Dhanvanthri Peedathil Sirappu Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி அகில உலக புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் நலன் கருதி இன்று 16.11.2019 சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 10 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமமும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது.

ஸ்ரீ வேத வியாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றும் புரோகிதர்களுடைய க்ஷேமம், அவர்களின் குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜையுடன் மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், விக்னேஸ்வரபூஜை, கணபதியக்ஞம், நவக்ரஹ யக்ஞம், சுதர்சன யக்ஞம், மஹா தன்வந்திரி யக்ஞம், ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் புரோகிதர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் தனித்தனியாக ஹோம குண்டங்களில் அமர்ந்து அவரவரே செய்யும் ஹோமமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு பூஜைகளும், காலசக்கிர பூஜையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புரோகித சங்க தலைவர் வேலூர் திரு. சீதாராமன் அவர்கள், பொருளாளர் திரு. கோபாலன் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக திருவண்ணாமலை காகபுஜண்டர் ஆசிரம பீடாதிபதி திரு. தர்மலிங்க ஸ்வாமிகள் மற்றும் வாலாஜாபேட்டை தொழிலதிபர் திரு. மஹேந்திரவர்மன் அவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *