Sani bagavan thollai neenga

12-ல் உள்ள சனிபகவான் ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். தொழில்களிலும் வீழ்ச்சியை உண்டு பண்ணுவார்.
 
12-ல் உள்ள சனிபகவானால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை விளையக்கூடும்.
 
12-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானுக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.
 
நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனிபகவானத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.
 
ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2.1/2 வருட வீதம்

 3 × 2.1/2 என்ற சஞ்சரிக்கும் காலம் 
7 1/2சனி காலமாகும்.
 
ஒருவரின் ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.
 
ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார்.
 
திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
 
சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.
 
சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது.
 
சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும் என்கிறார் ஷீத்வா முனிவர். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *