Thiruchanoor Karthigai bramorchavam

திருச்சானூர் பத்மாவதி கோயில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெறுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம்  நவம்பர் 11 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19ஆம் தேதி  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் மத்திய  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசின் வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் மாதம் முழுவதும் தொடரும் என அறிவித்துள்ளது. 

இதனால் பிரம்மோற்சவ விழாவை காண பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திக் மாத பிரம்மோற்சவத்தில் வீதி உலா ரத்து செய்து கோயில் வளாகத்துக்குள் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இருப்பினும்  திருச்சானூர் கோயிலில் மூலவரை  தரிசனம் செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *