Author: லிங்கேஷ்

  • Valam Tharum Sevvai Viradham

    வாழ்க்கையில் வளம் பெற வேண்டும் என்றால் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு. 

    வாரத்தின் மூன்றாவது நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிழமைக்கு உகந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும். 

     கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். 

    வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுகற வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும்.

    முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும். அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். செவ்வாய்கிழமை பிறந்தவர்களும், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள், ஒன்பது வாரம் இல்லத்தில் விரதம் இருந்து 10 வது வாரம் பலன் தரும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டால், நிலைமை சீராகும். வாழ்வு சிறக்கும்.

  • Thai amavasai Tharpanam

    தை அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்ய கோயில்களில் கட்டுக்கடங்கா கூட்டம் குவிந்துள்ளது. 

    இராமேஸ்வரத்தில் தை  அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித தீர்த்தமாடி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து இராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசத்தில்  தை அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்காணோர் வழிபாடு நடத்தி உள்ளனர்.  தை அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவி கரையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

    திருவள்ளூரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், நோய் தீர்த்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    இந்துகளின் முக்கிய புனிததலமான கன்னியாகுமரியில் முக்கடல்கள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு எள் தண்ணீர்யிட்டு மற்றும் பிண்டங்களை கடலில் கரைத்தும் வழிப்பட்டனர். 
     

  • Indraya Rasi palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   புகழ்
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – பீடை  
    கடனம் –  நன்மை 
    சிம்மம் – அமைதி
    கன்னி – செலவு
    துலாம் –  தாமதம்  
    விருச்சிகம் – ஆதரவு 
    தனுசு – உயர்வு 
    மகரம் – முயற்சி
    கும்பம் – ஆக்கம் 
    மீனம் – பாசம் 
    சந்திராஷ்டமம்    :    பூசம்

  • February 4 Amavasai

    பிப்ரவரி 4 – தை அமாவாசை
    விளம்பி வருடம் – தை 21
    தை அமாவாசை
    04-பிப்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    இ    3.01
    நட்சத்திரம்    :    திருவோணம்    கா    6.28
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Garuda Sevai Vedio

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை பிரமோற்சவ விழா மூன்றாம் நாளான இன்று காலை கருட சேவை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று காலை 5 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோபுர தரிசனமும், தொடர்ந்து கருட வாகனத்தில் உற்சவர் வீதியுலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

    ஐந்தாம் நாளான நாளை மறுதினம் தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி

    சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏழாம் நாளான, 6ம் தேதி காலை தேர் திருவிழாவும், 8ம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. 

    விழா ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோவில் கவுரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.

  • Selvam tharum thai amavasai

    தமிழ் மாதங்களில் வரும் எல்லா அமாவாசை நாட்களும் சிறப்பானவை தான். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசையான நாளை ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

    தை அமாவாசை நாள் அன்று நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யலாம். வழிபாடு முடித்தப்பின்  அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும். 

    தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும். பிதுர் வழிபாட்டில் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. 

    காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். 
     

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   சோர்வு 
    ரிஷபம் – கோபம்  
    மிதுனம் – வரவு   
    கடனம் –  நட்பு
    சிம்மம் – நலம்   
    கன்னி – நன்மை 
    துலாம் –  முயற்சி 
    விருச்சிகம் – வீம்பு 
    தனுசு – அன்பு
    மகரம் – சுகம் 
    கும்பம் – கவலை
    மீனம் – அமைதி
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்
     

  • February 3 Sivarathiri

    பிப்ரவரி 3 – மாத சிவராத்திரி
    விளம்பி வருடம் – தை 20
    03-பிப்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    12.58
    நட்சத்திரம்    :    உத்திராடம்    இ    3.56
    யோகம்    :    அமிர்த யோகம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • perumal Aaradhanai Kodukkum Nanmaigal

    சனிக்கிழமைகளில் பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல. குறிப்பாக சனியின் சங்கடத்திலிருந்து பெருமாள் நம்மைக் காப்பார் என்பத ஜதீகம்.

    பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னிராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது. புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார். ஆகவேதான் புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். 
     
    சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம். சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். 

    அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.

    சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

  • Thai amavasai

    தை அமாவாசை…. நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய முக்கிய நாளாகும். தை அமாவாசை என்பது உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆகம். இதேபோல தட்சணாயண புண்ணிய காலத்தில் வருவது ஆடி அமாவாசை. தை மற்றும் ஆடி அமாவாசைகள் இரண்டும் முக்கியமான அமாவாசை நாள்கள். 

     இந்த அமாவாசை நாள்களில் நமது முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் ஆன்ம பூஜையை ஏற்று, நமது முன்னோர்கள் மகிழ்ந்து நமது துன்பங்களை நீக்கி நன்மை அளிக்கின்றனர்.

    தை அமாவாசை நாள் அன்று தர்ப்பணம் கொடுக்க சில இடங்கள் …. 
    அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் இராமேஸ்வரம், முன்ஜென்மப் பாவங்கள் போக்கும் திருப்புல்லாணி, வேதாரண்யம் கோடியக்கரை, பூம்புகார், இராம – இலக்குவர்கள் பிண்டம் வைத்து வழிபட்ட திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, குடந்தை மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி, குமரிக்கடல் சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறில் உள்ள பஞ்சநதிக்கரை ஆகியவையும் அவற்றின் தீர்த்தங்களும் பிதுர்களின் ஆன்ம பூஜைக்கு உரிய தலங்களாகப் போற்றப்படுகின்றன.

    தமிழகத்தைப்போல் வட இந்தியாவில் காசி, பத்ரி, கயா போன்ற இடங்களும், கேரளத்தில் உள்ள பாரதப்புழா என அழைக்கப்படும் நதி ஓரத்தில் உள்ள ஐவர் மடம் ஆகியவையும் எக்காலத்திலும் சென்று பிதுர் வழிபாடு செய்யும் வகையில் அமைந்துள்ள திருத்தலங்கள்.

    அங்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் வீட்டு அருகில் உள்ள கோயிகளில் அல்லது கோயில் குளத்தில் தர்ப்பணம்