Author: லிங்கேஷ்

  • Narasimmar Vazhipadu

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

     
    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.
     

  • Sidharukaai Udayungal

    நம் துன்பங்கள் சிதற சிதறுகாய நடையுங்கள். விநாயக பெருமானுக்கு சிதறுகாய் உடைத்தால் நம் தீவினைகளும் சிதறுகாய் போல சிதறும் என்பது ஐதீகம்.  காசியப முனிவரின் மகனாக விநாயகர் மகோற்கடர் என்ற பெயரில் அவதரித்தார். ஒரு நாள் யாகத்திற்கு சென்ற போது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.

    விநாயகர் யாகத்திற்கு கொண்டு சென்ற கலசங்களின் மீதிருந்த தேங்காய்களை அசுரன் மீது வீசி அவனை பொடிப்பொடியாக்கினார்.

    தனக்கு வந்த தடையைத் தேங்காய் வீசி எறிதன் மூலம் தகர்த்ததால், நமக்கு வரும் தீவினைகளும் சிதற சிதறுகாய் உடைத்து விநாயகரை வழிபடும் முறை உருவானது.
     

  • Vinayakar Arukampul

    அருகம்புல் மாலை அணிவித்து காக்கும் கடவுளான விநாயகரின் அருளை பெறலாம்….  

    அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாகியது எப்படி என்பது உங்களுக்கு தெரியுமா?… இந்த கதையை படியுங்கள். 

    அனலாசுரன் என்ற அசுரன் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றி எரித்து விடுவான்.

    விநாயகர் மக்களைக் காக்கும் பொருட்டு அனலாசுரனுடன் போரிட்டார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

    எனவே கோபத்தில் அவனை விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக் கக்கினான்.

    விநாயகரை குளிர்விக்க குடம்குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை.

    உடனே முனிவர் ஒருவர் அருகம்புல்லை தலையில் வைத்து வழிபட்டார். விநாயகரின் எரிச்சல் அடங்கியது.

    அது முதல் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாதது ஆகிவிட்டது.விநாயகரை குளிர்விக்க அருகம்புல் மாலை.
     

  • Srinivasa Kalyanam

    சென்னை ஆன்மீக கண்காட்சியில் சீனிவாச திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    சென்னை அடுத்த வேளச்சேரியில் ஹிந்து ஆன்மிகம்,  சேவை அறக்கட்டளை, பண்புப் பயிற்சி அறக்கட்டளை சார்பில் ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி நடைபெற்றது. 

    கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்த ஆன்மீக கண்காட்சி தொடங்கியது. இதில் ஆன்மிகம், நாட்டுப்பற்றை வலியுறுத்தும் வகையில் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  

    கண்காட்சியின் இறுதி நாளில் வன விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் விருக்ஷ வந்தனம்,  நாக வந்தனம் நடைபெற்றன. அதனை தொடர்ந்து  திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுவாமி எழுந்தருளினார்.

    இதையடுத்து, அங்குரார்ப்பணம்,  தலசுத்தி,  புண்யாவசனம்,  சங்கல்பம், மாங்கல்ய பூஜை, மாங்கல்ய தாரணம்,  அட்சதை போடும் நிகழ்வுகள் நடைபெற்றன. திருப்பதி திருமலை பட்டாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியைத் தரிசித்தனர்.
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஆதாயம் 
    ரிஷபம் – கவலை
    மிதுனம் – சிக்கல்
    கடனம் –  சுகம் 
    சிம்மம் – நன்மை 
    கன்னி – லாபம் 
    துலாம் –  முயற்சி  
    விருச்சிகம் – பக்தி 
    தனுசு – அன்பு
    மகரம் – அச்சம்
    கும்பம் – தனம் 
    மீனம் – போட்டி 
    சந்திராஷ்டமம்    :    மகம்
     

  • Indraya Nalla Neram

    பிப்ரவரி 6
    விளம்பி வருடம் – தை 23
    சந்திர தரிசனம்
    06-பிப்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    அவிட்டம்    கா    9.07
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirunallaru Kumbabishegam

    திருநள்ளாறு கோவிலின் 14 வருடங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நவகிரகத் தலங்களில் முக்கியமானது. சனி பகவானின் மிக முக்கிய பரிகாரத் தலமுமாக திருநள்ளாறு கோயில் இருக்கிறது. 

    இக்கோயிலில் 14 ஆண்டுகளுக்கு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் புதுவை அரசுக்கு கோரிக்கை வந்தது. இந்நிலையில், தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

  • Kundrin meel Kudi kondulla kumaran

    குன்றின் மேல் குடி கொண்டுள்ள குமரன் கோயில்கள் அறுபடை வீடு என அழைக்கப்படுகிறது. பழனி மலையில் முருகன் தண்டாயுதபாணியாக காட்சி் தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முருகனை தரிசிக்க மலைக்குச் செல்ல இரு வழிகள் உள்ளன. யாணை பாதை மூலம் மலைக்கு எளிதாக ஏறமுடியும். நோ் பாதை எனப்படும் மற்றொரு பாதையை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்.

