Tag: Sani Bagavan

  • Sani bagavan thollai neenga

    12-ல் உள்ள சனிபகவான் ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். தொழில்களிலும் வீழ்ச்சியை உண்டு பண்ணுவார்.
     
    12-ல் உள்ள சனிபகவானால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை விளையக்கூடும்.
     
    12-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானுக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.
     
    நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனிபகவானத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.
     
    ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2.1/2 வருட வீதம்

     3 × 2.1/2 என்ற சஞ்சரிக்கும் காலம் 
    7 1/2சனி காலமாகும்.
     
    ஒருவரின் ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.
     
    ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார்.
     
    திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
     
    சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.
     
    சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது.
     
    சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும் என்கிறார் ஷீத்வா முனிவர். 
     

  • Sani bagavan jadagatharuku palan

    10-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம் ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார். 10-ல் உள்ள சனிபகவான் ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும். தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.
     
    10-ல் உள்ள சனிபகவான் ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார். 10-ஆம் இடத்தில் சனிபகவான் உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர் தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும். 10-ல் உள்ள சனிபகவான் ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.
     
    சனிபகவான் 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார். நிறைய வருமானம் அடையப் பெறுவார். 11-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் மூலம் ஜாதகர் தைரியசாலியாக வாழ முடியும். சரீர சுகம் அமையும். ஆனால் இளமையில் உடல் உபாதை ஏற்படக் கூடும்.
     
    பொதுவாக 11-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும். இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள் திரட்டும் வாய்ப்பு ஏற்படும். 11-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் பல நிலைகளிலும் சிறப்பைத் தருவார். என்றாலும், குடும்பத்தில் ஜாதகருக்குச் சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.
     

  • Sani bagavan mukkiya thagavalgal

    சனிபகவான் ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர் ஆவார். மந்தமாகப் பேசுவார்.
     
    லக்னத்தில்  சனிபகவான் இருக்கப் பெற்று சனிபகவான் அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும். ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனிபகவான் இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.
     
    மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனிபகவானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.
     
    ரிஷபத்தில் உள்ள சனிபகவனானவர் அது ஜன்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
     
    2-ஆம் இடத்தில் உள்ள சனிபகவனானவர் நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனிபகவனால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.
     
    சனிபகவானவர் 2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சுகபோகங்களையும், செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.
     
    2-ல் உள்ள சனிபகவானால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.
     
    2-ல் உள்ள சனிபகவானுக்குச் சுபபலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள் குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.
     
    3-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது உண்டாகும்.
     
    சனிபகவானவர் 3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்கும். ஆனாலும் செய்யும் காரியங்களில் தரக்குறைவு இருந்து கொண்டிருக்கும். 3-ல் உள்ள சனிபகவான் பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.
     
    3-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் பலவீனமாக இருந்தாரானால் சகோதரர்களுக்கு நாசம் ஏற்படக்கூடும். தாய்நாட்டை விட்டு வெளிநாடு செல்லக்கூடிய நிலை ஜாதகருக்கு உண்டாக கூடும். அந்த நிலை நல்லதாக அமைவதற்கு 3-ல் உள்ள சனிபகவான் பலம் பெற்றிருக்க வேண்டும்.
     

  • june 12 sani bagavan aradhanai

    ஜூன் 12 – திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை
    பிலவ வருடம் – வைகாசி 29
    12-ஜூன்-2021 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    இ    7.38
    நட்சத்திரம்    :    திருவாதிரை    மா    4.38
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Sani bagavan perumal temple

    சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார். பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது.

    புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.ஆகவேதான் புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். 

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.

    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும். 

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

  • Sangadangalai Thavidupodiyakkum Sani bagavan

    சனி பகவானை வணங்குங்கள். எள் தீபமேற்றி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி நமக்கு அருள்வார் சனீஸ்வரர்!

    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே! மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய். என்று சனீஸ்வரரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    நாம் நினைப்பது போல, சனீஸ்வரரைக் கண்டு பயப்படவே தேவையில்லை. அன்பாளர். அருளாளர். நம் சங்கடங்களையெல்லாம் தீர்க்கக் கூடியவர். மங்கலம் பொங்கும் வாழ்வுதனைத் தந்தருளும் வள்ளல் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    முந்தையப் பிறவிப் பயன் என்பது நிச்சயம் உண்டு. இதை எந்தத் தருணத்தில் நாம் நம்புகிறோமோ இல்லையோ… சனீஸ்வர பகவான் விஷயத்தில் நம்பியே ஆகவேண்டும். ஏனெனில், நம் அத்தனைப் பிறவிகளின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்த்து, அதன்படி அருளக்கூடியவர் சனீஸ்வர பகவான் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

    முந்தைய பிறவியில் ஏற்பட்ட வினைகள்தான், இப்போதைய நம் சந்தோஷங்களாகவும் சங்கடங்களாகவும் வருகின்றன என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். அதைக் கொண்டுதான் நம்மைச் சோதிப்பதிலும் சோதனைக்குள்ளாவதிலுமாகத் திகழ்கிறார் சனி பகவான்!

    உரசினால்தான் தங்கத்தின் மதிப்பு தெரியும். அதுபோல் நம்மை சோதித்துப் பார்ப்பார் சனிபகவான். அப்படியான சோதனை காலத்தில், நாம் நேர்மையாகவும் நியாயமாகவும், உண்மையாகவும் சத்தியத்துடனும் இருந்தால், சனீஸ்வரரின் சோதனைப் பார்வை முடிவுக்கு வரும். முறையே சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி, சனிக்கிழமைகளில் காகத்துக்கு எள் சாதம் படைத்து வந்தால், சனி பகவான் நம் மீதான கோபத்தில் இருந்து சற்றே தளர்த்தி அருள்வார் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.

    சனிக்கிழமை என்றில்லாமல், எல்லா நாளும் சனி பகவான் காயத்ரியும், அவருக்கு உண்டான ஸ்லோகங்களையும் சொல்லி வந்தால், சனி பகவான் யோகம் தரும் தெய்வம் என்பதை உணர்ந்து, சிலாகிப்போம்.

    எனவே சனிக்கிழமைகளில் தவறாமல் சனீஸ்வரரை வணங்கித் துதிப்போம். நம் சங்கடங்களையெல்லாம் விலக்கி, நமக்குச் சந்தோஷத்தைத் தந்தருள்வார் சனி பகவான்!
     

  • Sani Bagavan Parigarangal

    திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். 

    நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும். குளித்து துவட்டி வேறு ஆடை அணிந்தபிறகு, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனித நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.

    திருக்கோயிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும். தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். 

    எள் தீபம் ஏற்றுவது தொடங்கி அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் எல்லா நாள்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதனாலும் கூடுதல் பலன் கிட்டும்.
     

  • Sani Bagavan Yagam

    மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், பிரகாச மூர்த்தியான சூரியனின் நக்ஷத்திரமான உத்திராட நக்ஷத்திரத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 24.01.2020 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை சனிப்பெயர்ச்சி மஹா யாகத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

    ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார் சனீஸ்வரர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள்.

    சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.

    சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

    சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் ஏற்படும் தோஷங்கள் குறைய சனிப்பெயர்ச்சி யாகத்தில் தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    சனியின் சஞ்சாரம் பார்வை :

    சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். அதே நேரத்தில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறப்போகிறது. மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியும், கடகம் ராசிக்கு கண்டச்சனி காலமும் தொடங்கப்போகிறது.

    வாலாஜாபேட்டை ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர் (தங்க சனீஸ்வரர்) ஆலய மகிமை :

    ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவக்கிரகங்களே. அந்த நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படையில் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியவில்லை. ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரணமாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர். இத்தனை சிறப்பு வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும். அதைப் போலவே வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனி ஆலயம் அமைத்து கொண்டு சனிபகவான் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்து வருகிறார். வருகிற 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் தன்வந்திரி பீடத்தில் சொர்ண சனி பகவான் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று பல்வேறு தரப்பு மக்கள் சனி பகவானை மிகவும் ஆர்வத்துடனும், பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    மேலும் தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் ஆயுள் கண்ட பிரச்னைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும். ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்க மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட தேதியில் 2020-2023 ஆண்டுக்கான நடைபெறும் சனி பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு நர்பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    இச்சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்களை அடையவும் சனிப்பெயர்ச்சியாகமும், பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

    அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் :

    தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்,

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Sani Bagavan Adikkam Kuraya

    ஏழரைச் சனியின் முதல் பகுதி அதாவது முதல் இரண்டரை வருடங்களை விரையச்சனி என்பார்கள்.  கோச்சாரப்படி சந்திர ராசிக்கு 12ம் இடம். அடுத்த இரண்டரை வருடங்களை ஜென்மச்சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம்.  அடுத்த பகுதி அதாவது அடுத்த இரண்டரை வருடங்களை கழிவுச்சனி என்பார்கள். அந்தக் காலக்கட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைவாக இருக்கும்.

    ராசிக்கு 12ம் இடத்தில் இரண்டரை வருடம், ராசியில் இரண்டரை வருடம் என ஏழரையாண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப் படைப்பார் சனி பகவான். அவர்  பிடியிலிருந்து, தப்பிக்க வழிவகை உண்டா என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு. சனிபகவான் கொடுக்கும் இன்னல்களிலிருந்தும் தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பார்ப்போம்.

    சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி புனுகு பூசி, கறிவேப்பயிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமீட்டு அர்ச்சனை செய்து வர ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடலாம்.

    ராசி 12ல் சனியிருக்கும் போது தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். 
    ராசியில் சனி இருக்கும்போது எலுமிச்சை பழத்தின் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். 
    ராசிக்கு 2ல் சனி இருக்கும்போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும். 
    தாயாருக்கு தோஷம் ஏற்பட்டால் அதைப் போக்க, திங்கட் கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் பைரவருக்கு நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து புனுகுப்பூசி ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட  துன்பங்கள் விலகும்.
     

  • Sani Bagavan Thandanayil Irundhu Thappika

    சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம். ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

    எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.

    ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம். இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க.

    இது எல்லாமே, சனியால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையாக பாதிக்க படக்கூடாதுங்கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். 

    பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
    சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
        
    வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசி மாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். 

    இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போடவேண்டும்.

    ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச் சனி,அஷ்டமச் சனி,கண்டச் சனி,அர்த்தாஷ்டகச் சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
    உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் – அளிப்பது , மிக நல்லது.