Tag: Temple

  • How to cross the threshold when entering the temple

    The first question that comes to the mind of everyone who goes to temple is whether to step on the entrance or to cross it without stepping? Here's a detailed guide to the customs as to how to enter a temple.

    Before going to the temple the devotees must wash their hands and feet at a nearby water tap. Usually temples keep a tap station near the entrance. Spray a little water on the head, especially after washing hands and feet.

    Upon entering the temple, worship the temple tower and kalasam. Next you have to pay respect to the Dwarapalakar in the temple.

    Before going to the main sanctorum at the temple one should bend down and touch the stairs with the fingers of the right hand and press the finger between the eyebrows. Doing so is believed stimulate the positive energies of the temple to act on our body through our feet as we enter the temple.

    One must cross the doorstep to enter the temple. It is believed that going across the temple steps leaves all the worries and negative thoughts in our minds outside. That means we our problems behind.

    So, what does it mean to step on the temple doorstep?

    It is believed that if you step on the entrance, instead of crossing the stairs, one tends to take the problems in the mind into the temple.

    The temple is full of magical sounds, chants and positive energy that heals us and aids in betterment. This simple gesture of crossing the entrance is a way to channelise that energy for achieving intended benefits.

  • Temple Lizard

    பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில்  கர்பகிரகத்தின் மேல் கூரையில்  தங்கம் மற்றும் வெள்ளியில்  பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

    பல்லி நம் உடல்மீது எங்கு விழுந்தால் என்ன பலன்!

    தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்.
    தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்.
    நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி.
    நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்.
    வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி.

    வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.
    முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.
    முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
    கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்.
    கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.

    தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்.
    பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
    கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு.

    கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு.
    கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்.
    கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
    மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை.
    மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.

    மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி.
    மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை.
    தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்.
    நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
    நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.

    காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
    காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்.
    மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்.
    மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
    கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை.

  • Perumal Temple

    பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும். அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றுவார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். அதனையும் வழிபட வேண்டும்.

    பெருமாளை தரிசிக்கும் போது முதலில் பாதத்தைத் தான் பார்க்க வேண்டுமா?

    மகாபாரதத்தில் போர் நடக்கும் முன்பு கிருஷ்ணரிடம் போரில் உதவி கேட்டு முதலில் வந்த துரியோதனன், தூக்கத்தில் இருந்த கிருஷ்ணரின் தலையருகில் அமர்ந்தான். ஆனால் அடுத்து வந்த அர்ஜுனனோ பாதத்தின் அருகில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணர் கண் திறந்ததும் முதலில் அவருடைய அருள் பார்வை அர்ஜுனன் மீது விழுந்தது. அப்போதே பாண்டவர்களின் வெற்றி உறுதியாகி விட்டது.

    அர்ஜுனனுக்கு வெற்றி கிடைத்தது போல, பெருமாளின் பாத தரிசனம் எல்லாருக்கும் வெற்றி தரும் என்பதால் தான் பெருமாளை முதலில் பாதத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.

    பிறகு லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.

    அடுத்து, கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

    கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது.

    இறைவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோவிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோவிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோவிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது.

    இறைவன் எளிமையையே விரும்புபவர். இறைவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடையை தவிர்ப்பது நல்லது.

    பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க, அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன்படுத்துகின்ற பச்சை கற்பு ரம், சந்தனம், சம்பங்கி பு , துளசி தீர்த்தம் போன்றவை உதவும். மேலும் உடம்பில் அசுரத் தன்மையை தூண்டக் கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் வாழ்வில் ஈடுபட்டு நல்ல வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசியில் பெருமாள் வழிபாடு வலியுறுத்தப்பட்டது.

  • Ranveeswarar temple

    வட சென்னை பகுதியிலுள்ள வியாசர்பாடியில் சூரிய தலமான ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது. முலவர் ரவீஸ்வரர் மரகதாம்பாளுடன் அருள, உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தராக அருள்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தல தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்தில் காமீக ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவன் சந்நதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எந்த ஆதாரமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறும் திருத்தலம் இது. 

    இக்கோயிலில் சிவன், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சந்நதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையில் உள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே, முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன் பிறகுதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். சிவன் சந்நதி முன்மண்டபத்தில் சூரியன், இருக்கிறார்.

    ஞாயிற்றுக்கி ழமை, உத்தராயண, தட்சிணாயண புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி (தைப்பொங்கல்), ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கின்றன. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி எனப்பட்ட அவள், சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். 

    இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற கோப அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை. தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டார். 

    அவருக்குக் காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்த ருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன், அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், ‘ரவீஸ்வரர்’ (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார்.முற்காலத்தில் இங்கு சிவன் சந்நதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி இங்கு சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார். 

    அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தல த்து இறைவன் மீது பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவன், அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதன் பி ன்பு, இங்கு அம்பிகைக்கு சந்நதி எழுப்பப்பட்டது. இவ்விழாவின் பத்தாம் நாளில் மகிஷன் வதம் வைபவம் நடக்கும். 

    அப்போது அம்பாள் சந்நதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, (வாழை மரத்தின் வடிவில் மகிஷன் இருப்பதாகக் கருதி), அதில் வன்னி இலையையும் சேர்த்துக் கட்டிவிட்டு,  அம்பாள் சார்பாக வெட்டி விடுகின்றனர். இந்த வைபவம் இங்கு விசேஷமாக நடக்கும். சிவன் சந்நதிக்கு பின்புறத்தில் வன்னி மரம் இருக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள், இம்மரத்திற்கு கீழேயுள்ள நாகருக்கு மஞ்சள்பொடி, பால் அபிஷேகம் செய்தும், பெண்கள் சுமங்கலிகளாக இருக்க தாலி  கட்டியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

  • danvantritemple yagam

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அடுத்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகின்ற 19.03.2020 வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம் முதல் 31.03.2020 ஈஸ்வரனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம் வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை உலக மக்கள் ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இதர பரிவார மூர்த்திகளை வேண்டி தொடர் யாகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சிறப்பு:

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது பெற்றோரின் வாக்கினை ஏற்று நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டு உலக மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்து 78 பரிவார மூர்த்திகளுடன் மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து உள்ளார்.

    இங்கு உள்ள மூலவர் மற்றும் உற்சவர் தன்வந்திரி இந்தியாவின் பல இடங்களில் 665 நாட்கள் சுமார் இரண்டு லட்சம் கிலோமீட்டர் கரிக்கோல பயணம் செய்து 500க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரம் சென்று 2000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பல்வேறு ஆலயங்கள், மடங்கள் சென்று பல மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு புனித தீர்த்தங்களில் நீராடி 67 திவ்ய தேசப்பெருமாளின் அபிமானத்தை பெற்று தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மூலம்  147 தன்வந்திரி ஹோமம் செய்து சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகிதஜப மஹா மந்திரங்களை பெற்று அவற்றை   கர்ப்பகிரஹத்தின் கீழ் மந்திரமே யந்திரமாக வைத்து மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து தினமும் பல்வேறு விதமான சாந்தி பரிகார ஹோமங்கள் மற்றும் பூஜைகள் தொடர்ந்து  செய்து வருகிறார்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் தொடர் ஹோமத்திலும் ஆராதனைகளிலும் பங்கேற்பதன் மூலம் உடலின் எதிர்ப்புத் திறன் உயர்ந்து ஆயுள் ஆரோக்கியம் மேம்படும், தீராத நோய்களை தீரும், கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் மற்றும் பல  நன்மைகளை பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Nellaiyappar Koil

    நெல்லை மாவட்ட கோயில்கள்1

    பக்தி மணம் கமழும்  திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற சைவ, வைணவ திருத்தலங்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் உண்டு. இவற்றில் நெல்லை மாவட்டம் என்கிற பெயருக்குக் காரணமாக அமைந்த நெல்லையப்பர் கோயில் தனிச் சிறப்புப் பெற்றது.

    ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தெற்கு வடக்காக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

    கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ- வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
    இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது.

    ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.


    மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது மட்டுமின்றி மிக அகலமானதும் கூட. இந்த பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் இருக்கிறது.

    இந்தக் கோயிலில் 2 கோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்கள் ஆகம விதிப்படி ராமபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. கோயிலின் மத்தியில் அழகான நந்தவனம் அமைக்கப்பட்டு, அதன் நடுவில் நூறு தூண்களுடன் கூடிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட பெரியது என பலரும் கூறுகின்றனர்.  

    பிரசித்தி பெற்ற இந்தத் திருக்கோயில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  
    நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

    Google maps link //goo.gl/maps/LVxpCYS7PiGvPHc18 

  • Thiruverkadu temple ther

    திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திரு தேர் திருவிழாவில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயமும் ஒன்று.இதில் 26 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருந்திருவிழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.   

    7 வது நாளான இன்று தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் கருமாரியம்மன்  அமர்ந்து காட்சி அளித்தார்.இந்த தேரை திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிர் வேட்டுகள் முழங்க ஓம் சக்தி என்ற கோஷங்களுடன்   வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஊர்வலத்தில் மயிலாட்டம்,ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,தாரை என பல்வேறு கிராமி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • World biggest murugan temple

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை மிக பிரமாண்டமான அளவில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாக கட்டும் பணி உருவாகி வருகிறது இந்த சிலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள  பத்து மலை முருகன் கோயில் உள்ளது அதன் நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என்று அமைக்கப்பட்டுள்ளது அதன் உயரம் 140 அடி ஆகும்.

    இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில்  உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த மூன்றாண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த முருகன் சிலை  145 அடி உயரம் கொண்டு உள்ளது சிலை மட்டும் 126 அடியும் பீடத்துடன் சேர்ந்த மொத்தம் 145 அடியில் உலகில் மிக உயரமான முருகன் சிலை சிலையாக இது அமைகிறது என்று கோவில் சிலையை நிறுவி வரும் ஸ்ரீதர் என்பவர் தெரிவித்தார் 

    கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பத்துமலை முருகன் சிலையை ஆரம்பித்து அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் 

    மலேசியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர்  தியாகராஜன் சபதி தலைமையிலான குழுவினர் இந்த சிலையையும் தற்போது வடிவமைத்து முழுவீச்சில் வேலைப்பாடு செய்து வருகின்றனர் 

    சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் இந்த சிலை கோவில் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

  • Temple to go before Exam

    ப்ளஸ் டூ தேர்வு நெருங்குகிறது. அதற்கு முன்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. மாணவ, மாணவிகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், பெற்றோரின் மனம் வேண்டுவது தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதுதான்.

    மனதில் வேண்டுவதோடு நின்றுவிடாமல் அவர்கள் தேர்வுக்கு முன்பாக தரிசிக்க விரும்புவது ஹயக்ரீவரைத்தான்.

    கல்விக்கு கடவுளாம் சரஸ்வதி தேவி குருவாக வழிபடுவது ஹயக்ரீவரைத்தான் எனும்போது, கல்வியும், ஞானமும் அறிவும், ஆற்றலும் சித்திக்க அவரை சாமான்யர்களான நாமும் வழிபடுவதுதானே சிறந்தது.

    சென்னைக்கு பக்கத்தில் எங்கே ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறதென்று தேடுகிறீர்களா? சென்னைக்கு மிக அருகில் என்று விளம்பரங்களில் கேட்டிருப்பீர்கள்.. அப்படி மிக அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

    மிகச்சரியாக மகேந்திர சிட்டிக்கு எதிரே இருக்கும் சாலையில் சென்றால் 3 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே நகரத்திற்கான சாயல் இருக்கும். அதன் பின்னர் சிறு குன்றுகளும், வயலும், குளமுமான பாதை. கொஞ்சம் தொலைவு பயணப்பட்டதும் செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் வந்துவிடும்.

    வழக்கமாக கோயில்களுக்கு முன்பாக தேங்காய், பூ, பழங்கள் அதிகம் விற்கப்படும். இங்கோஅந்த கடைகளை விட அத்தனை விதமான நோட்டுப்புத்தகங்களும், பேனாக்களுமாக விற்கும் சிறு கடைகளை அதிகம் பார்க்கலாம். அப்படியே ஒரு நோட்டு பேனா, கொஞ்சம் துளசியை வாங்கிக்கொண்டு உள்ளே போனால் ஹயக்ரீவரை தரிசித்துவிடலாம்.

    யோக நிலையில் அமர்ந்த கோலத்துடன் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக இருக்கும் இறைவனின் முகத்தில் அத்தனை கரிசனமும் அன்பும் தென்படுவது, தவிப்போடு கோயிலுக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    அவர் முன்பாக நோட்டு பேனாவையோ, புதிய வகுப்பு பாடப் புத்தகங்களையோ தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டுகளோ வைத்து வணங்கி பெற்றோரும் பிள்ளைகளும் ஆசி பெற்று செல்வார்கள். வகுப்பின் தொடக்கத்தில் செட்டிப்புண்ணியம் கோயிலுக்கு செல்வது பலருக்கும் அந்தக் கடவுளே தங்கள் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பது போன்ற தைரியத்தை தந்துவிடும்.

    பொதுத்தேர்வு நெருக்கத்தில் கோயிலுக்கு செல்பவர்கள் அங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்த்தாலே மிரண்டு போய்விடுவார்கள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை நிற்கும்.

    ஹயக்ரீவர் கல்விக் கடவுளாம் சரஸ்வதிக்கே மகா குருவானவர். அரக்கர்களால் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீட்டுக் கொடுத்தவர். மங்கிய அறிவையும், ஞானத்தையும் அவரே மீட்டுத் தருவார் என்று நம்பி இங்கு வந்து யோக ஹயக்ரீவரை தரிசித்து செல்கிறார்கள்.

    ஆமாம் இங்கு ஹயக்ரீவர் எப்போது வந்தார்?

    1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் கொள்ளை போவதை தடுக்க பல பிரயத்தனங்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்படி கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் இருந்து தேவநாதபெருமாளும், யோக ஹயக்ரீவரும், அப்போது அடர்ந்த காடாக இருந்த செட்டிபுண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அப்போதிருந்து இங்கேயே பிரத்யட்சமாக காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மூலவராக வரதராஜ பெருமாளும் ஹேமாப்ஜவல்லி தாயாரும் சேவை சாதிக்க, உற்சவராக தேவநாத சுவாமி அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு உள்ளே நுழைந்ததும் வலப்பக்கத்தில் ராமர் சன்னதி தென்படும். நேராக சென்றால், கருடாழ்வாரின் பார்வையில் நேர் எதிரே கருவறையில் மூலவரும், தாயாரும் உற்சவரும் காட்சியளிக்க, அவர்களை தரிசித்து திரும்பினால், ஆண்டாள் தனி சன்னதியில் காட்சியளிப்பார். அவரை வணங்கி கடந்தால், ராமானுஜர், விஷ்வக்சேனர் தரிசனம். பின்னர் வெளியே வந்தால், அழகிய நந்தவனத்துடன் காட்சியளிக்கும் கோயிலை வலம் வரலாம். கோயிலில் தென்படும் அழிஞ்சல்மரத்தில் படிக்கவும், திருமண தடைகள் நீங்கவும், வீடு கட்டவுமாக வேண்டுதல் வைத்து ஆடையின் ஈரிழைகளை கட்டி வைத்திருப்பதை காணலாம்.

    இந்த ஆலயத்தில் நோட்டு புத்தகம் வைத்து அர்ச்சனை செய்து வாங்கிச்செல்லும் பக்தர்கள்,, ஆர்வமிகுதியில் தங்கள் தேர்வு எண் பள்ளி பெயர், என சுவர்களில் கிறுக்கி தள்ளியிருப்பதுதான் பார்க்க சங்கடம் தருகிறது. கோயிலை பாழ்படுத்தாமல் நம் நம்பிக்கையை இறைவன் மீது மனமார வைக்கலாமே. இந்த எண்களை எழுதி வைத்தால்தான் அவருக்கு தெரியுமா? இறைக்கு தெரியாத பக்தனா என்ன?

    1869ஆம் ஆண்டு தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமபிரானும் சீதா, லட்சுமண சமேதராக இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

    ஹயக்ரீவருக்கு பிடித்தமான ஏலக்காய் மாலையை அணிவித்து வழிபடுவதும், அவருக்கு உகந்த புதன்கிழமை வணங்குவதுமாக அவரது அருளை பெறலாம்.

    யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியும் ஞானமும் சித்திக்கும். கல்வித்தடைகள் அகலும், பேச்சில் சிரமம் உள்ளவர்கள் தேன்நிவேதனம் செய்து சாப்பிட்டுவர பேச்சுப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை

    “ஞானானந்த மயம் தேவம் நிர்மல
    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
    வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே”

     –       எழுத்தாளர் பாமா
     

  • Temple for men’s

     சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதி சூழ்ந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண்கள் மட்டுமே பிரத்யேகமாக வழிபடக்கூடியதும், ஆண்கள்  வைக்கப்படும் பிராத்தனையை உடனே நிறை வேற்றும் சக்தி வாய்ந்தது.

     ஸ்ரீ அஞ்சலாங்குட்டை முனியப்பன், ஸ்ரீ வளர்ந்த சடாமுனி, ஸ்ரீ செம்முனி, ஸ்ரீவாமுனி கோயிலில், சுவாமியே யாக பூஜை நடத்த அருள் கூறியதால்  வாழப்பாடி, சிங்கிபுரம், முத்தம்பட்டி, செல்லப்பநகர், புதுப்பாளையம், பழனியாபுரம், காலணி, சேசன்சாவடி உள்ளிட்ட சுற்று பகுதியிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள், கிராமமக்கள் 500க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் திரண்டு மழை வேண்டி வருண சிறப்புயாகபூஜை நடத்தினர்.

    சேலத்தை அடுத்த தாரமங்களத்தில் இருந்து உமா சிவாச்சாரியார் என்பவர் தலைமையில் இந்த வருண யாக பூஜை நடைபெற்றது. முதலில் வாஸ்து சாந்தி விக்னேஸ்வரர் பூஜையோட துவங்கி பல மணி நேரம் நடத்தப்பட்டது, இன்று காலை 7 மணி அளவில் துவங்கி  இந்த சிறப்பு வருண யாக  பூஜையில், கணபதி ஹோமம், மிருத்திங்க ஹோமம்,   காயத்ரி ஹோமம், சன்னாதி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்து 210 சித்தர்கள் வர கைக்கான தமிழ் முறையில நாம சப வேல்வி என்ற பூஜை செய்து மகா அபிஷேகம் மதியம் 12 மணியளவில் முடிக்கப்பட்டது.