Tag: Mandiram

  • Garuda mandiram

    ஸ்ரீ கருட பகவான் மந்திரத்தை ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். 

    ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே, இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர். இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும்.

    இந்த கருட துதியை நோயுற்றவர்கள் அல்லது அவர்களது சார்பாக யாரேனும் ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து தரிசனம் செய்தால், விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பும், நோய்கள் விலகும் என்பது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை. 

    கருடனை செல்வத்தின் சின்னமாக கருதுகின்றனர். அது கூர்மையான பார்வை கொண்டது. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உலவும் மற்ற வஸ்துக்கள் அதன் பார்வைக்குத் தெரியும். தொலைநோக்குப் பார்வை கொண்டது அது. காக்கும் கடவுளான திருமால் அதை வாகனமாக ஏற்றார்.

    நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.

    அந்த கருட மந்திரம்…
    சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க 
    ஸ்ரீ கருட காயத்ரி 

    ஓம் தத்புருஷாய வித்மஹே|
    ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
    தன்னோ கருட ப்ரசோதயாத் ||                                          

  • Mesham to midhunam murugan mandiram

    வாழ்வில் மனிதனாக பிறந்து விட்டால் ஒவ்வொரு விஷயங்களிலும் தன் கர்ம வினைக்கு ஏற்ப வரக்கூடிய பலன்களையும் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது சாஸ்திரம். இருப்பினும் நம் கர்மவினை குறைந்து பிறவிப்பயன் அடைய, நம் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க, சங்கடங்கள் தீர, செல்வம் பெருக தினமும் சொல்ல வேண்டிய எளிய அதி சக்தி வாய்ந்த மந்திரம் என்ன..?

    முதல் மூன்று ராசியினர் அதாவது மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் முருகனுடைய இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் வாழ்வில் நிச்சயம் ஏற்றம் பெறலாம்.

    முருகன் மந்திரம்: 

    பேர் ஆதரிக்கும் அடியவர்தம் பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும் பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா!

    சேரா நிருதர் குல கலகா! சேவற்கொடியாய்! திருச்செந்தூர்த் தேவா! தேவர் சிறைமீட்ட செல்வா! என்று உன் திருமுகத்தைப் 

    பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர் பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா! வா, வா, என்று உன்னைப் போற்றப் பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால் 

    வாராது இருக்க வழக்கு உண்டோ! வடிவேல் முருகா! வருகவே! வளரும் களபக் குரும்பை முலை வள்ளி கணவா! வருகவே!

  • Anjaneyar Gayathri Mandiram

    சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம். 

    அசாத்ய சாதக ஸ்வாமிந் 

    அசாத்யம் தவகிம்வத 

    ராம தூத க்ருபாசிந்தோ 

    மத் கார்யம் சாதய ப்ரபோ

    ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம்…. 

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

    வாயுபுத்ராய தீமஹி 

    தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத் 

    அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு. எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே. சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம்.

  • Soorya graganam mandiram

    யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:|

    ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்||

    எளிய மந்திரங்கள் :

    ஓம் சிவாய நமஹ

    ஓம் கணபதியே நமஹா

    ஓம் சரவண பவ

    என நமக்கு தெரிந்த மந்திரங்கள் தெரியுமோ, உங்களுக்கு எந்த சுவாமி பிடிக்குமோ அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம். அதை தொடர்ந்து சொல்லி வருவது நல்லது. இவற்றை ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிடைக்கும். அதோடு இதனால் உங்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்கள் நீங்கும்.
     
    கிரகணம் முடிந்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். அதன் பின்னர் சுவாமி வழிபாடு செய்ய வேண்டும்.

     கிரகண தோஷங்கள் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கும். பக்‌ஷி தோஷம், சர்ப்ப தோஷம் எளிதில் உட்கிரகிக்கும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது. படியில் அமரக் கூடாது. இதனால் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அவர்களும் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

  • soorya mandiram

    சூரிய மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வர மனம் மற்றும் உடல் பலத்தை பெறுவதோடு, அனைத்து வித நோய்களும் நீங்கி நலம் பெறலாம்.
        
    நாம் தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும். அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூரிய மந்திரங்களை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம்.

    அதே போல் நீராடி சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல சூரிய பகவானின் அருள் நிறைந்து கிடைக்கும்.

    சூரிய காயத்ரி :
    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்.

    காயத்ரி மந்திரம் 2
    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்.

    சூரிய பகவான் மந்திரம்
    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி..

    தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம். ஞாயிறு கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் சொல்ல இந்த மந்திரத்தில் மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
     

  • ANJANEYAR MANDIRAM

    மூச்சுத்திணறல் போன்ற சிரமப்படுத்தும் வியாதிகள் இருந்தால் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்ற பாடலை ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் அமர்ந்து பாடினால் சரியாகி விடும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஏனெனில், தன் புத்திரனை வணங்குவோருக்கு வாயு பகவான் நிச்சயம் கருணை செய்வார்.

    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்றாராகஆரியர்க்காக ஏகி

    அஞ்சிலே ஒன்று பெற்றஅனங்கைக் கண்டு அயலார் ஊரில்

    அஞ்சிலே ஒன்றை வைத்தான்!அவன் நம்மை அளித்துக் காப்பான்!

    பாடலில் நிலம்,நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தில் இருந்து விடுபட  இந்த் பாடலைப் பாடி அனுமனை வழிபடலாம். ஆஞ்சநேய தரிசனம் கடலினும் ஆழமான கவலைகளைக் கூட கரைத்து ஆனந்தமளிக்கும் என்பதற்கு மைநாக மலையின் கதையே உதாரணம்.

    தன்னைத் தாண்டிச் செல்பவர்கள் யாராயினும்  வாயில் புகுந்து வெளியேறிச் செல்ல வேண்டும்.  என்றாள். இருவரும் மாறி மாறி அளவைக் கூட்ட ஆஞ்சநேயர் திடீரென தன் அளவை மிகமிகச் சுருக்கி கட்டை விரல் அளவுக்கு மாறி, அவள் காது வழியே வெளிப்பட்டார்.

    சுரஸை தன் சுயரூபமான தேவமங்கை வடிவம் காட்டி, ஆஞ்சநேயனே! நீ மாபெரும் வீரன். நீ செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,  என ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாள்.

    வீட்டில் குழந்தைகளிடம் பூதம் வருகிறது, பேய் வருகிறது, பிசாசு வருகிறது என்றெல்லாம் நாம் பயமுறுத்தக்கூடாது. அவை வந்தாலும், நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கற்றுத்தர வேண்டும்.

    ஆஞ்சநேயர் சுரஸையிடம் தப்பித்துச் சென்ற இந்த வரலாறைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, கல்வியறிவும் விருத்தியடையும்.

  • Saibaba Mandiram

    வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்கிற தீவிர ஆர்வம் இன்று அனைவரிடமும் நிறைந்திருக்கிறது. அப்படி வெற்றி கிடைக்காத பட்சத்தில் எளிதில் மனம் தளர்ந்து மனச்சோர்வு அடைந்து எதிலும் கவனம் செலுத்தி செயல்பட முடியாத நிலையும் ஏற்படுகிறது. நமது கவலைகளை தீர்ப்பதற்காக இறைவனின் வடிவாக பூமியில் தோன்றியவர் தான் “ஸ்ரீ சீரடி சாய்பாபா” அவருக்குரிய எளிய மந்திரம்.

    ஓம் சைதன்ய சாய்நாத் நமஹ –

    சீரடியில் வாழ்ந்த மகானான ஸ்ரீ சாய்பாபாவிற்குரிய எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை, இரவு என எப்போது உங்களுக்கு தோன்றும் போதும், எத்தனை முறை வேண்டுமானாலும் துதிக்கலாம். வியாழக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் சாய் பாபா படத்திற்கு முந்திரிப் பருப்புகள் சிலவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து ஸ்ரீ சாய் பாபாவை வணங்குவதால் உங்களின் மனச்சோர்வுகள் நீங்கும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சினைகளும் நீங்குவதற்கான வழியையும் காட்டுவார் ஸ்ரீ சாய் பாபா. 

    மனம் என்ற ஒன்று நமக்கு இருக்கும் வரை பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். குழந்தைகள் மற்றும் ஞானிகள் இருவரும் கவலையின்றி இருப்பதற்கு காரணம் அவர்கள் மனம் அற்றவர்களாக இருப்பதால் தான். அப்படி குழந்தை மனம் கொண்ட ஒரு ஞானியாக அவதரித்தவர் தான் சீரடி சாய்பாபா. அவருக்குரிய இந்த எளிய மந்திரத்தை துதிப்பதால் எல்லாவித நன்மைகளும் நமக்கு கிடைக்க பாபா அருள் செய்வார்..
     

  • Garuda Mandiram

    கருட சேவை:
    பக்தர்களைக் காப்பதற்காக திருமால் கருடவாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வு மூலம் இதை அறியலாம்.  இதனை  "ஆனை துயரம் தீரப்புள்ளூர்ந்து நின்றாழி தொட்டானை' என்கிறார் திருமங்கையாழ்வார்.

    கருட சேவையின் போது காக்க நீ வருவாயே கருடனேறி, என்று பக்தர்கள் பாடுவர். ஆசித் எனப்படும் சப்பரத்தின்மேல் சித் எனப்படும் கருடன் வீற்றிருந்து, ஈஸ்வரனாகிய எம்பெருமானைச் சுமந்து வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருட சேவையாகும்.  கருட சேவையை பெரிய திருவடி சேவை என்றும் கூறுவர். காஞ்சி, திருமலை, திருநாங்கூர், திருவரங்கம், நாச்சியார் கோயில், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம் போன்ற தலங்களின் கருட சேவைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

    கருட வியூகம்:
    கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர் முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒருநாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.

    கருட மந்திரம் :
    "குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
    விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம'
    என்னும்  கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும்.  

    கருடாழ்வானின் பகவத் தொண்டு:
    ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பகவத் தொண்டு செய்யும் நித்திய சூரிகளான  மூவரில் அனந்தன், விஷ்வக்சேனர்களுடன் கருடாழ்வானும் ஒருவன். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரிடாசலம் என்ற விமானத்தை திருமலைக்குக் கொண்டுவந்து அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தான்.  அதுவே கருடாத்ரி என்பதாகும்.

    எம்பெருமான் திருக்கோயில்களில் கருவறைக்கு எதிரே கைகூப்பி எம்பெருமானைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து, துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும என்பது நெறிமுறையாகும்.  

    கருடனும் அஹோபிலமும்:  
    கருடன், அஹோபிலத்தில் கடுந்தவம் புரிந்து பிரகலாதனுக்கு காட்சியளித்ததைப் போல் தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென்று ஸ்ரீ நரசிம்மரை வேண்டினான். நரசிம்மரும், கருடன் வேண்டுக்கோளுக்கிணங்கி ஜ்வாலா நரசிம்மராகக் காட்சி கொடுத்தருளினார்.

    கருட புராணம்:
    ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்படுகிறது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்
     

  • Maha vishnu mandiram

    பாஞ்சஜன்யம் – சங்கு 

    விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
    யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
    தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
    சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே!  

    மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால் அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

    கௌமோதகம் – கதை 

    ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்
    கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம் வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்
    கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 

    பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.
     

    நந்தகம் – வாள் 

    ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
    சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
    தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
    கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே 

    கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடைகிறேன்.
     

  • Sarabeswarar gayathri mandiram

    காயத்ரி மந்திரம்…

    ஓம் ஸாலுவேசாய வித்மஹே
    பஷீ ராஜாய தீமஹீ
    தந்நோ சரப ப்ரசோதயாத்.

    108 முறை இந்த காயத்ரி மந்திரம் சொல்வதினால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உடனே சரியாகும்.

    கஷ்டங்கள் தீர்க்கும் சரப கவசம் 

    நநிஷ்காஸநாய
    ஸர்வகாஸநாய
    ஸர்வஸர்வ பூத உச்சாடனாய
    க்ரஹ ரக்ஷாய நிவாரணாய
    ஜ்வாலா மாலா,
    ஸ்வரூபக தக்ஷ நிஷ்காஸநாய
    ஸாக்ஷாத் காள,
    ருத்ரஸ்வரூப,
    அஷ்டமூர்த்தயே,
    க்ருஸாநுரேதஸே
    மகா க்ரூர பூத உச்சாடனாய
    அப்ரதி ஸயநாய ஸத்ரு ம்ஷ்வநாஸய
    ஸத்ரு பஸூன் க்ருஹ்ண க்ருஹ்ண ரவாத்
    ஓம் ஹூம் பட் ஸ்வாஹா
    ஓம் நமோ பகவதே
    சரபாய ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல
    ஸாத்யம் ஸாதய ஸாதய
    ரக்ஷ ரக்ஷ ஸர்வ பூதேப்யோ
    ஹூம் பட் ஸ்வாஹா!

    9 முறை மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்.. சரபேஸ்வரரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி, சூனியம், ஏவல் பிரச்சினைகள் உடனே தீரும்.