Aabathu agala solla vendiya mandiram

ஆபதாம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம் !  

 லோகாபி ஸ்ரீ ராமம் பூ "யோ பூ " யோ நமாம் யஹம் !! 

ஆபத்தை அகற்றி ஸம்பத்தைத் தருபவரும் உலகில் அழகுள்ளவருமான ராமனைப்  பலமுறை நமஸ் கரிக்கிறேன் .  நித்யமே 10 முறையும் ஆபத்து வந்தபோது 1008 முறையும் ஜபித்தால் பெரிய ஆபத்து  அகலும். 

சத்ரு பயம் , துன்பம் அகல 
ஆர்த்தாநாம்  ஆர்தி ஹந்தாரம் பீதாதாம் பீதி நாஸநம் !   
த்விஷதாம்  காலதண்டம் தம்  ராம சந்த்ரம் நமாம் யஹம் !!    

 துக்கப்படுபவர் துக்கத்தையும்  பயந்தவர் பயத்தையும் அகற்றி  சத்ருவுக்கு யம தண்டமாயிருக்கிற ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன் . 1008  முறை ஜபித்தால்   சத்ரு பயம்  துன்பம் அகலும்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே   
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே  !!  

ஸ்ரீ ராம ராம  என ராம நாமத்தை  ஜபித்தாலே  விஷ்ணு ஸஹஸ்ரநாம. ஜபம்செய்ததற்கு ஒப்பாகும் என பரமேஸ்வரரே  சொல்லியுள்ளார் !

மாதர் மே மதுகைடபக்னி மஹிஷ ப்ராணாபஹா  
ரோத்யமே ஹேலாநிர்மித  தூம்ர லோசன  வதே  ஹே  சண்ட முண்டார்த்திநி  l
சேஷீ க்ருத  ரக்தபீஜ  தனுஜே நித்யே நிசும் பாபஹே 
சும்பத்வம்ஸினி   ஸம்ஹராசு  துரிதம்  துர்க்கே  நமஸ்தே  அம்பிகே  !!
தாயே !   

மதுகைடபர்களை வதம் செய்தவளே, மஹிஷாசுரனுடைய பிராணனைப் போக்கியவளே,  விளையாட்டாக தூம்ரலோசனை  வதைத்தவளே,  சண்ட முண்டர்களை அழித்தவளே, ரக்தபீஜாசுரனை  நிர்மூலம்  ஆக்கியவளே,  சும்பனையும் நிசும்பனையும் ஒழித்தவளே,  நித்தியமானவளே, துர்க்காம்பிகையே உன்னை நமஸ்கரிக்கின்றேன்.எனது  பாபங்களை  போக்கி  அருள்வாயாக.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *