Tag: Mandiram

  • Saibaba mandiram

    வாழ்க்கையில் வெற்றி தரும் சாய்பாபாவின் எளிய மந்திரம். 

    ஓம் சைதன்ய சாய்நாத் நமஹ –

    சீரடியில் வாழ்ந்த மகானான ஸ்ரீ சாய்பாபாவிற்குரிய எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை, இரவு என எப்போது உங்களுக்கு தோன்றும் போதும், எத்தனை முறை வேண்டுமானாலும் துதிக்கலாம். 

    வியாழக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் சாய் பாபா படத்திற்கு முந்திரிப் பருப்புகள் சிலவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து ஸ்ரீ சாய் பாபாவை வணங்குவதால் உங்களின் மனச்சோர்வுகள் நீங்கும். 

    உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சினைகளும் நீங்குவதற்கான வழியையும் காட்டுவார் ஸ்ரீ சாய் பாபா. மனம் என்ற ஒன்று நமக்கு இருக்கும் வரை பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். குழந்தைகள் மற்றும் ஞானிகள் இருவரும் கவலையின்றி இருப்பதற்கு காரணம் அவர்கள் மனம் அற்றவர்களாக இருப்பதால் தான். 

    அப்படி குழந்தை மனம் கொண்ட ஒரு ஞானியாக அவதரித்தவர் தான் சீரடி சாய்பாபா. அவருக்குரிய இந்த எளிய மந்திரத்தை துதிப்பதால் எல்லாவித நன்மைகளும் நமக்கு கிடைக்க பாபா அருள் செய்வார்.
     

  • Saibaba Gayathri Mandiram

    மதங்களை கடந்து அணைவராலும் வணங்கப்படுபவர் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை துடைப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பது மேலும் சிறப்பானதாக அமையப்பெறும்

    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே..

    சச்சிதானந்தாய தீமஹி..

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    இந்த மந்திரத்தை தினசரி 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை செபிப்பது உகந்தது. தினசரி ஜெபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்று வளமுடன் வாழ்வர்.
     

  • Kalvi Selvam tharum gayathri mandiram

    ஸ்ரீ லட்சுமி காயத்ரி மந்திரம்

    ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி

    தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்

     

     ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்

    ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி

    தந்நோ வாணி ப்ரயோதயாத்.

     

     ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு காயத்ரி மந்திரம்
    (கல்வி வளர)

    ஓம் வாகீச்வராய வித்மஹே 

    ஹயக்ரீவாய தீமஹி

    தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீராமர் காயத்ரி மந்திரம்

    ஓம் தாசரதாய விதமஹே

    சீதா வல்லபாய தீமஹி

    தந்நோ ராமஹ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீசீதா காயத்ரி மந்திரம்

    ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே

    பூமிஜாயை ச தீமஹி

    தன்னோ சீதா ப்ரசோதயாத்
     

  • Atchay thrudiyai mandiram

    நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" எனப் போற்றப்படுகிறது.

    'அட்சயம்' என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது. 

    இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.

    அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்: 

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
    சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
    ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ
     

  • Gayathri mandiram

    மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா கூறியிருப்பதன் மூலம் நம்மால் காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்ந்துகொள்ள முடிகிறது . மந்திரங்களுக்கெல்லாம் தாயாக விளங்குவது காயத்ரி மந்திரம் . மகரிஷி விசுவாமித்திரரால் மக்களுக்கு சொல்லப்பட்டது தான் மகிமை வாய்ந்த இந்த காயத்ரி மந்திரம் .

    காயத்ரி மந்திரம்:
    ஓம் பூர் புவஸ்ஸூவ

    தத் சவிதுர்வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி

    தியோ யோ ந: ப்ரசோதயாத்|

     காயத்ரி மந்திரத்தின் விளக்கம்:

    பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

    24 அட்சரங்களைக் கொண்ட காயத்ரி மந்திரதை  தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும் என்றும் ஜபிப்பவர்களுக்கு அளவற்ற சக்தியையும்  , வைராக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை .

     சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்களால் போற்றப்படும் காயத்ரி மந்திரம் ,காலையில்  காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டிலும்  காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
     
    ஒரு முறை பிரம்மா புஷ்கரம் என்ற புண்ணிய சேக்திரத்தில் ஒரு யாகத்தை தொடங்கினார் . அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி வராததால் , பிரம்மா தனத்து சக்தியின் பயனால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.காயத்ரி தேவியை நாமகளின் அம்சமாக கொண்டு நான்முகன் தனத்து யாகத்தை நிறைவு செய்தார்  என்கிறது புராணம் .  செந்தாமரையில் எழுந்தருளிய அன்னை ஐந்து திருமுகங்களும் பத்து கரங்களும் கொண்டு அழகே உருவாக திகழ்கிறாள் .
     

  • Murugan Mandiram

    ஓம் முருகா, குரு முருகா, 

    அருள் முருகா, ஆனந்த முருகா

    சிவசக்தி பாலகனே 

    ஷண்முகனே சடாக்ஷ்ரனே

    என் வாக்கிலும் நினைவிலும் 

    நின்று காக்க

    ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

    முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்….

    சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே

    தன முதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே

    பகை பிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே

    பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே

    சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே

    சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே

    அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

    ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே

    மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்  அருளியது  

    எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து 

    திருநீறு  அணிந்து செல்ல கரிய வெற்றி உண்டாகும்.

  • Murugan Mandiram

    மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.

    மனோவியாதியை குணமாக்கும் முருகப்பெருமான் மந்திரம்
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.

    ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்

     ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
    நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
    பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

    பொருள் :

    ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே, அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே, உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.

  • Gayathri Mandiram vazhi muraigal

    வேதத்தினுடைய சாரம் காயத்ரியில் அடங்கியிருக்கிறது. மானுட வாழ்க்கையின் இலட்சியத்தை அது விளக்குகிறது.  காயத்ரி மந்திரம் பிரார்த்தனையாகவும், தியான சுலோகமாகவும், அமைந்திருக்கிறது.  பரபிரம்மத்தின் அம்சங்களாகிய பல தெய்வங்களுக்கு பல காயத்ரி மந்திரங்கள் அமைந்திருக்கின்றன.  அவைகளை தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி, விஷ்ணு காயத்ரி, சுப்ரமணிய காயத்ரி, கணேச காயத்ரி என பாகுபடுத்தலாம்.  

    இத்தனை வித காயத்ரிகளுள் நாடு முழுவதும் பல்லாண்டுகளாகப் பொதுவாக இருந்து வருகிற காயத்ரி ஒன்றேயாம்.  இது பிரம்ம காயத்ரி அல்லது சூரிய காயத்ரி என்று அழைக்கப்படுகிறது.  

    காயத்ரி மந்திரத்தை சொல்லும் வழிமுறைகள்…. 

    * காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.
    * கிழக்கு முகமாக அமருங்கள்.
    * ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.
    * மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்…

    காயத்ரியை வழிபடுபவன், காயத்ரி மந்திரத்தைச் சரியாக அறிந்து உபயோகப்படுத்துகிறவர்கள் எல்லோரும் துவிஜர்கள் ஆகின்றனர்.  துவிஜன் என்றால் இரு பிறப்பாளன்.  தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வருவது ஒரு பிறவி.  தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத்திருத்தி அமைக்க ஆரம்பிக்கும் பொழுது மனிதன் ஆன்மீகத்துறையில் இன்னொரு பிறப்பு எடுத்தவன் ஆகிறான்.  ஆகையினால், அவன் துவிஜன்- இரு பிறப்பாளன் என்று சொல்லப்படுகிறான்.  அதற்குத் தூண்டுதலாக வந்தமைந்ததிருப்பது காயத்ரி மந்திரம்.