கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் உள்ளது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டது. அந்தப் போரில் பஞ்சபாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், போருக்குச் செல்வதற்கு முன்பாக' யுத்த தேவதையின் ஆசியைப் பெற களப்பலி கொடுக்க வேண்டும் என்பது ஐதீகம், அதன்படி 32 சாமுத்திரிகா லட்சணம் உடைய ஆண் மகன் வேண்டும். அதற்கு ஏற்ற வடிவத்துடன். அர்ச்சுனன், கிருஷ்ணன் மற்றும் நாகக்கன்னிக்கும், அர்ச்சுனனுக்கும், பிறந்த அரவான் ஆகியோர் மட்டுமே'இதில் கிருஷ்ணன், அர்ஜுனன் ஆகிய இருவரும் பாரத போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும். இழக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டபோது, அரவானை பலியிட முடிவு செய்து.
கிருஷ்ணனும், அர்ச்சுனனும் இது குறித்து அரவானிடம் தெளிவாக பேசி பலியிட சம்மதம் பெற்றனர். அப்போது அரவான் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வைத்தார். அதாவது "என் இறுதி ஆசையாக திருமண வாழ்க்கையை அடைய வேண்டும். அதன் பிறகு பலிக்களம் செல்வேன்" என கூறினார். ஆனால்' பொழுது விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனை மணக்க எந்த பெண்தான் சம்மதிப்பாள் அரவானை கணவனாக ஏற்க, பெண்கள் எவரும் முன்வரவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாண்டவர்களின் நலன் கருதி கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். அன்று இரவு தாம்பத்ய உறவு முடிந்தபின். மறுநாள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அரவானை கணவனாக ஏற்றுக்கொண்ட மோகினி, விதவைக் கோலம் பூண்டாள். அதன் பிறகு பாரத போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். என்பது தான் அரவான் எனப்படும் கூத்தாண்டவரின் வாழ்க்கை வரலாறு' இதன் காரணமாகவே தங்களை மோகினி ஆக' எண்ணிக்கொண்டு. திருநங்கைகள், கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் போது.
திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து முடிந்தபின். அன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவர், அதன் பிறகு சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அங்குள்ள நீர்நிலைகளில் குளித்து முடிந்தபின் வெள்ளை நிற சேலை அணிந்து கொண்டு துக்கத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். தர்மம் தலைக்க பாரதப்போரில் தனது உயிரை பலிக்களம் கொடுத்த' அரவானை கணவனாகவும், கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்ததால், தங்களை மோகினியாக என்னும் திருநங்கைகள் கூத்தாண்டவரை
தங்களின் குல தெய்வமாக வணங்குகின்றனர்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்