Tag: Dharshan

  • thirupathy perumal dharshan

    உலகில் பழமையான மலைகளில் இரண்டாம் நிலையில் உள்ள சிலாதோரணம்  இங்கு தான் உள்ளது  சங்க இலக்கியங்களில்  திருமலையானுக்கு இட்ட பெயர் வெறுங்கை வேடன்.
       
    கோவில் கட்டிய வரலாறு அறிய முடியவில்லை  ஆகாசராஜனின் தம்பி தொண்டைமான் என்கிறது தலபுராணம். சோழர் பல்லவர்  பாண்டியர் சாளுக்கியர்  விஜய நகர  மன்னர்களால்  பராமரிப்பு செய்த கல்வெட்டு உண்டு  பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகள் தான் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் ஆச்சார அனுஷ்டங்கள் முறைப்படுத்தப்பட்டது.

    மதுரை மீனாட்சி ஸ்ரீ ரங்கம் கோவில்கள் இஸ்லாமிய படையெடுப்பில்  சூறையாடப்பட்ட போது  தென் இந்தியாவில் தப்பிய கோவில் இது மட்டுமே  (இதன் பிண்ணனியில் ஒரு செவிவழி கதை  மலைமீது என்ன கோவில் என்ற போது வராகர் என்பதை பன்றி கோவில் என்றதால்   இஸ்லாமியர் போகவில்லை என்று  சொல்கிறார்கள் )

    வருடத்தில் 365 நாள்கள் மட்டுமே  வருடத்தில் இங்கு 450 திருவிழா நடைபெறுகிறது தலவிருட்சம் புளியமரம். பெருமாளுக்கு நைவேத்தியம் தயிர் சாதம் மட்டுமே மண் பாத்திரத்தில் .

    சந்திர ஸ்தலம் என்னும் நமது நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட விஷயம். திருப்பதி குலதெய்வம் என்று சொல்பவர்கள் அதிக உண்டு  ஒரு காலத்திலும் அப்படி இருக்க வாய்ப்பில்லை  தமிழராக பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குலதெய்வம் என்பது கிராம தேவதைகளாக தான் இருக்கும்   சிலரின் தவறான கருத்து முறையில் முன்னோரின் தொடர்பின் மை காரணமாக  பெயர் பெற்ற கோவிலை குலதெய்வமாக அங்கீகாரம் செய்து கொண்டார்கள்.

    திருப்பதி செல்லும் முன் குலதெய்வத்தை வழிபட்டு தான் புறப்பட்டு செல்ல வேண்டும்  (திருப்பதி தேவஸ்தான அறிவிப்பில் இந்த வார்த்தை அறிவுறுத்தலில் இடம் பெற்ற இருக்கும்  )

    முன்பு பல நாட்கள் பயணப்பட்டு திருப்பதி செல்வார்கள்  இப்போது  இப்படி போய்  அப்படி வந்துவிடலாம். அகோபில முதலாம் ஜீயர் சுவாமிகள் ஸ்ரீ  சடகோப யதீந்திரா மகா தேசிகர்  தான் முதலில் மலைமீது செல்ல படி அமைத்தார்கள்
              
    மலைக்கு செல்லும் இரண்டாம் நடை வழி  ஸ்ரீ வாரி மெட்டு  திருப்பதிக்கு 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீ நிவாசமங்காபுரத்தில் மலைக்கு போகலாம் ஆந்திரப் பிரதேச மக்கள் இந்த வழியில் தான் மலைக்கு நடைபயணம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை எப்படி மலையே சிவனாக இருப்பது போல திருப்பதி மலையே பெருமாளாக நினைத்து மலையேறும் முன் மலையை தொட்டு வணங்க வேண்டும் (காலால் மிதித்து நடப்பதற்கு பெருமாளிடம்   உத்தரவுபெற இதன் பிண்ணனியில் எனக்கு ஒரு அனுபவம் உண்டு  2003 ல் திருப்பதி  புராணம் படித்தேன் அதை படித்து விட்டு  சரி மலைக்கு போகும் போது  மிதியடி போடாமல் நடக்க வேண்டும் என்று எண்ணி கொண்டேன் அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து தான் மலைக்கு போனேன் இந்த மிதியடி விஷயம் மறந்து விட்டேன் காரில் இருந்து இறங்கி  ஒரு அடி எடுத்து வைத்தேன் புது மிதியடி  அறுந்தது    அந்த நொடி தான் நினைவுக்கு வந்தது  என் சங்கல்பம்   அதோடு சரி அந்த முறை மூன்று நாட்களாக மலையில் தங்கி இருந்தோம்  மூன்று நாட்களும் வெறும் காலாக தான் நடந்தேன்  அதன் பிறகு இன்று வரை மலைக்கு போகவில்லை)

    திருப்பதி போனால் பலர் நேராக பெருமாள் தரிசனம் தான் செய்கிறார்கள்   இப்படி செய்வது தவறு. சிவன் கோவிலில் முதலில் சிவ தரிசனம் செய்து விட்டு மற்ற பரிவாரங்களை தரிசனம் செய்ய வேண்டும் ஆனால் பெருமாள் கோவிலில் முதலில்  அனுமான் தாயார் கருடன்   பிறகு தான் பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும்.

    திருமலைக்கு செல்லும் முன் முதலில்  அலமேலுமங்காபுரம் என்னும் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து தான் தான் மலைக்கு செல்லவேண்டும். 

  • Sabari malai dharshan niraivu

    சபரிமலையில் இன்றுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறைவு நாளை பந்தள மகாராஜா வுக்கான தரிசனத்துடன் மகரவிளக்கு தரிசனம் பூஜைகள் நிறைவடைந்து நடை சாத்தப்படும்.

    சபரிமலை கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி மண்டல மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்காக பூஜைக்காக திறக்கப்பட்டது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் முதலில் ஆயிரம் பக்தர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர் அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் சன்னிதானத்தில் ஐயப்ப தரிசனம் செய்தனர் கடந்த ஜனவரி 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது தொடர்ந்து கோவிலில் 5 நாட்கள் முக்கிய சடங்குகள் நடைபெற்றது.

    சபரிமலையை பொருத்தவரை மகரஜோதி தரிசனத்திற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து ஐயப்பனுக்கு சாப்பிடுவதற்காக திரு ஆபரண பெட்டி கொண்டுவரப்படும் ஒரு பெட்டியில் திரு ஆபரணங்களும் மற்ற இரண்டு பெட்டிகளில் கோவிலில் ஐந்து நாட்கள் நடைபெறும் சடங்குகளுக்கான கொடி மற்றும் பூஜைக்கான சிறப்பு பொருட்களும் இருக்கும் திரு ஆபரண பெட்டி சன்னிதானத்தில் மற்ற பூஜைகளுக்கான இரண்டு பெட்டிகள் மணி மண்டபத்திலும் வைக்க எடுத்துச்செல்லப்படும் ஜோதி தரிசனம் முடிந்த பிறகு முதல் களம் எழுத்து என்று சொல்லப்படும்.

     சடங்கு அனைத்தும் சபரிமலையில் பதினெட்டாம் படிக்கட்டின்கீழ் நடைபெறும்  தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று ஐயப்பன் ஆயுதங்களை விட்டுச்சென்ற சரங்கொத்தியில் குருதி பூஜை என்று அழைக்கப்படும் வன தேவதைகளுக்கும்  மலை தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் ஐந்தாம் நாளான சடங்குகள் மட்டும் சரங்கொத்தியில் நடைபெறும் இதில்  நிகழ்வு முடிந்தவுடன் அனைத்து பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் சன்னிதானத்தை விட்டு புறபட்டு விடுவார்கள் அதன் பிறகு இன்று மாலையுடன் மகரவிளக்கு மற்றும் மகர ஜோதி தரிசனம் நிறைவு  பெரும். 

  • Thirupathy Free Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்படும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக ஏற்கனவே ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாம் தேதி நள்ளிரவு முதல் சொர்க்கவாசல் ஆகம முறைப்படி மூடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 

    இந்நிலையில் 4ஆம் தேதி முதல் வழக்கம்போல் நடைபெறக்கூடிய தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள்  31-ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள  பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இலவச  தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறையில் வழங்கப்பட உள்ளது. 

    எனவே இந்த கவுண்டர்களில் டிக்கெட்டுகளை பெரும் பக்தர்கள் 4-ஆம் தேதி காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி ஒருநாள் முன்னதாக தரிசனத்திற்கான இலவச டிக்கெட்களை ஆதார் அடையாள அட்டை வைத்து வழங்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Saduragiri malai dharshan

    மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரிக்கு செல்ல செப்டம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரை  4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி வழங்கி வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

     இந்தநிலையில் ஊரடங்கில் இருந்து தளர்வு விதித்து கோவிலை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. வருகிற 17-ந் தேதி மகாளய அமாவாசை வருகிறது. இதையடுத்து வருகிற 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது மழை பெய்து வருவதால் மகாளய அமாவாசையன்று அல்லது அதற்கு முன்பாக மழை பெய்தால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல அமாவாசையன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

  • Thirupathy dharshan ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் மேலும்  3 ஆயிரம் டிக்கெட்டுகள் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள டிக்கெட் வெளியீடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பக்தர்களுக்கான தரிசனம் ஊரடங்கு  தளர்வுக்கு பிறகு கடந்த ஜுன் 11ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

    தற்போது ரூ 300 டிக்கெட் மூலம் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்கள் என 30 தேதி வரைக்கான டிக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் மூன்று ஆயிரம் டிக்கெட்டுகள் என வழங்கப்பட்டு வந்ததை 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ரத்து செய்யப்பட்ட டிக்கெட்ட்டிற்கு பதிலாக ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் ஒரு நாளைக்கு கூடுதலாக 3000 டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு இன்று கோட்டா வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக தினந்தோறும் ரூபாய் 300 சிறப்பு தரிசனத்தில் 13,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் விதமாகவும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • Thirupathy Dharshan ticket cancel

    கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் இந்த மாதம் முப்பதாம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக  தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் தினந்தோறும் மூன்றாயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 வார்டுகளிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததால்  இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. 

    பின்னர் 45 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் சனிக்கிழமை மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது தொடங்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த மாதம் 30ம் தேதி வரை மீண்டும் தற்காலிகமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அறிவித்துள்ளது. 

    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்தபிறகு இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக அதிக அளவு தமிழக பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே திருப்பதிக்கு வந்து இரவு முழுவதும்  காத்திருப்பதாகவும் இதுவே கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக  அமையும் என்பதாலும் புரட்டாசி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்க படுவதால் தமிழக பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால்  முப்பதாம் தேதி வரை தற்காலிகமாக இலவச தரிசன டிக்கெட் நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
     

  • Temples dharshan

    கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் தமிழகம் முழுவதும் இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகத்துடன் தரிசனம் மேற்கொண்டனர்
     
    முதல்கட்டமாக கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது.

    அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களும் இன்று முதல் திறப்பதற்கு வழிகாட்டுதளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து  கோவில்களும் திறக்கப்பட்டன. முக கவசம், தனி மனித இடை வெளி போன்றவை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

  • Thirupathy Free Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு  மத்திய அரசு ஊரடங்கு தளர்வு செய்த பிறகு ஜூன் 11 தேதி முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் திருப்பதியில் தினந்தோறும் 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

    இந்நிலையில் திருப்பதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.இருப்பினும் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் மட்டும் தினந்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று முதல் மீண்டும் திருப்பதி அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை, திருப்பதி பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது தொடங்கப்பட்டது. மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது தொடங்கப்பட்டாலும்  டிக்கெட் பெறுவதற்கு மட்டும் பக்தர்களிடையே ஆர்வம் குறைந்த அளவிலேயே முதல் நாளான இன்று  காணப்பட்டது . 
     

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக  நிறுத்தப்பட்ட தரிசனம் மீண்டும்    தொடங்கப்பட்டு  ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த 30 நாட்களில் 2.63 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து, 15.80 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஜூன் எட்டாம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. 

    அதன் பிறகு மத்திய அரசு ஊரடங்கு தளர்வு வழங்கி எட்டாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டும்,  திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பக்தர்கள்  என தொடங்கி தற்போது 12500 பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவலை ஒட்டி நிறுத்தப்பட்ட தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் 15.80 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    ஒரு லட்சம் பக்தர்கள் வரை மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினந்தோறும் 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Thirupathy July Dharshan Ticket

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 
       
    திருப்பதியில் இந்த மாதத்துக்கு ஒடுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் தினமும் 9 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. அதற்காக நேற்று ரூ.300 டிக்கெட் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் எட்டாம் தேதி முதல்  பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தினமும் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

    அதேபோல் நாளொன்றுக்கு 1000 விஐபி தரிசன டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் தேவஸ்தனம் நேற்று வெளியிட்டுள்ளது. 

    அதேபோல் ஜூலை 1ஆம் தேதிக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில்  வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தினமும் 3 ஆயிரம் டைம் ஸ்லாட் டோக்கன்கள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம் ஆகிய விடுதிகளிலும், அலிபிரியில் உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்சிலும் வழங்கப்பட உள்ளன. அதில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒருநாள் முன்கூட்டியே வந்து டைம் ஸ்லாட் டோக்கனை பெற வேண்டும். இந்தத் தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.