    நாரதர் கொடுத்த ஞானப் பழத்தை பெறுவது யார் என்ற போட்டியில், தாய் தந்தையரை சுற்றினால் உலகத்தை சுற்றியதாக பொருள் எனக்கூறி பழத்தை விநாயகர் பெற்றுவிடுகிறார். இதனால் ஏமாற்றம் அடைந்த குமரன் அனைத்தையும் துறந்து, பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவர் நின்ற இடம் "பழம் நீ "  என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    புராணங்களில் பழனிக்கு பல பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும், பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி என்றும் கூறப்படுகிறது. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானதாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன.

    முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக இருக்குமாம். தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலை க்கு சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டு, பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

    நவபாஷாண முருகன் சிலையை போகர் வடிவமைத்ததே மிக சுவாரசியமான தகவல். தன்னை நாடி வருவோர்க்கு போகர், நவபாஷாணத்தால் ஆன வில்லைகளை அளித்துவந்தார். அதிக வீரியம் உள்ளதால், அதை உண்டவர்கள் உயிரிழந்தனர். எனவே நவபாஷணத்தால் ஒரு சிலையை வடிவமைத்த போகர், அதன் மீது சந்தனத்தை பூசி, அந்த சந்தனத்தை வி்ல்லைகளாக்கி தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்று கூறப்படுகிறது. 

    திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற முருகன் தலங்களில் பழனி ஒன்றாகும். தைப்பூசம் என்றாலே நினைவுக்கு வரும் பழனிக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கானனோர் பல்ேவறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக வருவது வழக்கம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பக்தர்கள் நேர்்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தைப்பூசம் தவிர, பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் விழாக்களும் பழனியில் பிரசித்தம். 

    அறுபடை வீடுகளில் பழனி ஒன்று என்றாலும், பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுத சுவாமி கோயிலே 3-வது வீடு என்று கூறுபவர்களும் உண்டு. இக்கோயிலே திரு ஆவினன்குடி ஆகும். வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவினன்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.

    பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் மீண்டும் ஒரு கன்பிவட ஊர்தி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பழனி போய்விட்டு வந்தால் எங்கே பஞ்சாமிர்தம் என்றுதான் அனைவரும் கேட்பார்கள். அந்த அளவுக்கு பழனி பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்றது. மலை வாழைப்பழம், நாட்டுச் சர்்க்கரை, கற்கண்டு, பேரிச்சம் பழம் மற்றும் தேன் 9ஆகிய 5 பொருட்களும் சேர்ந்த கலவைதான் பஞ்சாமிர்தம். வாசனைக்காக இப்போது பஞ்சாமிர்தத்தில் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது. 

    சாதாரண நாட்களில் 5 லட்சம் ரூ பாய்க்கு விற்பனையாகும் பஞ்சாமிர்தம், விழாக்காலங்களில் 25 லட்சம் வரை விற்பனை ஆகிறது. நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தத்தை தயாரிக்க விஞ்ச் நிலையம் அருகே மையம் ஒன்று உள்ளது. கோயில் சார்பில் பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்ய மலை மேலும், அடிவாரத்திலும் கோயில் நிர்வாகம் சார்பில் தனி ஸ்டால்களும் உண்டு. 

    பழனி கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் கோசாலையில் வளர்க்கப்படும் பசுக்களின் சாணத்தில் இருந்து விபூதி தயாரிக்கப்படுகிறது. தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்வித்து வழங்கப்படும் விபூதியை பிரசாதமாக மட்டுமின்றி, வீட்டு உபயோகத்துக்கும் வாங்கிச் செல்கிறார்கள். 

  • Indraya Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   எதிர்ப்பு 
    ரிஷபம் – தடங்கல்
    மிதுனம் – மகிழ்ச்சி
    கடனம் –  பரிசு
    சிம்மம் – சுகம் 
    கன்னி – தாமதம் 
    துலாம் –  வரவு  
    விருச்சிகம் – சிக்கல்
    தனுசு – சுபம் 
    மகரம் – பயம்
    கும்பம் – நன்மை 
    மீனம் – துணிவு 
    சந்திராஷ்டமம்    :    ஆயில்யம்

  • Indraya Nalla Neram

    பிப்ரவரி 5
    விளம்பி வருடம் – தை 22
    05-பிப்-2019 செவ்வாய் 
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    அ.கா    5.11
    நட்சத்திரம்    :    அவிட்டம்    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்