Palani muruga peruman

திங்கள் கிழமையில் காலை நேரத்தில் பழனி மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி  படிப்படியான முன்னேற்றம் மாற்றம் ஏற்படும்.பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும். நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது. என்பது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம்.

உங்களுடைய ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள்  இருந்தாலும்  அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு தாக்கம் குறைய  வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் திங்கட்கிழமை காலை வேளையில் தரிசனம் வழிபாடு செய்து, பூஜை தானம் தர்மம் அன்னதானம் போன்றவற்றை செய்தால் உங்களது வாழ்வில் நல்ல முன்னேற்றம் நன்மைகள் பல கிடைக்கும்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *