Sri Krishna Paramatma” gave as an offering” Sri Rama appearing with the Sangu Chakra”!

கேரள மாநிலம், திருச்சூர் அடுத்த  திருப்பிரையார் என்ற கிராமத்தில் ஸ்ரீ ராமபிரான்  திருக்கோவில் உள்ளது, ராமாயணத்துடன் தொடர்புடைய இதன் புராண வரலாறு'  துவாபர யுகத்தின்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இங்குள்ள ஸ்ரீ  ராமபிரானை வழிபட்டதாகவும்,  துவாபர யுகத்தின் இறுதியில்  துவாரகை கடலில் மூழ்கிய போது.  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வழிபட்ட ஸ்ரீ ராமபிரான் விக்கிரகமும் கடலில் மூழ்கியது. பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநில   செட்டுவா கடலில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது வலையில் ஸ்ரீ ராமபிரான் சிலை பிடிபட்டது, அதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து அரசாங்கத்திடம்  ஒப்படைத்தனர். 

அதன் பிறகு' திருப்பிரையாரில் ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை செய்து, திருக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள ஸ்ரீ ராமபிரான் மகாவிஷ்ணு போன்று நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்திய படி காட்சியளிப்பது சிறப்பானது ஆகும்,  துவாபர யுகத்தின்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஸ்ரீ ராமபிரானை வழிபட்ட போது காணிக்கையாக செலுத்திய சங்கு சக்கரம் தான் தற்போது ஸ்ரீ ராமபிரானின் கரங்களில் இருப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  கேரள மாநிலத்தில் நாலம்பலம் என  அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற  நான்கு திருக்கோவில்கள் உள்ளன. தசரத சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்கள்  ஆன' ராமன்,  லட்சுமணன், பரதன், மற்றும் சத்ருக்கனுக்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு திருக்கோவில்களில்   இது முதன்மையானது ஆகும்.

திருவிழாக்களின் போது கொடி ஏற்றுவது கிடையாது காரணம் கொடிமரம் இந்த கோவிலில் இல்லை, பரிவார தெய்வங்களாக' சிவபெருமான், தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தர்ம சாஸ்தா ஆகியோரும் சன்னதி கொண்டு அருள் பாவிக்கின்றனர். வைகுண்ட ஏகாதிசி, மார்ச், ஏப்ரல், மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும்  பூரத்தன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அப்போது சுவாமி ஐயப்பன் 21 யானைகள் படைசூழ செண்டை மேளம் முழங்க அழைத்துச் செல்லப்படுவது கண் கொள்ளாக் காட்சியாகும்,

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *