Tag: பகவான்

  • Mesham Sakthi Online – May Monthly Prediction – 2024

    மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சூர்யன், குரு, சுக்ரன்   – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது –  லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் – என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:
    01-05-2024 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    07-05-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    13-05-2024 அன்று சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    20-05-2024 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    24-05-2024 அன்று புதன் பகவான்  ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    31-05-2024 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    சிந்தனையில் புதுமையுடனும், செயலில் நேர்மையுடனும் வாழ்ந்து வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே,

    இந்த மாதம் உங்களின் கல்வியறிவு பயனுள்ள விஷயத்தில் பிரகாசமாக ஒளிவிட்டு உங்களின் வாழ்க்கை முறையில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும். நற்காரியங்களை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரம் உறவினர்கள் வகையிலிருந்தும், செய்தொழில் லாபத்திலிருந்தும் நிறைவாக கிடைக்கும். கால தாமதமான செயல்திட்டங்களை புதிய உத்வேகத்துடன் செயல் படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் தாய்மாமன் வகை உறவினர்களுடன் மனக் கசப்பு வராத வண்ணம் நல்முறையில் பழக வேண்டும். தாயின் அன்பைப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்வு உண்டாகும். குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்று காலம் கணிந்துள்ளது. நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள். கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். முடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். கவனமுடன் செயல்பட்டு விரயத்தை தவிர்க்கலாம்.

    தொழிலதிபர்கள் தொழில் வகையில் கூடுதல் வருமானம் கிடைக்க உங்கள் சகோதரர்கள் தகுந்த உதவி புரிவார்கள். நண்பர்களும், ஆன்மீக அருள் பெற்றவர்களும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் பெறும் வகையிலான உபாயங்களை சொல்லித் தருவார்கள். கடன், வழக்கு, எதிரிகள் ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது.

    பெண்கள் குடும்ப நிர்வாகப் பொறுப்பிலுள்ள பெண்கள் நிறைய நற்காரியங்களில் ஈடுபட்டு கணவரிடமும், பிள்ளைகளிடமும் நல் அன்பை பெறுவீர்கள். பழைய ஆபரணங்களை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் முழுமனதுடன் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

    கலைஞர்கள் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் ஆலோசனைப் படி நடந்து வெற்றியைப் பெறலாம். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

    அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.

    மாணவர்கள் முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

    அஸ்வினி:

    இந்த மாதம் நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். அதனால் மன நிறைவைத் தரும். உடல் உபாதைகள் உஷ்ணம் சம்மந்தப் பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

    பரணி:

    இந்த மாதம் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு நிறுவன மாற்றமோ, அல்லது ஊர் மாற்றமோ ஏற்படக் கூடும். அதனால் உங்களுக்கு நன்மையே ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம் கடின உழைப்பு இருக்கும். அதற்கான முன்னேற்றம் இருப்பதால் அது பற்றி கவலைப் பட வேண்டி இருக்காது. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கும். கடன் வாங்க வேண்டி வரலாம்.

    பரிகாரம்: செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வதால் விரயச்செலவுகள் இல்லாமல் விரும்பிய செலவுகள் செய்யும் நல்வாய்ப்பை பெறலாம்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25

    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • April 29 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – வெற்றி
    ரிஷபம்         – உயர்வு
    மிதுனம்     – பெருமை
    கடகம்         –  அமைதி
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    ஆதரவு      
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  நிறைவு  
    தனுசு         –     அச்சம்
    மகரம்         –    பகை
    கும்பம்         –      பாசம்
    மீனம்         –      சுகம்
    சந்திராஷ்டமம்    –        கார்த்திகை

  • April 29 2024 Indrayanaal

    ஏப்ரல் 29 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – சித்திரை – 16
    ஏப் 29, 2024
    திங்கள்
    நல்ல நேரம் : 6.30 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 4.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் :  பஞ்சமி கா 6.08
    நட்சத்திரம் :  மூலம் அ.கா 3.12
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • April 28 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – பொறுமை
    ரிஷபம்         – ஆர்வம்
    மிதுனம்     – வரவு  
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   பக்தி
    கன்னி         –    மேன்மை     
    துலாம்         –     அமைதி
    விருச்சிகம்     –  அனுகூலம்
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    கீர்த்தி   
    கும்பம்         –      உயர்வு   
    மீனம்         –      ஜெயம்
    சந்திராஷ்டமம்    –        பரணி

  • April 28 2024 Indrayanaal

    ஏப்ரல் 28 – இன்றைய நல்லநேரம்…
    குரோதி வருடம் – சித்திரை – 15
    ஏப் 28, 2024
    ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் :  சதுர்த்தி கா 7.06
    நட்சத்திரம் :  கேட்டை அ.கா 3.21
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • April 27 2024 sangadahara chadurthi

    ஏப்ரல் 27 – சங்கடஹர சதுர்த்தி…
    குரோதி வருடம் – சித்திரை – 14
    ஏப் 27, 2024
    சனி
    சங்கடஹர சதுர்த்தி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை கா 7.33
    நட்சத்திரம் :  அனுஷம் அ.கா 3.01
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • Thirumangalam kumbabishegam

    மதுரை திருமங்கலம் சத்திய யுக சிருஷ்டி திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

    திருமங்கலம் அருகே சத்ய யுக சிருஷ்டி திருக்கோவிலில் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் கிராமத்தில் முக்தி நிலைய அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்ட 108 தெய்வங்கள் உள்ள சத்திய யுக சிருஷ்டி திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் விமானத்திற்கும் ஆண்டாள் திருக்கோவில் விமானத்திற்கும் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

    முதல் கால யாக சாலைபூஜை நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, இன்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கி பூரணாகதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் பத்மாவதி தாயார் திருக்கோவில் ஆண்டாள் திருக்கோவில் கோபுர கலசங்களுக்கு மேளதாளங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

    தொடர்ந்து வேங்கடாசலபதி பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாளுக்கு அலங்கார ஆராதனை நடைபெற்றது. விழாவில் ராயபாளையம், மேலக்கோட்டை, சமத்துவபுரம், காமாட்சிபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

  • April 27 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – அமைதி
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     – நன்மை  
    கடகம்         –  ஆதரவு
    சிம்மம்         –   முயற்சி
    கன்னி         –    சுபம்    
    துலாம்         –     ஜெயம்
    விருச்சிகம்     –  உயர்வு
    தனுசு         –     மறதி
    மகரம்         –    உதவி  
    கும்பம்         –      பகை  
    மீனம்         –      பிரீதி
    சந்திராஷ்டமம்    –        அசுபதி

  • Vembakottai mariamman koil kumbabishegam

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெம்பக்கோட்டையில் அருள்மிகு மாரியம்மன் கோவில் அஸ்வந்த்ன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 1001 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

    அதற்கு முன்ன அஸ்வந்த் என மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம யாக பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஹோமத்தில் வைத்திருந்த கும்பங்ளை வைத்து கோவிலில் உள்ள கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் பன்னீர் ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அபிஷேகத்தை தொடர்ந்து கும்ப அபிஷேக தீர்த்தம் மற்றும் அம்மனுக்கு செய்த அபிஷேகத் திட்டத்தை கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தங்கள் அளிக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ரகுராமன்  மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ்ஆர். ராஜவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அம்மன் பக்தி பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

  • April 26 2024 Subamuhurthanaal

    ஏப்ரல் 26 – சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – சித்திரை – 13
    ஏப் 26, 2024
    வெள்ளி
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை கா 7.26
    நட்சத்திரம் :  விசாகம் அ.கா 2.09
    யோகம் : சித்த-மரண
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்