krishnan koil kumbabishegam

அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன்,  அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரன், நவகிரகங்கள், அருள்மிகு  ஸ்ரீ ராதா ருக்குமணி கிருஷ்ணர் கோயில் ஆகிய கோயில்களில்  மகா கும்பாபிஷேகம்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த 2,குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ  முத்தாலம்மன், அருள்மிகு   ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ விக்னேஸ்வரர் நவகிரங்கள் ஆகிய கோயில்களுக்கு  மகா கும்பாபிஷேகம்   நடைபெற்றது.

வேத பட்டாச்சாரியார்கள் யாகசாலை அமைத்துபல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வந்த புனித நீர் யாக  சாலையில் உள்ள  கலக்கத்தில் வைத்து வேத மந்திரங்கள் ஒதப்பட்டது பின்னர் யாக சாலையில் பூஜித்த  கலசங்களை தலை மேல் சுமந்து ஊர்வலமாக கோயிலை வலம் வந்து விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மூலவர் முத்தாலம்மன், ராதா ருக்குமணி சமேத  கிருஷ்ணர், விக்னேஸ்வரர் நவகிரகங்கள் ஆகிய மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் அந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *