dHANVANTAHRI VARAHI HOMAM

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு” டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 22.01.2022 சனிக்கிழமை தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை வாழ்க்கையில் வளம் சேர்க்கும் வாராகி ஹோமம் மற்றும் அபிஷேகம் பூஜை நடைபெறுகிறது.

 பஞ்சமி திதியில் வாராகியை விரதமிருந்து வழிபட கிடைக்கும் பலன்கள்

சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியும் ஆனவள் வாராகி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.

 சப்த மாதர்களில் வாராகியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராகி

தமிழர்களின் ஆதி தெய்வமாக விளங்கிய வாராகி அம்மனை வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும். இந்த ஆதி தெய்வம் ஞானத்தின்  கருப்பொருளாகவும் விளங்குகிறாள் ஸ்ரீசக்கரத்தில் நான்கு மூலைகளிலும் சேனாதிபதியாக நிற்கின்றாள் வாராஹி அன்னை.

 அகத்திய மாமுனிவர் வாராகி அன்னையின் அருளை ஸ்ரீசக்கரத்தின் வாயிலாக தெரிவிக்கின்றார்.

 வாராகி தேவியை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு பிரச்சினைகள் சுமுகமாகும்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு, பூமி சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், குழந்தை வரம், கல்வியில் தேர்ச்சி, பில்லி, சூனியம், ஏவல், தோஷம் நீங்க நினைத்த காரியம் கைக்கூடி வெற்றி பெற மாதத்தில் வருகிற தேய்பிறை, பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

 இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்களை வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறை பணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 மேலும் தொடர்பு கொள்ள முகவரி

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *