“Sri Ettiamman, the Mother who appeared as a Self” Women devotees are coming!

திருவண்ணாமலை மாவட்டம், எரும்பூண்டி கிராமத்தில் சுயம்புவாக தோன்றிய அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் ஆலயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை மம்மட்டியால் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது. பாறையில் உரசி அது போன்று கணீர் என சப்தம் சப்தம் கேட்டுள்ளது மேலும் மம்மட்டி உரசிய இடத்திலிருந்து பூமியில் ரத்தம் கசிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்.

ஊர் மக்களை திரட்டி வந்து குறிப்பிட்ட இடத்தை தோண்டி பார்த்தபோது அம்மன் சிலை ஒன்று இருப்பது தெரிய வந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்திக்கு சுவாமி வந்து தான் ஆதிபராசக்தி எனவும் சுயம்புவாக தான் தோன்றிய இந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும் எனவே கோவில் எழுப்பி தன்னை வழிபட்டால் நன்மைகள் பல ஏற்படும் என அருள் வாக்கு கூறியுள்ளார். இதனை ஏற்று கிராம மக்கள் கட்டியதுதான் இந்த எட்டியம்மன் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

பௌர்ணமி, அம்மாவாசை அன்று இங்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மேலும் ஆடி திருவிழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது, மரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளித்தரும் அன்னை உள்ளம் கொண்டவர் எட்டியம்மன் என்பதால் இவளை நாடிவரும் பெண் பக்தர்களின் கூட்டம் அதிகம்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *