Palli engu vilunthal enna palankal

பல்லி எங்கு விழுந்தால் என்னென்ன பலன்கள்!
நம் வீடுகளில் சாதாரணமாக வளையவரும் உயிரினம் பல்லி. இந்த பல்லி எதிர்பாராத விதமாக நம் மீது விழுவதுண்டு.
பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள் என்பதையும், பல்லி சாஸ்த்திர பலன்களையும் இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.
பல்லி என்பது கேதுபகவானை குறிக்கின்றது. பல்லி எல்லார் வீட்டிலும் எளிதாக இருக்க கூடியது. பல்லி கத்துவது முதல், பல்லி உடலில் விழுவது முதல் அனைத்து பலன்களையும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்..!
பல்லி விழும் பலன்- தலை:-
முதலில் பல்லி தலையில் விழுந்தால் என்ன என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். பல்லி தலையில் விழுந்தால் அவர்களுக்கு வரப்போக இருக்கும் கெட்ட நேரத்தை குறிக்கின்றது. அந்த கெட்ட நேரத்தை சமாளிக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிக்கின்றதாம் பல்லி. இது மட்டும் இன்றி மற்றவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இன்றி இருப்பார்கள், மேலும் உறவினர்கள் அல்லது நன்கு தெரிந்தவர்களுக்கு மரணம் ஏற்படலாம்.
பல்லி விழும் பலன் – நெற்றி:
 நெற்றியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, அதுவே நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மி கடாட்சம் என்று பல்லி சாஸ்த்திரம் கூறுகிறது.
பல்லி விழும் பலன் – தலை முடியில் 
 தலையில் இல்லாமல் தலை முடியின்மீது பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை நிகழும் என்று அர்த்தமாகும்.
பல்லி விழும் பலன்- முகம்;
 முகப்பகுதியில் பல்லி விழுந்தால் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று அர்த்தமாகும்.
பல்லி விழும் பலன்- புருவம்;
 புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜபதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமாகும்.
பல்லி விழும் பலன் – இடது கை அல்லது இடது கால்
 இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தமாகும்.
அதுவே வலது கை அல்லது வலது காலாக இருந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் ஏற்படும் என்ற அர்த்தமாகும்.
பல்லி விழும் பலன்- பாதம்;
பாதத்தில் பல்லி விழுந்தால் வரும் காலங்களில் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள் என்று அர்த்தமாகும்.
பல்லி விழும் பலன் – தொப்புள் ;
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலைமதிப்பு மிக்க பொருட்களான வைர வைடூரியங்கள், இரத்தின கற்கள் கிடைக்க பெருமாம்.
பல்லி விழும் பலன் – தொடை:
தொடையில் பல்லி விழுந்தால் தங்களுடைய பெற்றோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவீர்களாம்.
மார்பு பகுதியில் பல்லி விழுந்தால்:
மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்.? இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும். அதுவே வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் இலாபம் கிடைக்கும்.
பல்லி விழும் பலன் – கழுத்து பகுதியில்
கழுத்து பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும். கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். அதுவே வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் மற்றொருவருடன் பகை உண்டாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *