Ponneri kumbabishegam

பொன்னேரி அருகே பழமை வாய்ந்த வேதமூர்த்தி வினாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் கிராமத்தில் பழமைவாய்ந்த வேதமூர்த்தி வினாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் பக்தர்கள் நிதியுதவியில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து  கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *