Author: cmsadmin

  • முருகன் வழிபாடு: ஆன்மீக பலன்கள் மற்றும் முக்கியத்துவம்

    சென்னை: தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் ஆன்மீகத்தில் முருகன் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. முருகப் பெருமான், ஞானத்தின் கடவுள், வீரத்தின் அடையாளம், மற்றும் தடைகளை அகற்றும் தெய்வமாக விளங்குகிறார். ஹிந்து புராணங்களின்படி, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகன், கார்த்திகேயன், சுப்பிரமணியன், ஷண்முகன், சரவணன் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். முருகன் வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஆன்மீக நிபுணர்கள் பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    முருகனை வழிபடுவதால், மன அமைதி, தைரியம், மற்றும் ஞானம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, திருமணத் தடைகள், கல்வியில் முன்னேற்றம், மற்றும் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முருகன் அருள் உதவும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக கார்த்திகை நட்சத்திர நாளில், முருகன் கோவில்களில் வேல் வழிபாடு, அபிஷேகம், மற்றும் அர்ச்சனை செய்வது சிறப்பு. தைப்பூசம், பங்குனி உத்திரம், மற்றும் வைகாசி விசாகம் போன்ற பண்டிகைகளில் முருகனை வணங்குவது பக்தர்களுக்கு பெரும் புண்ணியத்தை அளிக்கும்.

    ‘கந்த சஷ்டி கவசம்’ பாராயணம் செய்வது, முருகனின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை ஆகியவற்றுக்கு சென்று வழிபடுவது பக்தர்களிடையே பிரபலமாக உள்ளது. இது தீய சக்திகளை அகற்றி, உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு பிடித்த மலர்களான செண்பகம், புரசு, மற்றும் பால், தயிர், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது ஆன்மீக உயர்வை அளிக்கும்.

    குழந்தைகளுக்கு கல்வி ஞானம், இளைஞர்களுக்கு தைரியம், மற்றும் குடும்பத்தினருக்கு நிம்மதி தருவதாக முருகன் வழிபாடு கருதப்படுகிறது. ஆன்மீக நிபுணர்கள், “முருகனை மனதார வணங்கினால், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும்,” என்கின்றனர்.

  • குலதெய்வ வழிபாடு: எந்த நாட்களில் வழிபடுவது சிறந்த பலனைத் தரும்?

    சில குடும்பங்கள் தொடர்ச்சியான சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றன. இவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று முறையாக வழிபாடு செய்யும்போது, அவர்களின் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணரலாம்.

    எனவே, முடிந்தவரை மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. ஆனால், சிலரால் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். இவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டில் குலதெய்வத்தை மனதில் நினைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

    எல்லா நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றவை என்றாலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மிகவும் உகந்தவை என ஆன்மிக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நாட்களில் கோயிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு பிடித்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

    அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் செல்ல முடியாதவர்கள், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.

    குலதெய்வத்தின் தன்மைக்கு ஏற்பவும் குறிப்பிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்தவை:

    • சிவபெருமான் அல்லது முனீஸ்வரர் போன்ற சிவனுடன் தொடர்புடைய தெய்வங்கள் குலதெய்வமாக இருந்தால், திங்கட்கிழமை வழிபாடு மிகவும் பொருத்தமானது.

    • முருகன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால், செவ்வாய்க்கிழமை வழிபடுவது சிறந்தது.

    • பெருமாள் தொடர்புடைய குலதெய்வங்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகள் உகந்தவை.

    • அம்பாள் போன்ற தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு மிகுந்த ஆன்மிக அருளை வழங்கும்.

    குலதெய்வ வழிபாட்டின் மூலம் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் தடைகளைத் தாண்டுவதற்கான ஆற்றல் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

     

  • கல்லாக தோன்றி காவல் புரியும் கருப்புசாமி” !,

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாவலடி கருப்பசுவாமி திருக்கோவில் உள்ளது.    முற்காலத்தில் வணிகர்கள் சிலர் ஊர் ஊராகச் சென்று' தங்களது வணிகத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இரவு நேரம் ஆகிவிட்டது. இதனால் வழிப்பறி கொள்ளையர்களுக்கு, பயந்து அன்று இரவு மட்டும் இப்பகுதியிலேயே தங்க முடிவு செய்து.

    அங்கிருந்த நாவல் மரத்தடியில்'தங்கினார் அப்போது தங்களிடம் இருந்த பொற்காசுகளை கள்வர்களுக்கு பயந்து பூமியில் குழி தோண்டி அதில் புதைத்து வைத்துவிட்டு, அதன் மீது படுத்து உறங்கினர் பொழுது விடிந்ததும், சொந்த ஊர் திரும்புவதற்காக புதைக்கப்பட்ட பொற்காசுகளை எடுப்பதற்காக மீண்டும் குழி தோண்டிய போது அதன் மீது சிறிய கல் ஒன்று இருப்பதை கண்டு, அக்கல்லை எடுக்க முற்பட்டனர். ஆனால்' அதனை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அப்போது வணிகர் ஒருவரின் உடலில் இறங்கிய கருப்பசுவாமி, தான் சுயம்புவாக தோன்றியுள்ளதாகவும், இந்த இடத்திலேயே தங்கி கிராம மக்களுக்கு துணையாக நின்று அருள் புரிய விரும்புவதால், கல் இருக்கும் இடத்தை சுற்றி கோவில் கட்டுமாறு, அருள்வாக்கு கூறியுள்ளார்.

    அதன்படியே கிராம மக்கள் அவ்விடத்தில் அருள்மிகு ஸ்ரீ கருப்புசாமிக்கு திருக்கோவில் கட்டி இன்று வரை வழிபட்டு வருகின்றனர். நாவல் மரத்திற்கடியில் நின்று கருப்புசாமி கோவில் கொண்டதால்' காவல் தெய்வத்திற்கு' “நாவலடியான்” என்ற திருப்பெயரும் உண்டு. கருவறையில் ஸ்ரீ கருப்புசாமி முதன்மை கடவுளாக காட்சி தருகிறார். தாயார் அருள்மிக ஸ்ரீ செல்லாண்டியம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு செல்லமாக வேண்டிய வரங்களை அள்ளித் தருகிறாள்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • தொட்டிலில் தூங்கும் கிருஷ்ணர்

    கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி அருகே கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது.13 ஆம், நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட' ஆதித்தவர்மன் என்ற அரசன் தன் கனவில் குழந்தை வடிவில் கிருஷ்ணன் பானையில் உள்ள வெண்ணையை திருடி தின்பது போன்று' கனவு  கண்டதின் பலனாக இங்கு'அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ணன், என்ற திருப்பெயரில் கோவில் கட்டியுள்ளான்.

    கருவறையில் குழந்தை வடிவில் நின்ற திருக்கோளத்தில்'  இரு கரங்களிலும், வெண்ணெயை ஏந்தி நிற்கும் பாலகிருஷ்ணனை, இரவு நேர வழிபாட்டின் போது, பக்தர்கள்  வெள்ளித் தொட்டிலில் தாலாட்டுபாடி  தூங்க வைக்கும் வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பரந்தாமனுக்கு நெய்வேதனம் செய்யப்பட்ட, வெண்ணெய், பால் ஆகியவை பக்தர்களுக்கு' பிரசாதமாக வழங்கப் படுகிறது. பாலகிருஷ்ணனை, தொடர்ந்து மூன்று அஷ்டமி, அல்லது ரோகிணி நட்சத்திர தினத்தில் வெண்ணெயுடன் வந்து வழிபட்டால்' குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுயம்பு திருமேனியாக  கிருஷ்ணன் அவதரித்த இடம் என்பதால் இப்பகுதி கிருஷ்ணன் கோவில் ஊர் என அழைக்கப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்தி” அருள் புரியும் நவநீத கிருஷ்ணன்” 

    மதுரை வடக்கு மாசி வீதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் உள்ளது. இங்கு இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய திருக்கோளத்தில் நவநீத கிருஷ்ணன்  சத்தியபாமா, ருக்மணி தாயார் ஆகியோருடன் அருள் பாவிக்கிறார்.

    வசீகரத் தோற்றத்துடன் காணப்படும் பரந்தாமனின் பேரழகை காண கண் கோடி வேண்டும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் வடக்கு கோபுர திசையில் அருள் புரியும் இக்கோவிலானது நாடிவரும் பக்தர்களின் குறைகளை மீனாட்சி யின் பேரருளால் நீங்க செய்துவிடும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • தென்னாங்கூரில் பாண்டுரங்கனை கண்டால் ” துன்பமெல்லாம் நீங்கிவிடும்”!

    திருவண்ணாமலை மாவட்டம், தென்னாங்கூரில் அருள்மிகு ஸ்ரீ  பாண்டுரங்கன் திருக்கோவில் உள்ளது. ஞானானந்தகிரி சுவாமிகள் என்பவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி, தென்னாங்கூரில் தனக்கு கோவில் கட்டும் படி உத்தரவிட்டதாகவும், அதன் காரணமாக பாண்டுரங்கன் இங்கு எழுந்தருளி அருள் புரிகிறார். பிரதான மண்டபம் முழுவதும் கண்ணனின் லீலைகளை சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள், சிற்பங்கள் காணப்படுகிறது, மேலும் மண்டப விமானத்தில் கிருஷ்ணரின் லீலைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

    இங்குள்ள கிருஷ்ணன்  மதன மோகனன் எனவும் அழைக்கப்படுகிறார். கருவறையில்' பாண்டுரங்கன் இடுப்பில் இரண்டு கைகளை வைத்தபடி செங்கல் மீது நின்ற திருக்கோளத்தில் கோலத்தில்' ரகுமாயி தேவியுடன் காட்சி அருள்கிறார். வலது பக்கம்  பாண்டுரங்கன் ரகுமாயி உற்சவமூர்த்திகள், இடப்புறம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளின் விக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள பாண்டுரங்கனின் திருமேனியை கண்டால் உள்ளத்தில் ஓங்கி நிற்கும் துன்பமெல்லாம் நீங்கிவிடும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • வீர ஆஞ்சநேயர் வேண்டுதல்!

    சென்னை கேளம்பாக்கம் – வண்டலூர் இடையே செல்லும் சாலையில் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள கஜகிரி என்ற குன்றின் மீது அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்.108 படிக்கட்டுகள் ஏறி மலை மீது சென்றவுடன். அங்கே  கருணையே வடிவாக அருள் புரியும் வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம், ஏழு சனிக்கிழமைகள் வீர ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சூடி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, மேலும் பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வீர ஆஞ்சநேயரை பக்தியுடன் வழிபட்டு கஜகிரி மலையை கிரிவலம் வந்தால் வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • முதலை வடிவில் முனிவர்!

    கேரள மாநிலம்,காசர்கோடு மாவட்டம், அனந்தபுரா கிராமத்தில்' ஏரியின் நடுவில் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இவரை நாராயணன் என்றும் அழைக்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ஆதி மூலமாக கருதப்படும் இந்த ஏரி கோவில் குகை வழியாக தினமும் ஆனந்த பத்மநாத சுவாமி வந்து செல்வதாக நம்பப்படுகிறது, மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில்' வில்வ மங்கலா என்ற மாமுனிவர் திருமாலை நோக்கி கடும் தவம்  புரிந்துகொண்டு இருந்தபோது.

    அவரது தவத்தை ஏற்று ஒரு நாள் மகாவிஷ்ணு  சிறுவன் வடிவில் அவர் முன் தோன்றினார். அப்போது அந்த சிறுவன் தெய்வீக கடாட்சத்துடன் இருந்ததைக் கண்ட,  வில்வ மங்கலா முனிவர் ' சிறுவனை நோக்கி யார் ? நீ என கேட்டார். அதற்கு சிறுவன் தன்னை யாருமற்ற அனாதை எனக் கூறினான்.  இதனால் இறக்கப்பட்ட  முனிவர் அவனை தன்னோடு, இருக்குமாறு பணிந்தார், அப்போது  சிறுவன்  நிபந்தனை ஒன்றை விதித்தான். எப்போதாவது என் மீது நீங்கள் கோபம் கொண்டால், அடுத்த கணமே' நான் உங்களை விட்டு சென்று விடுவேன்’ எனக் கூற, அதற்கு முனிவரும் உடன்படுகிறார்.

    நாட்கள் சில கடந்த பின் முனிவருக்கு' தொண்டு புரிந்து வந்த அந்த சிறுவன். அதன் பின் தனது சேட்டைகளை காண்பிக்க தொடங்கினான். ஒரு நாள் அவனது குறும்பு எல்லை தாண்டி போனது, இதனால் ஆத்திரம் அடைந்த முனிவர் அவன் மீது கடும் கோபம் கொண்டார். அப்போது அச்சிறுவன் முன்பு தான் கூறியதுபோல, முனிவரிடம் இருந்து விலகிச் செல்வதாகவும்,  இனி தன்னைப் பார்க்க வேண்டும் என்றால், அனந்தன் காட்டில் மட்டுமே காண முடியும் என கூறிவிட்டு உடனே அந்த ஏரி பகுதியில் உள்ள குகைக்கோள் சென்று மறைந்து விடுகிறான். அப்போதுதான், முனிவருக்கு புரிந்தது அந்த சிறுவன் வேறு யாருமல்ல, மகாவிஷ்ணு என உடனே' 
    சிறுவன் மறைந்த தண்ணீர் நிரம்பிய குகையை பார்க்கிறார் முனிவர்.

    அதனுள்  சிறுவனைத் தேடி முதலையாக உருவெடுத்து அந்த குகை வழியே சென்றவர், ஒரு கடற்கரையை கண்டு   வெளியேறி, வனப்பகுதியை  அடைகிறார். அங்கு அவர் முன் தோன்றிய அந்த சிறுவன், சற்று நேரத்தில் ஒரு இலுப்பை மரமாக மாறினான். அந்த இலுப்பை மரத்தின் கிளைகள் விரிந்து அடுத்த வினாடி பாற்கடலில்  சர்ப்பத்தின் மேல் பள்ளிகொண்ட மகாவிஷ்ணுவின் அவதார திருமேனியை கண்டு ஆனந்தம் அலைந்ததாகவும்,  இந்த இடமே தற்போது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோவிலாக மாறிவிட்டது என்கிறது இதன் தல புராணம், மேலும்  வில்வ மங்கலா முனிவருக்கு திருமால் காட்சியை அளித்தமையால், சிறுவனை தேடி செல்வதற்காக அவர் எடுத்த எடுத்த முதலை வடிவத்திலேயே தற்போதும் ஏரி கோவிலில் அவர் வாசம் செய்து வருவதாகவும், பக்தர்களின் நம்பிக்கை அதனை மெய்ப்பிக்கும் வண்ணம், தற்போதும் ஏரி கோவில் குகையில் முதலை ஒன்று உள்ளதையும், அந்த முதலையானது மாமிசங்களை உண்ணாமல் அதாவது ஏரியில் உள்ள மீன்களைக் கூட சாப்பிடாமல், சைவத்தை கடைபிடித்து வழிபாடு முடிந்ததும் நாராயணனுக்கு நெய்வேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை அர்ச்சகர் கொண்டு சென்று' பாபியா (Babia or Babiya) என அழைத்ததும் ஒரு குழந்தையைப் போன்று தண்ணீரில் துள்ளி குதித்து நீந்தி வந்து கரையில் வைக்கப்படும் நெய் வேதனை பிரசாதத்தை உண்டு விட்டு செல்கிறது. இதுவரை ஏரியில் நீராடும் பக்தர்களுக்கு முதலையால் எந்தத் தீங்கும் ஏற்பட்டதில்லை, பல ஆண்டு காலமாக இந்த ஏரியில் ஒரு முதலை மட்டுமே வாழ்ந்து வருகிறது.

    ஒரு முதலை உயிர் நீத்தாள். அதன் உடலை அப்புறப்படுத்திய அடுத்த கணமே அதிசய தக்க வகையில் இன்னொரு முதலை அதன் இடத்தை நிரப்புகிறது. அந்த முதலையும் பாபியா (Babia or Babiya)  என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டான தற்போதும் இங்கு நடைபெற்று வரும் தெய்வீக நிகழ்வு ஞானிகளால் மட்டுமே உணரக்கூடியதாகும். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • குந்தி தேவி வழிபட்ட சிவலிங்கம் 5 நிறத்தில் காட்சியளிப்பது ஏன்” ?

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம்,  திருநல்லூரில்' மகாபாரதத்துடன் தொடர்புடைய பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ   பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மாமன்னன் கர்ணனின் தாயார் குந்தி தேவி தனது பாவம் நீங்க இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு' அத்தகைய சிறப்புக்குரிய இத்திருக்கோவிலுக்கும்

    மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வோம் வாருங்கள்.- 

    மகாபாரதத்தில் பாண்டுவின் மனைவி, பஞ்சபாண்டவர்களின் தாய் என்ற போற்றுதலுக்குரியவர், ப்ரித்தா  இளம் வயதிலேயே' குந்தி அரசன் போஜாவுக்கு' மகளாக தத்து கொடுக்கப்பட்டால், இதன் காரணமாகவே  ப்ரித்தா என்ற இவரின் பெயர் குந்தி தேவி என மாறியது. குந்தி தேவி அரச குடும்ப வழக்கப்படி' துர்வாச முனிவருக்கு சேவை புரிவதற்காகவும்' குருகுல கல்வி பயிலவும். துர்வாச முனிவரின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால்'  அங்கு குரு பக்தியுடன் துருவாச முனிவருக்கு சில ஆண்டுகள் சேவை செய்தாள். அதன் பின் அரண்மனை திரும்பும் காலத்தில்' குந்தி தேவியின் குருகுல சேவையை பாராட்டும் விதமாக துர்வாச முனிவர், குந்தி தேவிக்கு' தெய்வீக கடாட்ச அம்சத்துடன் ஆன'  குழந்தை பெறும்' வரம் தரும் மந்திரத்தை அருளினார். அதன்படி' நீ யாரை மனதில் நினைத்து  இந்த மந்திரத்தை ஜெபிக்கிறாயோ; அவரது அம்சத்துடன் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், என தெளிவு படுத்தினார். அதன்பின் அரண்மனை திரும்பிய குந்திதேவி ஒரு முறை தனது. தோழிகளுடன் நந்தவனத்தில்' விளையாடிக் கொண்டிருந்தபோது. ஆகாய மார்க்கமாக சூரிய தேவன் செல்வதை கண்டால். அப்போது அவளுக்கு துர்வாச முனிவர், தனக்களித்த அரிய வரம் நினைவுக்கு வந்தது அதனை சோதிக்க நினைத்து.

    சூரிய பகவானை மனதில் நினைத்தவாறு மந்திரத்தை ஜெபித்தால்' உடனே ஆண் குழந்தை ஒன்று உருவானது. அப்போது தான்' குந்தி தேவிக்கு அந்த மந்திரத்தின் மகிமை தெரிந்தது, திருமணம் ஆகுவதற்கு முன்பே இப்படி குழந்தை இருந்தால் உற்றார்' ஊராரின் அவ சொல்லுக்கு ஆளாக நேரிடும், என எண்ணி, மரப்பெட்டகத்தில் அந்த ஆண் குழந்தையை வைத்து, அதனுடன் தங்கச் சங்கிலி, தனது சேலை ஒன்றையும் வைத்து, தோழி ஒருத்தி மூலம் அந்த குழந்தையை கங்கை ஆற்றில் மிதக்க விட்டால், அதன்பின் அதிரதன் என்ற தேரோட்டி, காதில் குண்டலமும், மார்பில் கவசத்துடன் பிறந்த அந்த குழந்தையை மீட்டு தனது. சொந்த மகனாக வளர்த்து வந்தார், அந்த தெய்வமகன் தான்' மாமன்னன் கர்ணன். இதனிடையே பெற்ற மகனை அனாதையாக; கங்கை ஆற்றில் வீசி எறிந்த பாவத்திற்கு விமர்சனம் தேட வேண்டி' ஒரு நாள் இது குறித்து துர்வாச முனிவரிடம் பேசிய குந்தி தேவி, எந்த தாயும் செய்ய துணியாத பாவத்தை செய்த தனது பாவம் நீங்குவதற்கு பரிகாரம் உள்ளதா என கேட்டால்' அதற்கு துர்வாச முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடல்களில் நீராடி, சுயம்பு சிவலிங்கத்தை பூஜித்து உன் பாவத்தை நிவர்த்தி செய்துக்கொள் என  கூறியுள்ளார்.ஒரே நாளில் எப்படி ஏழு கடலில் நீராட முடியும் என்று கவலையுடன் இறைவனை வேண்டினாள். குந்தி தேவி அப்போது விண்ணிலிருந்து கேட்ட அசரீரியில் ' திருநல்லூர் தளத்தில் ஒரு புனித தீர்த்தக்கேணி இருக்கிறது. அதை ஏழு கடலாக நினைத்த நீராடு' என அந்த குரல் கேட்டுள்ளது அதன்படி' மாசி மகம் அன்று சாப விமோசனம் பெறுவதற்கு குந்தி தேவி அந்த புனித தீர்த்தக் கேணியில் நீராடி சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம், கருவறையில் அருள் பாவிக்கும் இறைவனின் திருப்பெயர் அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர், உற்சவர், கல்யாண சுந்தரேஸ்வரர், தாயார் அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுந்தரி, கிரி சுந்தரி, 
    ஈசன் வன குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார்.

    இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அரியதொரு வடிவமாக. தினமும்   தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகதப்பச்சை தவிர இனம் கண்டறிய முடியாத மேலும் ஒரு நிறம் என ' ஐந்து நிறமாக காட்சியளிப்பது உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசய நிகழ்வாகும். இது ஐந்து பஞ்சபூதங்களையும், பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேரையும் குறிப்பதாக அமைந்துள்ளது இதன் பொருள் கர்ணனைத் தவிர்த்து இனி உனக்கு ஐந்து பிள்ளைகள் மட்டும்தான் என மூத்த மகன் கர்ணனின் நிலை குறித்து சூட்சகமாக இறைவன் குந்தி தேவிக்கு உணர்த்தியதாகவும் நம்பப்படுகிறது.
    காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36க்கு மரகதப்பச்சை நிறத்தில்  இந்த சிவலிங்க திருமேனி காட்சி தருகிறது. லிங்கம் மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காணப்படும் இதை காண கண் கோடி வேண்டும். கோவிலில் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

    இதில் குந்தி தேவி நீராடியதால்' அந்த தீர்த்தக்கேணியானது "சப்த சாகர தீர்த்தம்" என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம், வில்வம், இதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஒருமுறை கைலாயத்தில் ஆதிசேடனுக்கும் வாயு பகவானுக்கும் இருவருக்குள் யார் வலிமையானவர்  என்பதில் போட்டி ஏற்பட்டது. அப்போது ஆதிசேடன் கைலாய மலையைத் தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக்கொள்ள,  வாயு பகவான் தனது வலிமையை வெளிப்படுத்த  மலையை அசைக்க முயன்று பலத்த சூறாவளி புயல் காற்றை வீசினார். இந்த இருவருக்கிடையே ஏற்பட்ட போட்டியால்  தேவர்கள், முனிவர்கள், கந்தவர்கள் அஞ்சு நடுங்கினர். அப்போது அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேடன் தனது பிடியை தளர்த்திக் கொண்டார்.

    இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த வாய்வு பகவான் கைலாய மலை சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில்' திருநல்லூரிலும், மற்றொன்றை அதன் அருகிலுள்ள ஆவூரிலும் வீசினார்.  நல்லூரில் விழுந்த அந்த மலைச்சிகரமே  அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள குன்றாகும். இதனால் தென் கயிலாயம் எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது, அருணகிரிநாதர் திருப்புகழில் இங்குள்ள முருகனை பாடியுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.மாசி மகம் அன்று குந்தி தேவி நீராடிய புனித தீர்த்தக்கேணியில் நீராடினால் ஏழு கடல்கள் நீரும் பெருக்கெடுத்து நம் பாவங்களை போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, 

    பொன்.கோ. முத்து திருவள்ளூர்

  • “மோகினி அவதாரம் எடுத்து கிருஷ்ணன் என்ன செய்தான் ?

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் உள்ளது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டது. அந்தப் போரில் பஞ்சபாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், போருக்குச் செல்வதற்கு முன்பாக' யுத்த தேவதையின் ஆசியைப் பெற  களப்பலி கொடுக்க வேண்டும் என்பது ஐதீகம், அதன்படி   32 சாமுத்திரிகா லட்சணம் உடைய ஆண் மகன் வேண்டும். அதற்கு ஏற்ற வடிவத்துடன். அர்ச்சுனன், கிருஷ்ணன் மற்றும் நாகக்கன்னிக்கும், அர்ச்சுனனுக்கும், பிறந்த அரவான் ஆகியோர் மட்டுமே'இதில் கிருஷ்ணன், அர்ஜுனன் ஆகிய இருவரும் பாரத போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும். இழக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டபோது, அரவானை பலியிட முடிவு செய்து.

    கிருஷ்ணனும், அர்ச்சுனனும் இது குறித்து அரவானிடம் தெளிவாக பேசி பலியிட சம்மதம் பெற்றனர். அப்போது அரவான்  ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வைத்தார். அதாவது "என் இறுதி ஆசையாக திருமண வாழ்க்கையை அடைய வேண்டும்.  அதன் பிறகு பலிக்களம் செல்வேன்" என கூறினார். ஆனால்' பொழுது விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனை மணக்க எந்த பெண்தான் சம்மதிப்பாள் அரவானை கணவனாக ஏற்க, பெண்கள் எவரும் முன்வரவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாண்டவர்களின் நலன் கருதி கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். அன்று இரவு தாம்பத்ய உறவு முடிந்தபின்.  மறுநாள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அரவானை கணவனாக ஏற்றுக்கொண்ட மோகினி, விதவைக் கோலம் பூண்டாள். அதன் பிறகு பாரத போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். என்பது தான்   அரவான் எனப்படும் கூத்தாண்டவரின் வாழ்க்கை வரலாறு' இதன் காரணமாகவே தங்களை மோகினி ஆக' எண்ணிக்கொண்டு. திருநங்கைகள், கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் போது.

    திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து முடிந்தபின். அன்று  இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவர், அதன் பிறகு சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அங்குள்ள நீர்நிலைகளில் குளித்து முடிந்தபின் வெள்ளை நிற சேலை அணிந்து கொண்டு துக்கத்துடன்  தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். தர்மம் தலைக்க பாரதப்போரில் தனது உயிரை பலிக்களம் கொடுத்த' அரவானை கணவனாகவும், கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்ததால், தங்களை மோகினியாக என்னும் திருநங்கைகள் கூத்தாண்டவரை
     தங்களின் குல தெய்வமாக வணங்குகின்றனர். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்