Tag: பகவான்

  • Mari amman Koil Therottam

    புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தேரோட்டம். புதிதாக செய்த தேரை கோவிலுக்கு அர்ப்பணித்த முதல்வர் ரங்கசாமி தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் 110 ஆம் ஆண்டு மகோற்ச்சவ விழா கடந்த வாரம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம் யானை வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தொடர்ந்து திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி புதியதாக செய்யப்பட்ட திருத்தேரை கோவிலுக்கு அர்ப்பணித்து முதலாம் ஆண்டு தேரோட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்கள்.

    கோவில் பிரகாரத்தில் இருந்து புறப்பட்ட திரு தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. இந்த தேரோட்டத்தில் அரியாங்குப்பம் மட்டுமின்றி சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று சென்றனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

  • May 11 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நன்மை
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     – சினம்
    கடகம்         –  அனுகூலம்
    சிம்மம்         –   ஆதரவு
    கன்னி         –    சுபம்
    துலாம்         –     அச்சம்
    விருச்சிகம்     –  பாசம்
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    தனம்
    கும்பம்         –      நற்செயல்
    மீனம்         –      உதவி
    சந்திராஷ்டமம்    –        சித்திரை, சுவாதி

  • May 11 2024 Chadurthi

    மே 11 – சதுர்த்தி….
    குரோதி வருடம் – சித்திரை – 29
    மே 11, 2024
    சனி
    சதுர்த்தி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    குளிகை : 6.00 – 7.30
    ராகு : 9.00 – 10.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  திரிதியை அ.கா 4.56
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் ம 1.08
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • Atchaya thirudiyai mandiram

    நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" எனப் போற்றப்படுகிறது.

    'அட்சயம்' என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது.

    இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.

    அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்:
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
    சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
    ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ

  • May 10 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – லாபம்
    ரிஷபம்         – பொறுமை   
    மிதுனம்     – உதவி
    கடகம்         –  நற்செயல்
    சிம்மம்         –   ஆக்கம்
    கன்னி         –    பாசம்  
    துலாம்         –     இன்பம்
    விருச்சிகம்     –  வரவு
    தனுசு         –     போட்டி
    மகரம்         –    அமைதி
    கும்பம்         –      அனுகூலம்
    மீனம்         –      சுகம்
    சந்திராஷ்டமம்    –        அஸ்தம், சித்திரை

  • May 10 2024 Atchaya thridhiyai

    மே 10 – அட்சய திரிதியை….
    குரோதி வருடம் – சித்திரை – 28
    மே 10, 2024
    வெள்ளி
    அட்சய திரிதியை,
    வீரபாண்டியில் தேர்
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : திரிதியை
    திதி நேரம் :  துவிதியை கா 6.32
    நட்சத்திரம் :  ரோகிணி ம 1.02
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • May 09 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – சுகம்
    ரிஷபம்         – உயர்வு  
    மிதுனம்     – பரிசு
    கடகம்         –  அமைதி
    சிம்மம்         –   போட்டி  
    கன்னி         –    இரக்கம்
    துலாம்         –     வெற்றி
    விருச்சிகம்     –  முயற்சி
    தனுசு         –     பாசம்  
    மகரம்         –    ஊக்கம்    
    கும்பம்         –      தோல்வி
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –        உத்திரம், அஸ்தம்

  • May 09 2024 Chandira darisanam

    மே 09 – சந்திர தரிசனம்…
    குரோதி வருடம் – சித்திரை – 26
    மே 9, 2024
    வியாழன்
    சந்திர தரிசனம்
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  பிரதமை கா 7.43
    நட்சத்திரம் :  கார்த்திகை ம 1.26
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • Atchaya thrithiyai mahalakshmi arul pera

    அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

    அட்சய திருதியை வழிபாடு செய்ய, தானங்கள் செய்ய, உங்களுக்கு தெரிந்த கலையை, கல்வியை  மற்றவருக்கு போதிக்க, மஹாலக்ஷ்மி அல்லது குபேர பூஜை அல்லது லட்சுமி நாராயண பூஜை மேற்கண்ட நேரத்தில் செய்ய  மிக சிறப்பு.

    மேலும் இந்த நாளில் புனித நீரில் நீராடுவது மிக சிறப்பான ஒன்று. முடியாதவர்கள், கையளவு கல் உப்பை நீரில் கரைத்து, கிழக்கு முகம் பார்த்து கங்கையை மனதில் தியானித்து குளிக்கலாம். அசைவம்  உட்பட, தோல் பொருட்கள் தவிர்ப்பதும் மிக அவசியம். இந்நாளில், எந்த அளவு தானம் செய்கிறீர்களோ, அந்த அளவு புண்ணிய பலனும் ஆத்மார்த்த திருப்தியும் வந்து சேரும். வெயிலில் வாடுவோருக்கு , வறியோருக்கு குடை, விசிறி, செருப்பு போன்றவை தானம் செய்ய, வீடு பேறு வந்தடையும். நீர் மோர், நீர் போன்றவை தானம் தர வற்றாத வாழ்வமையும். அன்னம், பணம் போன்றவை தானம் செய்ய செல்வ செழிப்பு மிக்க வாழ்வமையும். மேலும், திருமண தடை அல்லது திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வருவோர் இந்நாளில் சுமங்கலிப்பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும் தங்களால் முடிந்த புதிய ஆடை, மஞ்சள், வளையல், தாம்பூலம், மஞ்சள் லட்டு, தேங்காய் போன்றவையில் எவை முடிகிறதோ, எவ்வளவு நபருக்கு தங்கள் வசதிக்குட்பட்டு செய்ய முடியுமோ அதை தானம் செய்யலாம். முதியவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வது மிக பெரும் நல்வாழ்வு அமைய வைக்கும். விரும்பிய தெய்வ உருவ படங்கள், பொருட்கள் வைத்து வழிபாட்டினை செய்வதும் சிறப்பு தரும்.

     அட்சய திருதியை நாளில் "வசந்த் மாதவாய நம" என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

     அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும். ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

    மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

     

  • May 08 2024 rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – நற்செயல்
    ரிஷபம்         – சினம்
    மிதுனம்     – புகழ்
    கடகம்         –  ஆர்வம்  
    சிம்மம்         –   எதிர்ப்பு
    கன்னி         –    அசதி
    துலாம்         –     சுகம்
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     கவலை
    மகரம்         –    வெற்றி   
    கும்பம்         –      தனம்
    மீனம்         –      அனுகூலம்
    சந்திராஷ்டமம்    –        பூரம், உத்திரம்