Author: cmsadmin

  • புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது எப்படி?

    புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று ஏழுமலையானை வணங்கலாம்.

    இல்லையேல் 108 திவ்ய தேசங்களில் ஏதேனும் ஒன்றில் சென்று பெருமாளை வணங்கலாம். அல்லது, வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

  • ஆன்மீக வழிபாடுகள் நிறைந்த புரட்டாசி மாதம்…

    புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறலாம்.
    இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்., மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர்.
    பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது.

  • புரட்டாசி ….பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்

    தமிழ் மாதமான புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவது இந்துக்களின் மரபு. புரட்டாசி மாதமானது சனிக்கிழமை பிறந்திருப்பதால் பெருமாளை தரிசிப்பது மிகுந்த விஷேசமாக பக்தர்கள் கருதுகின்றனர். அதன்படி சனிக்கிழமை அதிகாலை பெருமாள் திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
    பக்தர்கள் துளசி, அருகம்புலம் மாலைகளையும், பூக்களையும் வாங்கி பூஜை செய்தனர். பூஜைக்குப் பின்னர் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
    பக்தர்கள் நெரிசலை தீர்த்து அவர்களை முறைப்படுத்திச் செல்ல கம்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதில் வரிசையாக சென்றனர்.

  • நாமக்கட்டிகள் தயாரிக்கப்படுவது எப்படி?

    புரட்டாசி மாதம் என்றாலே வீடுகளில் சனிக்கிழமைகளில் பெருமாளை கும்பிடுவது தான் ஞாபகத்திற்கு வரும். பெருமாளுக்கு சிறப்பு நெற்றியில் பளிச்சென இடப்படும் நாமம். இந்த நாமக்கட்டிகள் தயாரிக்கப்படுவது எப்படி?
    நாமக்கட்டி தயாரிப்பில் புகழ் பெற்று விளங்குவது ஜடேரி கிராமம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது இந்த கிராமம்.. நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப் படும் மண், தென்பூண்டிப்பட்டு என்ற கிராமத்தில் கிடைக்கிறது. அதை வெட்டி எடுத்து வந்து உடைத்து, செக்கு இழுப்பதைப் போன்று மாடு கட்டி இழுத்து பவுடராக மாற்றுகின்றனர். அதன் பிறகு, அதனை தண்ணீரில் கரைத்து, ஓரிரு நாட்களில் கழிவுகள், கீழே படிந்த உடன், மேலே இருக்கும் ‘பாலை’ மட்டும் பிரித்து தொட்டி யில் ஊற்றுகின்றனர். அவ்வாறு செய்யும்போது, நாமக்கட்டி தயாரிப்புக்கு உகந்த மண் கிடைத்துவிடுகிறது. அதனை வெயிலில் பதப்படுத்தி காய வைத்து, நாமக்கட்டி தயாரிப்பதற்கான பக்குவத்துக்கு கொண்டு வருகின்றனர். அதன்பிறகு மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது சிறு, சிறு உருண்டைகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு நாமக் கட்டிகள் நன்கு காய்ந்த பிறகு வைக்கோல் போட்டு மூட்டை மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு வைக்கின்றனர்.
    இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, திருப்பதி உட்பட நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடு களுக்கும் வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

  • சிதம்பரம் கோயிலில் ருத்ர ஆவர்த்தி ஹோமம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ருத்ர ஆவர்த்தி ஹோமம் விமர்சையாக நடைபெற்றது.
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை, அமைதி வேண்டி, லட்ச ருத்ர பாராயணம் மற்றும் கோடி அர்ச்சனை ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது.

    இதனை அடுத்து தினமும் 100 தீட்சிதர்கள் பங்கேற்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ருத்ர மந்திரத்தை 22 முறை பாராயணம் செய்தனர். வில்வ அர்ச்சனையும் நடைபெற்றது.

    நடராஜர் சன்னிதியில் பணம், தங்க நகைகள் வைக்கப்பட்டு தனபூஜை நடைபெற்றது. செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெற்றது.
    முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஹோமத்தையொட்டி கோயிலின் பொற்கூரை போன்ற வடிவிலான பிரமாண்ட யாகசாலையில் 9 யாக குண்டங்கள் அமைத்து, நடராஜமூர்த்திக்கு 1,008 கலசங்கள், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கு 1,008 கலசங்கள் வீதம் மொத்தம் 2,016 கலசங்கள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு குண்டத்துக்கும் 12 ஆச்சாரியர்கள் ருத்ர மந்திரத்தைக் கூறி ஹோமம் செய்தனர். மாலையில் ஆவர்த்தி ஹோமம் நிறைவடைந்தது.

    இதையடுத்து யாக சாலையிலிருந்து கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஆவணி மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

  • திருப்பதியில் நன்கொடை வழங்குபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு….

    நன்கொடை தருவோருக்கு, இரு நாட்களில், டிஜிட்டல் பாஸ்புக் வழங்கும் சேவையை, திருப்பதி தேவஸ்தானம் துவக்கி உள்ளது.
    நன்கொடை வழங்கும் பக்தர்களிடம் இருந்து டிடி அல்லது செக் மூலம் நன்கொடை பெறவேண்டும். வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நன்கொடை பெற அதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டும்.

    நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 48 மணி நேரத்தில் இ-பாஸ் புத்தகம் வழங்கவேண்டும். அவர்களுக்கு நன்கொடை பிரிவு அலுவலகத்தில் சலுகைகளை பெற வழிகாட்டவேண்டும். என கடந்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நன்கொடை தருவோருக்கு, இரு நாட்களில், டிஜிட்டல் பாஸ்புக் வழங்கும் சேவையை, திருப்பதி தேவஸ்தானம் துவக்கி உள்ளது. திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலம், நன்கொடை வழங்குவோரின் விபரங்களை பதிவு செய்து, உடனே ரசீது வழங்கி, அவர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவையை, தேவஸ்தானம் துவக்கி உள்ளது. நன்கொடை பெறப்பட்ட, 48 மணி நேரத்திற்குள், நன்கொடையாளர்களுக்கு, ‘டிஜிட்டல் பாஸ்புக்’ வழங்கப்படும். ‘பாஸ்புக்’ பெற்ற பின், ஏழுமலையான் தரிசனம், வாடகை அறை, கூடுதல் லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை, வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • திருச்சானூரில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது….

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது.
    திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில், பக்தர்கள், கோயில் ஊழியர்களால் ஏற்பட்ட தோஷங்களை களையவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் ஆண்டுதோறும் வருடாந்திர பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
    அதன்படி, செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் பவித்ரோற்சவம் தொடங்கியது. காலை பத்மாவதி தாயாருக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் தாயார் முன்னிலையில் பல வண்ண பட்டு நூலிழைகளால் ஆன பவித்ர மாலைகளை அர்ச்சகர்கள் பிரதிஷ்டை செய்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.