இன்றைய ராசிபலன்
மேஷம் – முயற்சி
ரிஷபம் – சினம்
மிதுனம் – வரவு
கடகம் – அனுகூலம்
சிம்மம் – விவேகம்
கன்னி – புகழ்
துலாம் – இன்பம்
விருச்சிகம் – சாந்தம்
தனுசு – ஆதரவு
மகரம் – உயர்வு
கும்பம் – அமைதி
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – புனர்பூசம், பூசம்
Tag: பகவான்
-
May 04 2024 Rasipalan
-
May 04 2024 Agni Natchathiram
மே 04 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்…
குரோதி வருடம் – சித்திரை – 21
மே 4, 2024
சனி
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
நல்ல நேரம் : 7.30 – 8.304
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி மா 6.10
நட்சத்திரம் : பூரட்டாதி இ 7.49
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
badrakali amman temple festival
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சாக உற்சவ கொடை விழா' கொடியேற்றத்துடன் கடந்த 24 ம் தேதி காப்பு 11 நாள் திருவிழா கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீப ஆராதனை நடைபெற்றது.
திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியில் பத்திரகாளி அம்மன் கோயில் முன்பாக பெண்கள் சிறுமிகள் கும்மி பாட்டு கும்மியாட்டம் நடனமாடி அம்மனைப் போற்றி துதி பாடி மகிழ்ந்தனர் அதனைத் தொடர்ந்து வானவேடிக்கு மேல தாளங்களுடன் 1008 முளைப்பாரிகளை தலையில் சுமந்து சென்று, சாயல்குடி பேருந்து நிலையம் தூத்துக்குடி – ராமநாதபுரம், மற்றும் கமுதி, அருப்புக்கோட்டை ஆகிய முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்று கங்கை நீரில் முளைப்பாரிகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கங்கை நீரில் கரைத்து சென்றனர்.
-
May 03 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – லாபம்
ரிஷபம் – ஆசை
மிதுனம் – நன்மை
கடகம் – நட்பு
சிம்மம் – ஆக்கம்
கன்னி – இன்பம்
துலாம் – சுகம்
விருச்சிகம் – தடங்கல்
தனுசு – அமைதி
மகரம் – போட்டி
கும்பம் – முயற்சி
மீனம் – பொறுமை
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம் -
May 03 2024 Subamuhurthanaal
மே 3 – சுபமுகூர்த்த நாள்…
குரோதி வருடம் – சித்திரை – 20
மே 3, 2024
வெள்ளி
சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.30 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : தசமி
திதி நேரம் : தசமி இ 8.36
நட்சத்திரம் : சதயம் இ 9.26
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
May 01 2024 May Day
மே 1 – மே தினம்…
குரோதி வருடம் – சித்திரை – 18
மே 1, 2024
புதன்
நல்ல நேரம் : 9.30 – 11.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : சப்தமி அ.கா 3.10
நட்சத்திரம் : உத்திராடம் அ.கா 1.42
யோகம் : சித்த-மரண
சந்திராஷ்டமம் : ரோகிணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
May 01 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – மகிழ்ச்சி
ரிஷபம் – விருத்தி
மிதுனம் – செலவு
கடகம் – ஏமாற்றம்
சிம்மம் – வரவு
கன்னி – சிக்கல்
துலாம் – வெற்றி
விருச்சிகம் – தேர்ச்சி
தனுசு – நன்மை
மகரம் – கவலை
கும்பம் – எதிர்ப்பு
மீனம் – ஆர்வம்
சந்திராஷ்டமம் – ரோகிணி, மிருகசீருஷம் -
Meenam Shakthi Online – May Monthly Prediction – 2024
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
ராசியில் புதன், ராஹூ, செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், குரு, சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
01-05-2024 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
07-05-2024 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-05-2024 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-05-2024 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-05-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2024 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
தனது செயல்களை பிறர் அறியாத வண்ணம் சூட்சுமமாய் செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே,
இந்த மாதம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சமூகத்திலும், அரசு சார்ந்த வகைகளிலும் தேவையான நற்பெயர் உண்டாகும். வீட்டில் ஓரிடத்தில் வைத்த பொருட்களை அங்கும் இங்கும் தேடுவதும், வாகனங்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தினால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.
குடும்பத்தில் மூத்த சகோதர வகையினர் தந்தைக்கு நிகரான கனிவுடன் உங்கள் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். தந்தையின் உடல்நலத்தில் தனித்த கவனமும், அவருடன் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளில் வாக்குவாதம் இல்லாத நிலையில் இருத்தல் வேண்டும். இதனால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் இல்லா நிலை உண்டு.
உத்தியோகஸ்தர்கள் அறிமுக மில்லாத நபர்களுக்கு தகுதிக்கு மீறிய உதவிகளை செய்யாமல் இருப்பது உத்தம பலனை உருவாக்கித் தரும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும்.
தொழிலதிபர்கள் நன்மைகளை ஏராளமாக அனுபவிக்கக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய தீராத பணிச்சுமையிலும் உங்களது குழந்தைகளின் நலனுக்காக பெண் தெய்வ வழிபாடுகளை பின்பற்றி வருபவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வ அருளைப் பெற்று தங்கள் புத்திர வகையில் நல்ல முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள்.
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் தகுந்த உதவிகளால் நிர்ணயிக்கப்பட்ட பணி இலக்குகளை சுலபமாக செய்து உயர் அதிகாரிகளிடம் தகுந்த நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், தெய்வ அருளால் குடும்பத்தில் சுமூகமான வாழ்க்கை முறைகளைப் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
கலைஞர்கள் ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். தொழில் விவகாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்தையும் இனிதே முடிக்க முடியும்.
அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள்.
மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார். போக்குவரத்து மற்றும் உயரமான இடங்களில் தகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.
ரேவதி:
இந்த மாதம் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.
பரிகாரம்: ராமபிரானை வழிபாடு செய்வதாலும் அவரது நற்செயல்களை பின்பற்றி நடப்பதாலும், ராம நாமத்தை உச்சரிப்பதாலும் இன்னல்கள் இல்லாத இனிய வாழ்வை பெறலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – சனி
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Kumbham Shakthi Online – May Monthly Prediction – 2024
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், குரு, சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
01-05-2024 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
07-05-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-05-2024 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-05-2024 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-05-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2024 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
தகுதிக்கேற்ப வாழ்ககை நடத்தி கிடைத்ததை பெரிதென எண்ணி வாழ்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே,
இந்த மாதம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். வீடு, வாகன வகைகளில் முன்னேற்றமான நற்பலன்கள் உண்டாகும். ஆசாபாச செயல்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், லாகிரி வஸ்துகளை ஒதுக்கி வைப்பதாலும் மட்டுமே ஆரோக்கிய உடல்நலத்தை பெற முடியும்.
குடும்பத்தில் தந்தை மற்றும் சகோதரர் வகையில் கடந்த காலங்களில் உங்களுக்குள் இருந்த மனவேற்றுமைகளை விலகுவதற்கான மகிழ்வான சந்தர்ப்பங்கள் ஏற்படும். பூர்வ புண்ணிய சொத்துகளில் வம்பு வழக்கு ஏதுமிருந்தால் அனுகூலமான தீர்வு உண்டாகும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் நலம் கிடைக்கும். அடுத்தவர்களின் நட்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
உத்தியோகஸ்தர்கள் நல்ல முறையில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். திருப்தியான மனப் போக்கு உண்டாகும். அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக் கொண்டால் பிரச்சனைகளுக்கு இடமே இல்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.
தொழிலதிபர்கள் தொழிலில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். ஆதாயத்தின் ஒருபகுதியை அறப்பணிகளுக்கு செலவிடும் நிலைமைகள் உண்டாகி உங்கள் மனதை நல்வழிப்படுத்தும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு தொழிலில் புதிய ஆதாயத்தை ஏற்படுத்தும். தொழிலில் உங்களை புறக்கணித்தவர்கள் அண்டி வருவார்கள். நன்மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.
பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிக பட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும். ஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.
கலைஞர்கள் அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மதிப்பும், மரியாதையும் கிட்டும். பல மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம். உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பலவழிகளிலிருந்தும் பண வரவுகள் வரலாம். முக்கியமான நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அளிக்கும்.
அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும். தந்தை மற்றும் சகோதர, சகோதர வகையில் அன்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாகி விடுவீர்கள். எச்சரிக்கை தேவை.
அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.
சதயம்:
இந்த மாதம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.
பரிகாரம்: ஐயப்பன், அய்யனார், சாஸ்தா ஆகிய தெய்வங்களை தகுந்த முறையில் வழிபாடு செய்வதினால் நற்பலன் உண்டாகும். கிருத்திகை தோறும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – சனி
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Mahara Rasi Shakthi Online – May Monthly Prediction – 2024
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூர்யன், குரு, சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
01-05-2024 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
07-05-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-05-2024 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-05-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-05-2024 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2024 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
பொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே
இந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளால் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும். இல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும். சூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள்.
குடும்பத்தில் வெகு காலமாக ஆண்பிள்ளை புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ள தம்பதியருக்கு குல தெய்வ அருளால் அனுகூல பலன் கிடைக்கும். பூமி, மனை, விவசாய நிலம் போன்றவைகளில் தகுந்த கவனம் செலுத்தி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். உடன் பிறந்தோரிடம் அனுசரனையாக இருப்பது எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் வரவழைக்காது.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்கிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள்.
தொழிலதிபர்கள் உங்கள் தொழிலிலும், செயல்பாட்டிலும் பிறரது குறுக்கீடு இல்லாமல் செயல்பட்டு தகுந்த வெற்றி பெறுவீர்கள். தந்தையின் பேச்சுக்கு ஏற்றபடி செல்வதும், மூத்த அனுபவசாலிகள் பேச்சுக்கு மரியாதை தருவதும் உங்கள் வெற்றிக்கு அடிகோலாய் அமையும். உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இப்பொழுது மிக அவசியம்.
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெ?ண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.
கலைஞர்கள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து உடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால கனவுகளை நிறை வேற்ற துணை இருப்பார்கள்.
அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். புதிய மாற்றங்களை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திப் போடுவது நிம்மதி அளிக்கும். பிரிந்து போனவர்கள் மறுபடியும் உங்களைச் சந்திக்க நேரலாம்.
மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.
திருவோணம்:
இந்த மாதம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.
பரிகாரம்: அக்னி வீரபத்திரர், அகோர வீர பத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – சனி
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA