Veetil selvam sera

காரியத்தடை நீங்க, செல்வம் சேர சில எளிய பரிகாரங்கலை இங்கே காணலாம். திருமலை வெங்கடாஜலபதிக்கு  வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும். துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும். சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.

செவ்வாய் கிழமையில் செவ்வரளி கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும். ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும். கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப் பெட்டியில் வைக்க பணம் சேரும்.

சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்ன தானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும். ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் நெற்றியில் இட்டு வர பணம் வரும்.

வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்ச்சிக்க  தனலாபம் கிட்டும். ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவி பணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். தொடர்ந்து 18 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாஷம் நிரந்தரமாகும். ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கி தனலாபம் பெறலாம்.

கனக தாரா ஸ்தோத்திரத்தினை தினமும் கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும். வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை  நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். மஹாலட்சுமிக்கு  பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *