Sani bagavan thunbam neenga

ஓம் நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பகவான் என்றும் பாதிப்பதில்லை. பிரதோஷ வழிபாடு தடையின்றி செய்தால் சனி பகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்ப்பார்.

கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை. அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார். சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.

எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பிடிப்பதில்லை.

உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை, ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார். முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களுக்கு சனி பகவானால் பாதிப்பு இருக்கும். விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

 மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும். அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *