Tag: Dharshan

  • Thirupathy Dharshan Cancel

    பிரம்மோற்சவத்தை ஒட்டி திருப்பதியில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து 5 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் வரும் 30-ம்தேதி முதல் அக்.8-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவில் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. அதனால் நாளை காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.

     ஆண்டுக்கு 4 முறை வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோவில் சுத்தப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
     

  • Thirupathyil Adhar Dharshan cancel

    திருப்பதியில் ஆதார் அட்டை மூலம் வழங்கப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்கள் வழங்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்க, ‘சர்வ தரிசனம் டிக்கெட்’ என்ற பெயரில் ஆதார் அட்டை மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தேவஸ்தானம் தொடங்கியது.

    முதலில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை தினமும் வழங்கும் திட்டம் தொடங்கியது. இந்த டிக்கெட்கள் திருப்பதி பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் எதிரில் உள்ள  விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. திருமலையில் 8 கவுன்ட்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் இந்த டிக்கெட்டுக்கு பக்தர்களிடம் இருந்து படிப்படியாக ஆதரவு குறைவதாக கூறி டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தானம் குறைத்தது. இருப்பினும், இந்த டிக்கெட்களை பெற மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக்கூறி, திருமலையில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
     

  • Atthi Varadha 47 days 1 crore dharshan

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் கடந்த மாதம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்றது. ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெற்ற அத்தி வரதர் வைபவத்தின் இறுதிநாளான இன்று, மீண்டும் அனந்த புஷ்கரணியில் மீண்டும் சயன நிலையில் வைக்கப்பட உள்ளார். 

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என பல்வேறு அலங்காரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சிஅளித்துள்ளார். முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர். 

    தினமும் லட்சக்கணக்கான பகதர்கள் தரிசனம் செய்த நிலையில் 47 நாட்களில் 1 கோடியே 7 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

  • Atthivaradhar Dharshan more 6 days

    காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் நீருக்குள் இருந்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பின் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 1979-ம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. 
     
    தற்போது 40 ஆண்டு களுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த விழா கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு 17-ந்தேதி வரை 48 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

    அத்திவரதரை தரிசிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுடன் சேர்த்து இன்னும் 6 நாட்களே உள்ளது. அத்திவரதரை தரிசிக்க குறைவான நாட்களே உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாளாகும். எனவே அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்று பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு படையெடுத்து வருகிறார்கள்.
     

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16 ஆம் தேதி 5 மணி நேரம் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் சர்வ தரிசனம் மற்றும் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கள் வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது தேவஸ்தானம் அறிவிப்பு

    17ஆம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4. 29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி சந்திர கிரகணம் ஏற்படும் ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. 

    மேலும் 17 ஆம் தேதி ஆனிவார ஸ்தானம் எனப்படும் சம்பிரதாய முறைப்படி பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணிவரை கோவில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே  12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அன்று அனுமதிக்கப்பட உள்ளனர். 

    மேலும் சந்திர கிரகணத்தையொட்டி அன்று மாலை 6 மணியுடன் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே 16ம் தேதி மதியம் 12 மணி முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே  அன்று ஆதார் அட்டை மூலமாக வழங்கக்கூடிய சர்வ தரிசனம் டிக்கெட் மற்றும் மலைப்பாதையில் நடந்து வரக்கூடிய பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. 

    17 ஆம் தேதி சந்திர கிரகணம் நிறைவடைந்த பிறகு 5 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு  கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ,கொலுவு ஆகியவை ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து ஆனி வார ஆஸ்தான சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு மதியம் 12 மணிக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி ஜூலை 16ம் தேதி இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. 

    பின்னர் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து தோமாலை சேவை,  பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும்  நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

    16 ஆம்  தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்துடன் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளதால் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோன்று 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ,வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy 26 lakhs people dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம்  25.89 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

    மே மாதத்தில் மட்டும் 1 கோடியே 11 லட்சத்து 63 ஆயிரத்து 665 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 12 லட்சத்து 66 ஆயிரத்து 432 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் 89.02 கோடி ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு அறைகள் வாடகைக்கு விட்டதன் மூலமாக 7.24 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Thirupathy Dharshan Ticket

    திருப்பதியில் திருமலையில் ஆர்ஜித சேவையில் ஏழுமலையானை தரிக்க மார்ச் மாதத்துக்கு குலுக்கல் முறையில் நிலுவையில்  டிக்கெட்டுகளின் பட்டியலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதள மூலம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த
    ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட்டுகளை ரத்து செய்து விடுகின்றனர். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு அளிக்கிறது.  

    இந்த டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயர், ஆதார் எண், பெருவிரல் ரேகை, கைபேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து சேவா டிக்கெட்டுகளை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி அதில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவர். தகவல் பெற்ற பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்தில் தங்கள் டிக்கெட்டுகளை பெற்று மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு சென்று ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். 

    அதன்படி மார்ச் மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.