Atchayapureswara temple

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் விளங்குளம் கிராமத்தில் அருள்மிகு அபிவிருத்தி நாயகி சமேத அட்சயபுருஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் பிரத்யேகமாக பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடு வேண்டிய தலம்.

இத்திருக்கோவிலில்  அட்சயதிருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றது. இத்தலத்து இறைவன் சனீஸ்வரபகவானுக்கு கால் ஊனம் நீக்கி திருமணப்பிராப்தி நல்கி காகவாகனம் அளித்து அருள்பாலித்தார் என்பதும் அவ்வாறு அருள்பாலித்தது ஒரு அட்சய திருதியை நன்னாளில் என்பதும் தலவரலாறு.

மேலும் பூச நட்சத்திரக்காரர்கள் இத்தலத்து இறைவனை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது உறுதி. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்திற்கு அட்சயதிருதியை நாளில் வந்து வழிபட்டு வளங்கள் பல பெறலாம்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *