Author: லிங்கேஷ்

  • Thiruporur Bramorchava kodiyetram

    திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.  
    செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசாமி சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 
    இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. வரும் 22-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. 

    நிகழ்ச்சி நிரல்….
    11-ஆம் தேதி காலையில் தொட்டி உற்சவம், இரவு பூதவாகனம்,
    12-ஆம் தேதி காலை புருஷாமிருகம் உபதேச உற்சவமும், இரவு வெள்ளி அன்ன வாகனமும், 
    13-ஆம் தேதி காலை ஆட்டுக்கிடா வாகன உற்சவம், இரவு வெள்ளி மயில் வாகனம், 
    14-ஆம் தேதி வியாழக்கிழமை காலை மங்களகிரி உற்சவம், இரவு தங்கமயில் வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு ஆகியவை நடத்தப்படும்.
    15-ஆம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு யானை வாகன உற்சவம், 
    16-ஆம் தேதி காலை ரத உற்சவம் எனப்படும் தேரோட்டம், இரவு மங்களாசாசன உற்வசம், 
    17-ஆம் தேதி காலையில் வெள்ளித் தொட்டி உற்சவம், மாலை பரிவேட்டை உற்சவம், இரவு குதிரை வாகன உற்சவம், 
    18-ஆம் தேதி காலை விமான உற்சவம், இரவு சிம்ம வாகனம், ஆறுமுக சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் உற்சவம், 
    19-ஆம் தேதி காலை வெள்ளித் தொட்டி உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி, மாலை தெப்பல் உற்சவம், இரவு குதிரை வாகனம், மெளன உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம், 
    20-ஆம் தேதி புதன்கிழமை மாலை கிரிவலம், இரவு பந்தம்பரி உற்சவம், 
    21-ஆம் தேதி இரவு வேடம்பரி பிரபல உற்சவம் ஆகியவை நடைபெறும். 
    22-ஆம் தேதி இரவு திருக்கல்யாண மயில் வாகன உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது. 
     

  • Thiruthani maasi peruvizha

    திருத்தணி முருகன் கோயில் மாசிப்பெருவிழா இன்று தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.

    முருனனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை 5.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    மாசித்திருவிழாயொட்டி  இன்று அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம், வேல், பச்சைகள் முத்து, அணிவித்து தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற உள்ள மாசித் திருவிழாவில் உற்சவர் கடவுள் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன் சேவைகளில் எழுந்தருளி மலைக் கோயில் ராஜ வீதிகளில் உலா நடைபெறும் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் முருகன் கோயிலுக்கு வருவார்கள்ள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
     

  • Vasantha Panjami viradham

    தமிழகத்தில் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவது போல வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.  

     வசந்த பஞ்சமி நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலைகளைக் கற்றதாகக் கூறப்படுகிறது. 

    இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங்களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். 

    நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள்  கிட்ட  வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. 

    குறிப்பாக மேற்கு வங்கத்தில் வசந்த பஞ்சமி நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவை வைக்கப்படும். குழந்தைகள் அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். 

    குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர். 
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   விருத்தி
    ரிஷபம் – தனம் 
    மிதுனம் – மேன்மை 
    கடனம் –  நலம்
    சிம்மம் – ஓய்வு 
    கன்னி – நன்மை
    துலாம் –  இன்பம் 
    விருச்சிகம் – மறதி
    தனுசு – நிம்மதி
    மகரம் – ஜெயம் 
    கும்பம் – அமைதி
    மீனம் – முயற்சி
    சந்திராஷ்டமம்    : அஸ்தம், சித்திரை

  • Vasantha Panjami Naal

    பிப்ரவரி 10 
    விளம்பி வருடம் – தை 27
    வசந்த பஞ்சமி
    10-பிப்-2019 ஞாயிறு  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    பஞ்சமி    கா    11.21
    நட்சத்திரம்    :    ரேவதி    மா    4.58
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Sabari malai Nadai thirappu

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப்ரவரி 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையான மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படும். 

    இது தவிர மண்டல, மகர விளக்கு சீசன், விஷு மற்றும் ஓணம் பண்டிகை நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு  மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். நிகழ்ச்சியில், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலை வகிக்கிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

  • Thirupathy Perumal arul pera

    திருப்பதி பெருமாளின் முழுமையான அருளை பெற சரியான  வழிமுறை….. 

    திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் நேரே திருமலைக்கு சென்று பெருமாளை மட்டும் வணங்கி திரும்புவது தவறு. 

    வெங்கடாசலபதியின் முழுமையான அருளை நாம் பெற முதலில் பத்மாவதி தாயாரை வழிபட வேண்டும். 

    முதலில் தாயார் வீற்றிருக்கும் திருச்சானூர் கோவிலுக்கு சென்று பத்மாவதி தாயாரை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். 

    பக்தர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு தன் பதியாகிய வேங்கடவனிடம் பத்மாவதி தாயார் சிபாரிசு செய்வதாக ஒரு ஐதீகம்.

     தாயாரை தரிசித்த பின்னர் அன்றைய தினமோ அல்லது அதற்கு மறுதினமோ திருமலை மீது வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும்.

    ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வது சிறந்த பலனைக் கொடுக்கும். 

    நடந்து மலையேற முடியாதவர்கள் வாகனங்கள் மூலமாக மலைக்கு செல்லலாம். 

    திருமலை வந்த பின்பு முதலில் அந்த ஏழுமலையான் இங்கு கோவில் கொள்ள அனுமதித்த, இந்த மலைக்கு சொந்த காரரான ஸ்ரீ ஆதி வராகர் ஸ்வாமியின் கோவிலில் உள்ள புஷ்கரணியில் நீராடி அந்த வராகர் ஸ்வாமியை வழிபட வேண்டும்.

     திருமலையில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசனை தரிசிக்க செல்ல வேண்டும். 

    ஏழுமலையானை தரிசிக்கும் போது அவருக்கு உரிய மந்திரம் தெரிந்தால் அதை சில முறை ஜெபித்த பின்பு உங்களின் கோரிக்கையையோ அல்லது விருப்பதையோ அவரிடம் மனமுருகி பிராத்தனை செய்ய வேண்டும். 

    இப்படி செய்வதன் மூலம் பக்தர்களின் அனைத்து குறைகளையும் போக்கி ஏழுமலையான் அருளிபாலிப்பர் என்பது ஐதீகம்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   வெற்றி
    ரிஷபம் – எதிர்ப்பு 
    மிதுனம் – அசதி
    கடனம் –  சிக்கல்  
    சிம்மம் – வரவு  
    கன்னி – சுகம் 
    துலாம் –  தாமதம் 
    விருச்சிகம் – மகிழ்ச்சி 
    தனுசு – தடங்கல்
    மகரம் – நட்பு 
    கும்பம் – பயம் 
    மீனம் – கவலை
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்,அஸ்தம்

  • Indraya Nalla Neeram

    பிப்ரவரி 9
    விளம்பி வருடம் – தை 26
    திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
    09-பிப்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    கா    10.23
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    ம    3.34
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Kala Sarba Dhosha Poojai

    கால சர்ப தோஷ பூஜைகளுக்காக, செம்பு, ஈயம் மற்றும் வெள்ளி உலோகங்களால் செய்யப்பட்ட தனித்தனி நாகர் வடிவ சிலைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். கால சர்ப தோஷ பூஜை செய்யும் நாள் அன்று, முதலில் நீராடிவிட்டு புத்தாடை உடுத்தி பூஜை செய்யும் இடத்ததை பூக்கள் கொண்டு அலங்கரித்துக்கொள்ளுங்கள். 

    பூஜை செய்யும் பீடத்தில் பூஜைக்கு என ஒரு தட்டை வைக்க வேண்டும். அந்த தட்டில் நீங்கள் வாங்கிய நாகர் சிலைகளை வைத்துக்கொண்டு, மஞ்சளில் விநாயகர் படித்து அதை அரச இலையிலோ அல்லது மாவிலையிலோ வைத்து அந்த பூஜை தட்டில் நாகர் சிலைக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.  

    முதலில், ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே பூஜையை தொடங்க வேண்டும். பின்னர், நாகர் சிலைக்கு தண்ணீர், பால், தேன், மற்றும் இதர அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து முடிக்க வேண்டும். அதனை தொடர்ந்து, நாகர் சிலைக்கு மஞ்சள், சந்தனம் இட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். 

    அதன் பின் விஷ்ணு சகஸ்ரநாமம், நவநாக் ஸ்தோதிரம், ஆகியவற்றை சொல்லிக்கொண்டே தேங்காய் உடைத்து அதில் நெய் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். உடைத்த தேங்காயை நாகர் சிலைக்கு முன்பாக வைத்து, பூஜைக்கு நீங்கள் படைக்க நினைத்த படையல்களால் பழங்களோ, தேங்காயோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களோ அதை அரச இலையில் வைத்து படைத்து சூடன் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும். 

    வழிபாட்டின் போது உங்களது பிரச்னைகளை எல்லாம் மனிதில் நினைத்து பூஜை செய்ய, அதற்கு தீர்வு கிடைக்கும். பூஜை முடிந்ததும், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் ஓடும் ஒரு புன்னிய நதியில் செம்பு மற்றும் ஈயத்தால் ஆன நாகர் சிலையை போட்டு விடுங்கள். வெள்ளி நாகர் சிலையை அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வழங்கி விடுங்கள். 

    இந்த பூஜை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், அர்பணிப்புடனும் செய்தால் கால சர்ப பூஜைக்கான பலன்களாக நீண்ட நாட்களாக அவர்கள் படும் துன்பமும், துயரமும், இன்னல்களும் படிப்படியாக அவர்களை விட்டு விலகும்.