Author: லிங்கேஷ்

  • April 07 2024 Sivarathiri

    ஏப்ரல் 07 – மாத சிவராத்திரி
    சோபகிருது வருடம் – பங்குனி 25
    ஏப் 07, 2024 ஞாயிறு
    மாத சிவராத்திரி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  திரையோதசி அ.கா 3.47
    நட்சத்திரம் :  பூரட்டாதி கா 11.43
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • April 07 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வெற்றி
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     – உயர்வு
    கடகம்         –  சுகம்
    சிம்மம்         –   ஆதரவு
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     லாபம்
    விருச்சிகம்     –  அன்பு
    தனுசு         –     அமைதி
    மகரம்         –    நலம்
    கும்பம்         –      ஆசை   
    மீனம்         –      கீர்த்தி
    சந்திராஷ்டமம்    –       பூசம், ஆயில்யம்

  • Thanjai chitirai festival

    தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்டம் இம்மாதம் 20ம் தேதி  நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக துவங்கியது.கொடிமரம் முன்பு விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், அஸ்திர தேவர் தனி, தனியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தொடர்ந்து நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடியை பக்தர்கள் கைகளில் ஏந்தி வரிசையாக நிற்க சிவாச்சாரியர்கள் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகனங்கள் இசைக்க சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களுடன், ஒதுவார்கள் திருமுறை ஒத நந்தி மண்டபம் முன்பு உள்ள பிரம்மாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு அலங்கார தீபம் காட்டப்பட்டன.

    ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு வழிப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் இந்த மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது. 22ம் தேதி தீர்த்தவாரி நடைப்பெறுகிறது. 23ம் தேதி சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.

  • Thanjai pradhosham

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியும் பெருமானுக்கு ஒன்பது வகையான திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • April 06 2024 Sani pradhosham

    ஏப்ரல் 06 – சனி பிரதோஷம்
    சோபகிருது வருடம் – பங்குனி 24
    ஏப் 06, 2024 சனி
    சனி பிரதோஷம்
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் :  துவாதசி கா 7.41
    நட்சத்திரம் :  சதயம் ம 1.22
    யோகம் : அமிர்த-மரண
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • April 06 2024 Sani Pradhosham

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வரவு
    ரிஷபம்         – ஆசை   
    மிதுனம்     – நலம்
    கடகம்         –  நட்பு  
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     அன்பு  
    விருச்சிகம்     –  லாபம்
    தனுசு         –     உயர்வு  
    மகரம்         –    ஆதரம்  
    கும்பம்         –      சுகம்  
    மீனம்         –      பிரீதி
    சந்திராஷ்டமம்    –       புனர்பூசம், பூசம்

  • Sani pradhosha vazhipadu palangal

    சனி பிரதோஷ வழிபாடு…. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது சனி பிரதோஷம்.

    ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.

  • Sani pradhosha vazhipadu

    சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

    சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் வரக்கூடிய திரயோதசி திதிகள், சனி மஹாப்பிரதோஷம் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் 16.30 முதல் 18.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம், சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

    சனி பிரதோஷ சிறப்பு :

    சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

    இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

    அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.

    நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

    பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப்பொருட்களால் விளையும் பலன்கள் :

    பால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    தயிர் – வளம் உண்டாகும்.

    தேன் – இனிய சாரீரம் கிட்டும்.

    பழங்கள் – விளைச்சல் பெருகும்.

    பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்.

    நெய் – முக்தி பேறு கிட்டும்.

    இளநீர் – நல்ல மக்கட்பேறு கிட்டும்.

    சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்.

    எண்ணெய் – சுகவாழ்வு.

    சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்.

    மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.

  • April 05 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – சுகம்
    ரிஷபம்         – லாபம்  
    மிதுனம்     – நட்பு
    கடகம்         –  பிரீதி
    சிம்மம்         –   அன்பு
    கன்னி         –    ஆசை  
    துலாம்         –     திடம்
    விருச்சிகம்     –  புகழ்
    தனுசு         –     நலம்
    மகரம்         –    அமைதி
    கும்பம்         –      உயர்வு
    மீனம்         –      நற்செயல்
    சந்திராஷ்டமம்    –       திருவாதிரை, புனர்பூசம்

  • April 05 2024 Sarva egadasi

    ஏப்ரல் 05 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – பங்குனி 23
    ஏப் 05, 2024 வெள்ளி
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : துவாதசி
    திதி நேரம் :  ஏகாதசி கா 9.59
    நட்சத்திரம் :  அவிட்டம் ம 2.57
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்