guru parvai enna palan

ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் குரு, ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம். இவரின் பார்வை எதையும் முழுமையாக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும் தானாக பலம் கிடைத்து விடும்.

குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

 குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் மற்றும் செல்வம் கிடைக்கும்.

 குரு பகவான் 2-ம் இடத்தில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்.

 குரு பகவான் 3-ம் இடத்தில் இருந்தால் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.

குரு பகவான் 4-ம் இடத்தில் இருந்தால் வீடு வாகன யோகம் கிடைக்கும்.

 குரு பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.

 குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்தால் பிரச்சனையில்லாத வாழ்வு மலரும்.

குரு பகவான் 7-ம் இடத்தில் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

குரு பகவான் 8-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

குரு பகவான் 9-ம் இடத்தில் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.

குரு பகவான் 10-ம் இடத்தில் இருந்தால் பதவி மாற்றம் கிடைக்கும்.

குரு பகவான் 11-ம் இடத்தில் இருந்தால் செல்வ நிலையில் உயர்வு உண்டு.

குரு பகவான் 12-ம் இடத்தில் இருந்தால் சுபவிரயம், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *