Iniyavai narpathu – Sirumai thanamatcha iniya sol

குறள் : 
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும் 

மு.வ விளக்க உரை: 
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். 

சாலமன் பாப்பையா விளக்க உரை: 
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும். 

கலைஞர் விளக்க உரை: 
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *