Tag: Online

  • Kadagam December Monthly Prediction – Sakthi Online

    கடகம்:

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் – சப்தம ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு  – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2022  அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் கடகராசியினரே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும் வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

    குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

    பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

    புனர்பூசம் 4ம் பாதம்:

    இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    பூசம்:

    இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

    பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29

    அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Midhunam December Monthly Prediction – Sakthi Online

    மிதுனம்:

    கிரகநிலை:
    பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – சப்தம ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் குரு  – லாப ஸ்தானத்தில் ராகு – விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:
    06-12-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    உலக அனுபவ அறிவை பெற்ற மிதுன ராசியினரே நீங்கள் அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர். இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி  தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.

    கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

    பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

    மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

    திருவாதிரை:

    இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

    இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும்.

    பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Rishabam December Monthly Prediction – Sakthi Online

    ரிஷபம்:

    கிரகநிலை:
    ராசியில் செவ்வாய் (வ்) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – சப்தம ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் குரு  – விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:
    06-12-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறும் ரிஷப ராசியினரே இந்த மாதம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

    தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

    பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

    கார்த்திகை 2, 3, 4 பாதம்:
    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

    ரோகிணி:
    இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

    மிருகசிரீஷம் 1, 2, பாதம்:
    இந்த மாதம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும்.

    பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில்  சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24

    அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Mesham December Monthly Prediction – Sakthi Online

    மேஷம்:

    கிரகநிலை:
    ராசியில் ராகு – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) – சப்தம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் சந்திரன் – விரைய ஸ்தானத்தில் குரு  என கிரகநிலை இருக்கிறது.
    கிரகமாற்றங்கள்:

    06-12-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
    30-12-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    கலையார்வம் மிக்க மேஷ ராசியினரே உங்களுக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் இருக்கும். இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.
    குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

    பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

    அஸ்வினி:

    இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

    பரணி:

    இந்த மாதம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை தோறும் முருகன் கோவிலுக்குச் சென்று வருவது நல்ல பலன் தரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
    சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
    அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16

     

  • Sabarimalai online booking

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படுகிறது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதுபோல மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இரு விழாக்களிலும் பக்தர்கள் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்கு முன்பு கேரள போலீசாரின் இணைய தளம் மூலம் இந்த முன்பதிவு நடந்து வந்தது.

    தற்போது இந்த முன்பதிவை சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது. இன்று முதல் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களுக்கும், ஐப்பசி மாத பூஜைக்கான விழாவிலும் பங்கேற்க பக்தர்கள் இன்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை போலீஸ் இணையதளத்தில் இருந்த இந்த முன்பதிவு கேரள ஐகோர்ட் உத்தரவின் படி தற்போது தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் செயல்பட தொடங்கியது. மண்டல காலத்தில் தினமும் ஆறு 'சிலாட்'களில் தலா 20 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இவர்களுடன் நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஸ்பாட் புக்கிங் மூலமும் பக்தர்கள் சன்னிதானம் வரலாம். இதனால் மண்டல காலத்தில் தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது

     

  • Thirupathy calander online sale

    ஆங்கிலப் புத்தாண்டுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலண்டர், டைரிகளை வெளியிடுகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள் மற்றும் டைரிகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் அமேசான் மூலமாகவும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் உள்ள ‘பப்ளிகே ஷன்ஸ்’ மீது கிளிக் செய்து, டெபிட்/கிரெடிட் அட்டை மூலம் பணம்செலுத்தலாம். இவர்களுக்கு தபால் மூலம் காலண்டர்கள், டைரிகள் வழங்கப்படும்.

    இதுதவிர காலண்டர்கள், டைரிகளை அதிகமாக வாங்க விரும்புவோர், “தலைமை நிர்வாக அதிகாரி, தி. தி. தேவஸ்தானம், திருப்பதி” எனும் பெயரில் டி.டி. எடுத்துஅதனை, “சிறப்பு அதிகாரி, புத்தக விற்பனை மையம், பிரஸ்காம்பவுண்ட், கே.டி. ரோடு, திருப்பதி” எனும் முகவரிக்கு அனுப் பலாம். 

    வண்ணமயமான 12 பக்க காலண்டர்ரூ.130, பெரிய டைரி ரூ.150, சிறிய டைரிரூ.120, டேபிள்டாப் காலண்டர் ரூ.75, ஏழுமலையானின் தனி காலண்டர் ரூ.20, பத்மாவதி தாயார் தனி காலண்டர் ரூ.15, பத்மாவதி தாயார் சமேத ஏழுமலையான் காலண்டர் ரூ.15, தெலுங்கு பஞ்சாங்கம் ரூ.30 என விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி, திருமலையில் உள்ள அனைத்து புத்தக மையங்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் இவை கிடைக்கும்.

  • Sabari malai Online booking

    சபரிமலை  ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

    இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகமும், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக சபரிமலையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இணையதள முகவரி sabarimalaonline.org என்றும் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு செய்த பக்தர்கள் 17-ந் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Online Sevai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையில் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    டிசம்பர் மாதம் நடைபெறக்கூடிய இந்த கட்டண சேவைகளில் பங்கேற்பதற்கான டிக்கெட் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடபடுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களில் கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்களுக்கு 90 நாட்களுக்குள்  ஏழுமலையானை நேரில் வந்து தரிசனம் செய்வதற்கு இரண்டு பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

    டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் ஆன்லைனில் நடைபெறும் சேவையில் மட்டும் பங்கேற்கலாம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு அந்த சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுடன் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் கூடுதலாக பெற்று 90 நாட்களுக்குள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • Sabari malai Online booking

    புகழ்பெற்ற  சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய  ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. சபரிமலை: மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக, இந்த ஆண்டிற்கான ஆன்லைன் முன் பதிவு ( Virtual Q Booking Tickete ) நவம்பர்  1 (1/11/2020) முதல் தொடங்குகிறது !

    டிக்கெட்டுகள் நவம்பர் 1, 2020 முதல் ஜனவரி 14 / 2021 வரை மட்டுமே முன்பதிவு செய்யக் கிடைக்கும். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவினை தனிநபராகவோ  அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    தற்போதுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2500 பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. குறிப்பு: (1000 பக்தர்கள் அனுமதிப்பது தொடர்பான நிலைபாடு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது)

    முன் பதிவு செய்ய போட்டோஉடன் கூடிய அரசு ஆவணங்கள் தேவை என அறிவுருத்தப்பட்டுள்ளது. இதற்கு Aadhar Card, Pan card, voter ID, Driving licence இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் விண்ணுயிர் செய்யமுடியும் 
    முன்பதிவுசெய்ய 
    www.sabarimalaonline.org  எண்ற இணையத்தில் மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும் !

    மண்டல பூஜை டிசம்பர் 26 ம் தேதியும், 41 நாள் மண்டலபூஜை நிறைவடைந்த பிறகு (யாத்திரை காலத்திற்குப் பிறகு ) டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் திருகோயில் நடை அடைக்கப்படும்.
    இது மகரவிளக்கு புனித யாத்திரைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு 2021 ஜனவரி 14 ஆம் தேதி முடிவடைந்த பிறகு , கோயில் திருநடை ஜனவரி 20 ஆம் தேதி மூடப்படும். சபரிமலை நடை நவம்பர் 15 மாலை திறக்கப்படும்  பக்தர்கள் நவம்பர் 16 முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy November online ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்  நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.  

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை முதல் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தினந்தோறும் 16 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. 

    இந்த டிக்கெட்களை நாளை காலை 11.00 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற தேவஸ்தான இணையத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் பக்தர்கள் இந்த வாய்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.