதற்கு முடிவெடுத்தனர்.

    யாகத்தினின்றும் வெளிவந்த பூதங்கள் யாவும், அசுரர்களை அழிக்க முடியாது அழிந்து போயின. தங்களை அழிக்க பூதங்களை ஏவியதால் கோபமடைந்த அசுரர்கள், தேவர்கள் யாவரையும் மேலும் மேலும் துன்புறுத்தினர். அதனால் தேவர்கள் பயந்து இங்குமங்கும் அலைந்து ஓடி ஒளியும் நிலைமைக்கு ஆளாயினர். மீண்டும் திரிபுராதியர்கள் நியம நிஷ்டையுடன் செய்த சிவபூஜையினால்தான் வலுவாக இருந்த அவர்களை தோற்கடிக்க முடியவில்லை என எண்ணிய விஷ்ணுவும், பிரம்மாவும், அவர்களை சிவபூஜை செய்யாதிருக்க ஏதாவது தந்திரம் செய்ய எண்ணி, விஷ்ணு புத்தராகவும், பிரம்மன் சீடனாகவும் அவதரித்து, அசுரர்களுக்கு அநாசார போதனைகளைச் செய்து, அவர்களைத் தீவிர சிவ உபாசனைகளினின்றும் வழுவிடச் செய்தனர்.

    ஆனால், திரிபுராதி சகோதரர்கள் மட்டும் இந்தப் புரட்டுக்கு மயங்காது, சிவ பூஜை செய்வதில் தீவிரமாக இருந்தனர். இதைக் கண்டு திடுக்குற்ற நாராயணனும், மற்ற தேவர்களும் மானசரோவர் ஏரிக்குச் சென்று, கழுத்தளவு நீரில் நின்று, ஸ்ரீ ருத்ர மந்திரத்தை ஜெபித்தனர். அதைக் கண்ணுற்ற சிவபிரான் அவர்கள் எதிரில் தோன்றி, “விரஜா ஹோமம் செய்து பெற்ற திருநீறை அணிந்து, பாசு பத விரதத்தை மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும்” எனக் கூறி அருளினார். அப்பொழுது குழந்தை முருகன் தன் தந்தை மடிமீது ஆனந்தத் தாண்டவம் ஆடினார். சிவபிரான் கூறியபடியே அவர்கள் பாசு பத விரதத்தை மேற்கொண்டனர். யுத்தத்துக்கு வேண்டிய ஆயுதங்களையும், தேர், வில், மற்ற அஸ்திரங்கள் போன்றவைகளையும் நந்தி தேவர் மூலமாக சிவபிரான் தேவர்களுக்கு அனுப்பி வைத்தார். பின் தேவர்களும் யுத்தத்திற்கு ஆயத்தமாயினர்.

    மேரு மலையை வில்லாக்கி, ஆதி சேஷனை நாணாக்கி, மகாவிஷ்ணுவை அம்பு முனையாக்கி, வாயுவை அம்பின் தண்டாக்கி, அக்னி தேவனை அம்பின் பின் முனையாக்கி, விந்திய மலையை தேரின் அச்சாக்கி, கேசரி கிரியை அச்சின் குப்பியாக்கி, பூமியை தேரின் ஆசனமாக்கி, ஆகாயத்தை தேரின் உட்புறமாக்கி, சூரிய சந்திரர்களைத் தேரின் சக்கரங்களாக்கி, நான்கு வேதங்களையும் தேரின் முன் குதிரைகளாக்கி, யுத்தத்திற்குத் தயாராயினர். தேவர்களும், அவர்களின் தலைவர்களும் சேனைகளாயினர். நந்தி தேவர் இவ்விவரங்களை சிவபிரானுக்குக் கூற, அவரும் தன் கையில் வில்லையும், அம்பையும் ஏந்தி, தேரின் மீது ஏறினார். ஆனால் ஏறிய உடனேயே தேரின் அச்சு முறிந்து, தேர் பூமியில் அழுந்தியது.

    தேர் மேலும் அழுந்தாதிருக்க திருமால் காளை வடிவம் பூண்டு தேரைத் தாங்கிக் கொண்டார். இதையே அருணகிரிநாதர் தம் திருப்புகழில், “முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா” என வினாயகரை வணங்காததால் வந்த வினையைச் சுட்டிக் காட்டியுள்ளார். விநாயகரை வணங்காத தன் தவறை உணர்ந்து, சிவபிரான் கணேசனை வணங்கி பூஜை செய்த பின், தேரில் அமர, இருபுறமும் வினாயகரும், முருகனும் தங்கள் வாகனங்களுடன் பவனி வர, தேரும் புறப்பட்டது.

    ஆசாரத்தைக் கைவிட்ட அசுரர்களின் செல்வங்கள் யாவும் மறைந்து போயின. குறிப்பிட்ட நேரம் வந்த போது, முப்புரங்கள் யாவும் ஒரே இடத்தில் ஒன்று கூடின. கையில் அம்பின் முனையைப் பிடித்தவாறு சிவபிரான், தன் முக்கண்ணால் முப்புரங்களையும் பார்த்துச் சிரித்து விழிக்க, அவை உடனே சாம்பலாயின. அசுரர்கள் முன்பு சிவபிரானை வழிபட்டதால், அவர்கள் மடியாமல், சிவபிரானின் கருணையினால் சிவ கணங்களாக மாறினர். ஒன்றும் நேராத திரிபுர சகோதரர்களும் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி, சிவபெருமானை தஞ்சம் புகுந்ததால், அவர்கள் சிவபிரானின் துவார பாலகர்களாயினர். திரிபுர சம்ஹாரம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான். 
     

  • Thai Poosam En Kondada padugiradhu

    தை மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி தினம் ஒரு சிறந்த நாளாகும். இத்தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன. இந்நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே. தில்லை வாழ் அந்தணர்கட்கு, இருக்க இடமும், மேரு மலை போன்ற எழுநிலை மாளிகைகளையும், தேர் வரிசைகள், திருக்கோயில் கோபுரங்கள், கனகசபை முதலிய யாவும் செய்வித்து அந்தணர்கள் மூலம் திருவிழாக்களையும் நடத்தி வைத்தான் இரணியவர்மன் என்னும் மன்னன்.

    “தாது மாமலர் முடியாலே’ என்று தொடங்கும் திருப்புகழில்,

    வீறுசேர் வரையரசாய் மேவிய

    மேரு மால்வரை என நீள் கோபுர

    மேலை வாயிலின் மயில் மீதேறிய பெருமாளே… மேற்கண்ட செய்தி தெரிகிறது. ஒருசமயம் பிரம்மனை முருகன் சந்திக்க நேர்ந்த பொழுது, பிரம்மன் முருகன் சிறுவன்தானே என வணங்காது நிற்க, முருகனும் அவரை யார் என்று கேட்க, நான்முகனும் தான் வேதத்திற்கு அதிபதி என்று சொன்னார். முருகன் உடனே பிரம்மனை வேதம் கூறும்படி பணித்தார். பிரம்மனும் “ஓம் என ஆரம்பித்தார். முருகவேள் உடனே ஓம் என்பதின் பொருளைக் கேட்க நான்முகனும் விழிக்க, அவர் குடுமியில் குட்டு விழுந்தது. அதுமட்டுமன்று தொடக்கமே சரியில்லாதபோது பிரம்மதேவன் எங்ஙனம் உலகத்தைப் படைப்பான் என எண்ணி அவரை கந்த வேள் சிறையில் அடைத்தார். இதைக் கண்ணுற்ற சிவபிரானும் இங்ஙனம் கேட்டார்.

    “ஓமென உறைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ

    போமெனில் அதனையின்னே புகலென இறைவன் சொற்றான்”

    முற்றொருங் குணரும் ஆதி முதல்வ கேள் உலகமெல்லாம்.

    பெற்றிடும் அவட்கு நீ முன் பிறருணராத வாற்றல்

    சொற்றதோர் இனைய மூலத் தொல் பொருள் யாருங்கேட்ப

    இற்றென இயம்பலாமோ மறையினால் இசைப்பதல்லால்

    என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னத்

    தன்றிருச்செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும்

    ஒன்றொறு பதத்தின் உண்மை உரைத்தனன்…(கந்த புராணம்)

    தந்தையார் முருகனிடம் “ உனக்கு அப்பொருள் கூற வருமோ? எனக் கேட்ட போது, தம்மாற் கூற முடியும் என்றும், ஒருமுறை தந்தையான சிவபிரான் ரகசியமாகத் தாய் உமையவளுக்கு உபதேசித்த பொழுது, தாம் தாயின் கூந்தலில் ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகக் கூறினார் வடிவேலன். இதை அறிந்த பார்வதியும் குழந்தையாயினும் ரகசியத்தைக் கேட்டதனால் சாபத்திற்கு உள்ளாவான் எனக் கூறியதன் பேரில், முருகனும் சாபம் தீரத் தவம் இருந்தார். அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே.