ஆகஸ்ட் 21 – திருவோணம் பண்டிகை
பிலவ வருடம் – ஆவணி 5
ஓணம்
21-ஆக-2021 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி இ 7.19
நட்சத்திரம் : திருவோணம் இ 9.22
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: Festival
-
August 21 2021 Oonam Festival
-
March 27 Palani murugan car festival
மார்ச் 27 – பழநி முருகன் திருக்கல்யாணம்
சார்வரி வருடம் – பங்குனி 14
திருச்சுழி சிவன் தேர்
27-மார்-2021 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி ந.இ 3.12
நட்சத்திரம் : பூரம் இ 7.09
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
pongal festival celebration
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி நம் வாழ்வில் வளம் பெறலாம். அந்த வகையில் நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம். சரி பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை தற்போது பார்க்கலாம்….
ஜனவரி 14 – தை 1 வியாழக்கிழமை – தை பொங்கல்
தை 1 (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை சுப தினத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் வருகிறது.
பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தைத் தவிர்க்கவும்.
எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
இராகு காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
-
Oonam Festival History
மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது ஓணம் பண்டிகை. சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு கேரளாவில் ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
புராண காலத்தில் மகாபலி சக்ரவர்த்தி மலையாள தேசத்தை ஆண்டு வந்தான். அவன் பிறப்பால் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். ஏராளமான தான, தர்மங்களை செய்தான். இதனால் மகாபலி சக்ரவர்த்தியை மக்கள் போற்றி புகழ்ந்தனர். மூவுலகையும் ஆளும் எண்ணம் மகாபலி சக்ரவர்த்தியின் மனதில் பேராசையாக எழுந்தது. தங்கள் குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டான். சிவபெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் நடத்த வேண்டும் என்று சுக்ராச்சாரியார் கூறினார். யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மகாபலி மேற்கொண்டான்.
இந்நிலையில், மகாபலியின் யாகம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்திரனிடம் முறையிட்டனர்.
இதைக் கேட்டதும், மகாபலி இந்த யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டால், அசுர குலத்தை சேர்ந்த மகாபலிக்கு இந்திர பதவி கிடைத்து விடும். அதனால் மூவுலகும் பாதிக்கும் என்று இந்திரன் கலக்கமடைந்தான். உடனே, பிரம்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டான். இதற்கு மகாவிஷ்ணு மட்டுமே தீர்வு காண முடியும் என்று பிரம்மா கூறி, இந்திரனையும், தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்றார்.
அவர்களின் மனக்குமுறல்களை கேட்ட மகாவிஷ்ணு, ‘நான் பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் யாகத்தை தடுத்து நிறுத்துகிறேன்’ என்றார். அதன்படியே, மகாவிஷ்ணு மூன்று அடி உயரமுள்ள வாமன அவதாரம் எடுத்து, பூலோகத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்துக்கு சென்றார்.
யாகசாலையின் வாசலில் மகாபலியிடம் ஏராளமானவர்கள் தானம் பெற்று கொண்டிருந்தனர். மூன்று அடி உயர வாமனர், ஒரு கையில் ஓலை குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தையும் ஏந்தியபடி வரிசையில் நின்றார். அவரது முறை வருவதற்கு முன்பே தானம் நிறைவுற்றது. யாகசாலை வாசலில் குடை பிடித்தபடி அந்தணர் உருவில் நின்ற வாமனரைப் பார்த்ததும் மகாபலி எழுந்து வந்தான். ‘நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டான்.
வாமனரும் எனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட மகாபலி, வாமனரின் கையில் இருந்த கமண்டல நீரை எடுத்து தானம் அளிக்க முன்வந்தான்.
அப்போது, சுக்ராச்சாரியார் அவனை தடுத்து, ‘வந்திருப்பது மகாவிஷ்ணுவாக இருக்கும், எதையும் யோசித்து செய்’ என்று எச்சரித்தார். ஆனால், மகாபலி, ‘என் தானத்தின் அருமை அறிந்து மகாவிஷ்ணுவே தானம் பெற வந்திருக்கிறார். அவருக்கு தானம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றான். உடனே, சுக்ராச்சாரியார் கருவண்டாக உருமாறி, கமண்டல நீரின் வழியை அடைத்தார். வாமனர், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்தினார். பின்பு, வாமனரிடம் இருந்து கமண்டல நீரை எடுத்து, நிலத்தில் விட்டு மகாபலி தானமாக வழங்குவதாக கூறினான்.

உடனே, வாமனர் விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந் தார். ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே’ என்று மகாபலியிடம் கேட்டார். இதை பார்த்து பரவசப்பட்ட மகாபலி, மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள்’ என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலி சக்ரவர்த்தியை பாதாள உலகுக்கு அனுப்பினார்.
பாதாள உலகத்துக்கு தள்ளிய மகாவிஷ்ணுவிடம், ‘கடவுளே, நான் இதுவரை என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே, வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்’ என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தருளினார்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
-
Bogi Festival
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழையபொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகி பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.
பழைய பொருட்களையும், பயனற்றவையும்விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது போகிப் பண்டிகை. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம்.
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்துதமிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பழையபொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.
பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான் பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.
போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றைதீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால்வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என நம்பப்படுகிறது. பிறகு வீட்டின் வாயிலை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அழகான கோலம்போடப்படும்.
போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவைபடைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில்உள்ளது. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களைஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போதுகுழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகிபண்டிகை அமைந்திருக்கும்.
-
Mariamman Koil Festival
திருச்செங்கோட்டில் 18 மாரியம்மன் கோயில்களிலும் இன்று கம்பம் விடும் விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.

பக்தர்கள் பல்வேறு வேடங்களை இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர் பாடை வேடமிட்டு பிணம் போல் படுத்து வந்தவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர் இதனையடுத்து பக்தர்கள் தெப்பக்குளத்தில் பூஜைகள் செய்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.


இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு மிளகு ஆகியவற்றை கம்பங்கள் மேலும் கும்பங்கள் மீதும் தூவி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
-
Vinayakar chadurthi Festival
விநாயகர் சதுர்த்தி நாள் விநாயகருக்கு மிகவும் விசேஷமான நாள்! இந்நாள் அன்று, பின்வருவதைக் கடைபிடிப்பது சிறப்பு…
அதிகாலையில் குளித்து, வாசலில் மாவிலைத் தோரணத்தைக் கட்டி, வீட்டை மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த நாள் அன்று காலையில் இருந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு.
பூஜை அறையில் ஒரு சிறிய கோலம் போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை வைத்து, இலையில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.
அந்த இலையில் களிமண்ணாலான விநாயகரை வைத்து, அவரைப் பலவகை புஷ்பங்கள் மற்றும் அறுகம்புல் மாலையினால் அலங்கரிக்க வேண்டும்.
அதன் பிறகு, அவருக்குப் பழங்களைப் படைத்து, அதனுடன் அவர் விரும்பும் மோதகம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, நெய்வேத்தியம், பாயாசம் போன்ற பலகாரங்களைச் செய்து படைக்க வேண்டும்.
விநாயகரின் பாடல்களைப் பாடி வணங்கி, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக, களிமண்ணால் செய்யப் பட்ட இந்த விநாயகரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.
-
Muthu Maariamman Festival
காளையார்கோவில் முத்துமாரியம்மன் ஆலயம் மது எடுப்பு விழா. மழை வேண்டி பெண்கள் மது குடங்களை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சோமசுந்தரம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி உற்சவம் விழாவை முன்னிட்டு மது எடுப்பு உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆடிமாத உற்சவ விழா கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, நேர்த்திக்கடன் இருந்த பக்தர்கள் இன்று மது குடங்களை தலையில் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து வாள் மேல் நின்ற அம்மன் கோவில் குளத்தில் கரைத்தனர்.
முன்னதாக விரதம் இருந்த பெண்கள் கோயில் முன்புறம் ஒன்று கூடி கரகம், மதுக்குடங்களை வைத்து கும்மியடித்து, மழை வேண்டி அம்மனிடம் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து வாள் மேல் நின்ற அம்மன் ஆலய குளத்தில் தாங்கள் கொண்டு வந்த மதுக்கூட புனித நீரை ஊற்றினர்.
மழை வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் ஜாதி மதம் கடந்து ஏராளமான பெண் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றிட அம்மனை மனம் உருக வழிபட்டுச் சென்றனர்
-
April 6 Ugadi Festival
விளம்பி வருடம் – பங்குனி 23
தெலுங்கு புத்தாண்டு
06-ஏப்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : பிரதமை
திதி நேரம் : பிரதமை ம 3.49
நட்சத்திரம் : ரேவதி கா 7.44
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சித்திரை
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Koovagam chithirai Festival
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலகபுகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரகணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் நேற்று வெகுவிமர்சையாக தொடங்கியது.

இதில் கூவாகம், நத்தம், தொட்டி, குப்பம், வேலூர் உட்பட ஏழு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து படையல் செய்தனர். பின்னர் படையில் இடப்பட்ட கூழ் அங்குள்ள பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வருகின்ற 16-ம் தேதி நடைபெற உள்ளது. மறுநாள் தேரோட்டம் நடைபெற்று, பின்னர் பந்தலடியில் திருநங்கைகளுக்கான தாலி அகற்றும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.