Tag: Atthi Varadhar

  • Atthi Varadhar

    நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கையில் ‘மா.சு.ச’ என்ற 3 எழுத்துக்குப் பொறிக்கப்பட்ட கவசம் பொருத்தப்பட்டிருந்தது. 

    இதற்குப் பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதையில் 18-வது சுலோகத்தில் ‘சர்வதர்மா சரணம்பிரஜா அதந்யா சர்வமாதேக்யு மோட்சம் மா.சு.ச.’ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    “தர்மத்தை காப்பவன் நான் ஒருவனே. என்னை நம்பி என்னுடைய திருவடியில் சரண் அடைந்தால் மோட்சம் உறுதி. எதற்கும் கவலைப்படாதே. 

    நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பதே இதற்கு அர்த்தம் ஆகும். பகவத் கீதையில் இடம் பெற்றுள்ள ‘மா.சு.ச’ என்ற எழுத்தை இதன் பொருள் எடுத்துக் கூறுகிறது. ஆகவே மா.சு.ச. என்றால் அருள் பாலிப்பது என்பது ஆகும்.
     

  • Who is Atthi Varadhar

    இப்போதைய காஞ்சிபுரம். புராண காலத்தில் அத்திவனம் என்ற பெருங்காடாக இருந்ததாகவும், அத்திமரங்கள் அடர்ந்த காடு என்பதால் அத்திவனம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    படைக்கும் கடவுளான பிரம்மர் அத்திவனத்தில், பகவான் விஷ்ணுவுக்காக யாகம் ஒன்றை ஏற்பாடு செய்ய…அந்த யாகத்திற்குத் தனது துணைவியாரான கல்வியின் மூல தேவி சரஸ்வதியைப் பிரம்மர் அழைக்க மறந்துவிட்டார் …துனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க. 

    அதனால் சினம் கொண்ட சரஸ்வதி தேவியார்… பிரம்மனின் யாகத்தை அழிக்க, வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து வெள்ளமாக மாறி அத்திவனம் நோக்கி ஆவேசமாக விரய….அத்திவன விலங்குகள், மக்கள் யாவும் வெள்ளத்தில் அடித்து மூழ்க இருந்த நிலையில் இதனைத் தடுக்க நினைத்த பிரம்ம தேவர்…காக்கும் கடவுளான திருமாலிடம் வேண்டியுள்ளார்.

    இந்நிலையில், வேள்வியின் அக்கினியிலிருந்து நெருப்பே உருவான அத்தி வரதராய் சயனம் கொண்ட பெருமாள், நதியைத் தடுத்து நிறுத்த அத்தி வரதரின் வெப்பம் தாளாமல் தன் திசையை மாற்றி கடல் சேர்ந்தாள் வேகவதியாய் வந்த தேவி சரஸ்வதி….

    பிறகு பிரம்மரிடம் சென்ற திருமால் “அத்தி வரதனாய் இவ்வூரை நான் காத்து நிற்க எனதுருவை நீர் செய்து வெம்மை காக்கக் குளிர்விப்பீர் திருகுளத்து நீரால்..” என அருளியுள்ளார்… 

    சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில், பிரம்மன், தேவர்களுக்கு புண்ணியகோடி கோலத்தில் அதாவது சங்கு, சக்கரம், கதை(gathai) தாங்கிய கோலத்தில் பெருமாள் காட்சியளிக்க அப்படி புண்ணியகோடி கோலத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளைப் பிரம்ம தேவர் அத்தி மரத்தில் வடித்து வழிபட, அத்தி மரத்தால் ஆனதாலே அத்தி எனவும்..யாகத்தைக் காப்பாற்றிய திருமாளிடம் தேவர்கள் உள்ளிட்டோர் வரங்கள் கேட்க…அவர்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு வரதர் என்று பெயரும் வந்தாக சொல்லப்படுகிறது….

    அதன் படி பிரமன் அத்தி மரத்தால், அத்திவரதருக்கு சிலை செய்து அதைக் கோயிலிலுள்ள நூறுகால்மண்டபத்திற்கு வடக்கில் உள்ள இரண்டு திருக்குளங்களின், தென் திசையில் உள்ள நீராழிமண்டபத்திற்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளி பேழையில் துயில் கொள்ளச் செய்ததாய்,இப்படி தான் அத்திவரதர் மண்ணுலகிற்கு எழுந்ததாயுள்ளதாகப் புராணத்தில் சொல்லப்படுகிறது…

    இந்நிலையில் எதற்காக அத்திவரதரை அனந்த புஷ்கரணியில் நீருக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்க ?…..பிரமன் நடத்திய யாகத்தின் வெப்பத்தால் அத்திவரதருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் திருக்குளத்தில் வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

  • Atthi Varadhar Kulam

    47 நாட்கள் வைபவம் முடிந்த நிலையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு ஓய்வு எடுக்க அத்திவரதர் நாளை அனந்தசரஸ் குளத்திற்கு செல்கிறார். காஞ்சி அத்தி வரதர் ஜூலை 1- ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை சயன கோலத்திலும் அதற்கடுத்து நின்ற கோலத்திலும் தரிசனம் கொடுத்து வருகிறார். 

    46 நாள்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்துவந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் அனந்த சரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார். அடுத்ததாக, இனி 40 வருடங்கள் கழித்து 2059- ம் ஆண்டுதான் அத்திவரதைத் தரிசிக்க முடியும்.

  • Atthi Varadhar Dharisanam

    காஞ்சிபுரம் அத்தி வரதரை இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும். அத்திவரதரை 43 நாட்களில் இதுவரை 85 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் எழுந்தருளும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர்.

    அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர்.  அத்தி வரதர் தரிசனம் தொடங்கி 42 நாட்கள் முடிந்துவிட்டன. இன்னும் 4 நாட்களே அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பதாலும், தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதாலும் அத்தி வரதரைக் காண முன்பை விட இரு மடங்கு பக்தர்கள் குவிகிறார்கள். இதுவரை 85 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே அத்தி வரதர் வைபவம் 108 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி அத்தி வரதரை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவ்த்துள்ளார்.
     

  • Atthi Varadhar 42 nd day

    அத்திவரதர் வைபவம் 42 வது நாளான இன்று அத்திவரதர் ராஜ கிரீட அலங்காரத்தில் அத்தி வரதர் அற்புதமாக காட்சியளித்தார். 

    இன்று அத்தி வரதரை தரிசிக்க கடைசி வார விடுமுறை நாள் என்பதால் பல லட்சம் மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து இருந்தனர். ஒவ்வொரு நாளும் அத்தி வரதர் புதிய பட்டு வஸ்திரம் அணிந்து, புது அலங்காரத்தில் காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று ராஜ கிரீடம் அணிந்து ராஜா போல காட்சி தருகின்றார். 

    வரும் ஆகஸ்ட் 16ம் தேதியோடு அத்தி வரதரின் தரிசனம் முடிக்கப்படுவதாகவும், 17ம் தேதி அவருக்கான ஆகம முறைப்படி பூஜைகள் செய்து மீண்டும் அவர் இருந்த அனந்த புஸ்கரனியில் வைக்கப்பட உள்ளார். 
     

  • Atthi Varadhar Rush

    தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் காஞ்சி அத்திவரதரை தரிசிக்க வழக்கத்தை விட கூட்டம் அலை மோதுகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா தொடங்கி இன்றுடன் 41 நாட்கள் ஆகிறது.  ஜூலை 31 ஆம் தேதி வரை அத்திவரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதர் வைபவம் தொடங்கிய நாள் முதல் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் வரை அத்தி வரதரை தரித்து வருகின்றனர். 

    அத்திவரதரை தரிசிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அத்திவரதரை தரிசிக்க 7 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. ஆனாலும் பக்தர்கள் காத்து இருந்து தரிசித்து வருகிறார்கள். 41-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை, ரோஜா நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

  • Atthi Varadhar Dharisanam

    ஆகஸ்டு மாதம் 16 மற்றம் 17 ஆகிய தேதிகளில் அத்திவரதரை காண்பதற்கான வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல வரும் 16 ஆம் தேதி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 17 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுரம் மூடப்படும் மாலை 5 மணிக்கு வசந்த மண்டபம் மூடப்பட்டு அத்தி வரதர் தரிசனம் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 36 நாட்களில் 50 லட்சத்துதத்தம் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். கூட்டம் அதிகம் காணப்படுவதால் கடைசி 2 நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 10 ஆம் தேதியில் இருந்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

     அத்தி வரதரை தரிசிக்க 24 மணி நேரம் வாய்ப்பு இல்லை என்பதால் தற்போது 18 மணி நேரம் தரிசனம் நடைபெற்று வருகின்றது விரைவில் 21 மணி நேரம் தரிசிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  • Atthi Varadhar aug 6

    காஞ்சி அத்தி வரதர் 37 வது நாளில் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார்.

    காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது 

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்தி வரதர் இன்று 37 வது வெள்ளை மற்றும் நீல நிறப்பட்டாடையில் காட்சியளித்து வருகின்றார்.

    36 நாட்களில் 55 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் நேற்றைய தினத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் குறைவு

    நேற்று 6 மணி அல்லது 8 மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டிய நிலையில் இன்று இலவச தரிசனத்தில் 3 மணி நேரத்தில் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர்
     

  • Atthi Varadhar August 8 Dharisnam

    காஞ்சிபுரம், ஸ்ரீ அத்திவரதர் வைபவம் 36 வது நாளான இன்று, இளஞ்சிவப்பு  நிற பட்டாடை அணிந்து காட்சி தரும் அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிகிறார் அத்தி வரதர். 

    அத்தி வரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமில்லாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

    இளஞ்சிவப்பு நிற பட்டு வஸ்திரத்தில் அத்தி வரதர்  இன்று வண்ண வண்ண மலர்களால் ஆன மாலையை சுற்றப்பட்டு மலர் கிரீடத்தில் காட்சி அளிக்கின்றார். நேற்று 35 வது நாளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். 

  • Atthi Varadhar Dharisanam

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி வரதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கின்றார். 34 ஆம் நாளில் இன்று பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். 

    சனிக்கிழமை இன்று விடுமுறை தினம் மற்றும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்  பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பொது தரிசனத்தில் 5 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்து அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். 33 நாட்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றதால் மதியம் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.