Tag: பகவான்

  • April 26 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பெருமை
    ரிஷபம்         – மேன்மை
    மிதுனம்     – கவலை
    கடகம்         –  அசதி
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    களிப்பு    
    துலாம்         –     அச்சம்
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     ஜெயம்  
    மகரம்         –    லாபம்
    கும்பம்         –      பகை
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –        ரேவதி

  • April 25 2024 Indrayanaal

    ஏப்ரல் 25 – இன்றைய நாள் எப்படி…
    குரோதி வருடம் – சித்திரை – 12
    ஏப் 25, 2024
    வியாழன்
    நல்ல நேரம் :10.30 – 11.30
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  பிரதமை கா 6.51
    நட்சத்திரம் :  சுவாதி அ.கா 12.48
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • April 25 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – அமைதி
    ரிஷபம்         – புகழ்
    மிதுனம்     – சுகம்
    கடகம்         –  நலம்  
    சிம்மம்         –   கவலை
    கன்னி         –    தனம்   
    துலாம்         –     சுபம்
    விருச்சிகம்     –  ஆதரவு  
    தனுசு         –     பாசம்
    மகரம்         –    சினம்
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –      போட்டி  
    சந்திராஷ்டமம்    –        உத்திரட்டாதி

  • Senbagadevi amman

    மஞ்சளாக கொட்டிய அருவி நீரில் செண்பகாதேவி அம்மனுக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதிக்குள் உள்ளது செண்பகாதேவி நீர்வீழ்ச்சி.

    இந்த நீர்வீழ்ச்சியின் அருகே செண்பகாதேவி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இயற்கை அழகு நிறைந்த அடர்வன பகுதியில் உள்ள இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில், இந்த வருடத்திற்கான திருவிழாவானது கடந்த 13-ஆம் தேதி மலைப்பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் வைத்து கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 10- திருநாளான நேற்று சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று செண்பகாதேவி அம்மனுக்கு அடர்வனப் பகுதியில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்திய நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி வனத்துறையினரின் பாதுகாப்புடன் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

    முன்னதாக, செண்பகாதேவி அம்மனுக்கு அருவிக்கரையில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், அருவியில் மஞ்சள் நிறமாக விழுந்த தண்ணீரில் செண்பகாதேவி அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

     இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மஞ்சள் நிறமாக மாறிய செண்பகா தேவி அருவியை பரவசத்துடன் கண்டுகளித்து அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

  • thirupathy vasanthorchavam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர சலகட்லா வசந்தோத்ஸவம் கோலாகலமாக நிறைவு பெற்றது.

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலின் பின்புறம் உள்ள வசந்தோத்ஸவ மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக வசந்தோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.  அவை செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.  

    முதல் இரண்டு நாட்கள் வசந்தோத்ஸவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி மூன்றாவது நாளான இன்று ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உடன் ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேயஸ்வாமி, ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர்  வசந்தோற்சவ சேவையில் கலந்து கொண்டனர்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர சலகட்லா வசந்தோத்ஸவம் கோலாகலமாக நிறைவு பெற்றது.

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலின் பின்புறம் உள்ள வசந்தோத்ஸவ மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக வசந்தோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.  அவை செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.  முதல் இரண்டு நாட்கள் வசந்தோத்ஸவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி மூன்றாவது நாளான இன்று ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உடன் ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேயஸ்வாமி, ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர்  வசந்தோற்சவ சேவையில் கலந்து கொண்டனர்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • April 24 2024 Indrayanaal

    ஏப்ரல் 24 – இன்றைய நல்லநேரம்,…
    குரோதி வருடம் – சித்திரை – 11
    ஏப் 24, 2024
    புதன்
    நல்ல நேரம் : 9.30 – 11.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பவுர்ணமி அ.கா 5.54
    நட்சத்திரம் :  சுவாதி முழுவதும் 0.00
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சதயம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • paramakudi chitirai thiruvizha

    பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ பூப்பல்லாக்கில் அரக்கு பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில்  இறங்கினார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கிய விழா விமரிசையாக நடைபெற்றது.

     இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை வரவேற்றனர். ஆண்டுதோறும் சித்திரைப் பெளர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் பூப்பல்லக்கில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

     இதையொட்டி பரமக்குடி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம்  கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களின் இரவில் சுந்தர்ராஜ பெருமாள் ஆடி வீதிகளில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி அருள் பாலித்த சுந்தர்ராஜ பெருமாள் இன்று அதிகாலை வான வேடிக்கைகள் மற்றும் மேலாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் ஏராளமான தீவட்டிகள் முன்செல்ல கள்ளழகர் அரக்கு பட்டு உடுத்தி  வெள்ளி கிண்ணத்தில் அவல் பாயசம் சாப்பிட்டுக்கொண்டு  கொண்டு பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார்.

  • April 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – வெற்றி
    ரிஷபம்         – அதரவு
    மிதுனம்     – சாந்தம்
    கடகம்         –  நட்பு
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    போட்டி  
    துலாம்         –     முயற்சி
    விருச்சிகம்     –  கவலை
    தனுசு         –     பயம்
    மகரம்         –    மகிழ்ச்சி
    கும்பம்         –      பொறுமை
    மீனம்         –      பெருமை
    சந்திராஷ்டமம்    –        சதயம், பூரட்டாதி

  • sarangaappani koil chithirai ther

    பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சாரங்கபாணிசுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாரங்கபாணி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன. அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணி சுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார்.

    தாயார் கோமளவள்ளி இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. எனவே இங்கு சொர்க்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை. பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து 3வது தலமாக சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி திருக்கோயில் என போற்றப்படுகிறது.

    இக்கோயிலின் ராஜகோபுரம் 171 அடி உயரம் கொண்டது. இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா சுமார் 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழாவில் நாள்தோறும் இந்திர விமானம், வெள்ளி சூர்யபிரபை, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், வெள்ளி யானை வாகனம், புன்னை மர வாகனம், தங்க குதிரை வாகனம் என பல்வேறு வானங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

    தற்போது விழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் 500 டன் எடையுடன், 30 அடி விட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 170 அடி உயரம், அலங்கார மேற்பரப்பு மட்டும் 47 அடியையும் கொண்டது. சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

  • madurai kalazhagar

    சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்தோடு அருள்மிகு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

    உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 21-ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருமாலிருஞ்சோலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரை புறப்பாடானார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதில், சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக மூன்று மாவடிக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தார்.

    அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த கள்ளழகர், தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளியபோது, திருவில்லிப்புத்தூரிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளின் திருமாலையைச்சாற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோவிலின் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் மூங்கில்கடைத் தெரு வழியாகச் சென்று ஏ.வி.மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் காலை 6.10 மணிக்கு எழுந்தருளினார். அங்கு அருள்மிகு வீரராகவப் பெருமாளுக்கு கள்ளழகர் மாலை சாத்தும் வைபவம் நடைபெற்றது. வைகையாற்றுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகரை லட்சக்கணக்கான மக்கள் திரண்டு 'கோவிந்தா' முழக்கத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். பெண்கள் சர்க்கரை தீபம் காட்டினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முடி இறக்கி அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், மாநகர காவல்துறையின் சார்பாக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியின் சார்பாக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளும், நடமாடும் கழிப்பறை வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அழகர்கோவில் தொடங்கி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில் வரை சற்றேறக்குறைய 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் இருமார்க்கத்திலும் கள்ளழகர் எழுந்தருள்கிறார். வைகையாற்றிலிருந்து புறப்பட்டுச் செல்லும் கள்ளழகருக்கு ராமராயர் மண்டபத்தில் பிற்பகல் 12 மணியளவில் பக்தர்களால் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.