Thirupathy theppa thiruvizha

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சீதா, ராமர், லட்சுமணர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

இரண்டாவது நாளான இன்று இரவு ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றி அமர்ந்து காத்திருந்து கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். 

மூன்றாவது நாளான நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். வருடாந்திர தெப்பல் உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *