Lakshmi narayana alayam kudamuzhuku

பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய குடமுழுக்கு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருப்பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று இரவு யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை வேதவிர்ப்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்தபடி கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு விமான கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சுற்றி இருந்த பக்தர்கள் மீது அந்த புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த குடமுழுக்கு நிகழ்வை இருள்நீக்கி பகுதி மட்டுமில்லாமல் அருகில் உள்ள கோட்டூர் விக்கிரபாண்டியம் காரியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.    

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *