இன்றைய ராசிபலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – சிக்கல்
மிதுனம் – நோய்
கடகம் – எதிர்ப்பு
சிம்மம் – வெற்றி
கன்னி – கவலை
துலாம் – பயம்
விருச்சிகம் – நட்பு
தனுசு – தடங்கல்
மகரம் – தாமதம்
கும்பம் – சுகம்
மீனம் – சுபம்
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம்
Tag: பகவான்
-
August 19 2024 Rasipalan
-
August 19 2024 Aavini Avittam
ஆகஸ்ட் 19 – ஆவணி அவிட்டம்
குரோதி வருடம் – ஆவணி 03
ஆகஸ்ட் 19 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : பவுர்ணமி
திதி நேரம் : சதுர்த்தசி அ.கா 3.06
நட்சத்திரம் : திருவோணம் கா 9.08
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
August 18 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – துணிவு
ரிஷபம் – பக்தி
மிதுனம் – நட்பு
கடகம் – நலம்
சிம்மம் – தனம்
கன்னி – இன்பம்
துலாம் – போட்டி
விருச்சிகம் – பெருமை
தனுசு – செலவு
மகரம் – உறுதி
கும்பம் – சுகம்
மீனம் – ஆக்கம்
சந்திராஷ்டமம் – மிருகசீருஷம் -
August 18 2024 Thiruvona Viradham
ஆகஸ்ட் 18 – திருவோணம் விரதம்
குரோதி வருடம் – ஆவணி 02
ஆகஸ்ட் 18 – 2024
ஞாயிறு
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : சூன்ய
திதி நேரம் : திரையோதசி அ.கா 4.46
நட்சத்திரம் : உத்திராடம் கா 10.06
யோகம் : அமிர்த
சந்திராஷ்டமம் : திருவாதிரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
Sattainadhar koil koo poojai
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பு சிறப்பு கோ பூஜை வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
இங்கு ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாரனை காட்டப்பட்டது.
தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு மலர்களைக் கொண்டு பூஜை செய்து வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.
-
Palanai Velli Theer
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகியம்மன் வெள்ளித்தேரி்ல் வீதி உலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் முக்கிய உபகோவிலான அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சாயரட்சையில் அம்மனுக்கு சோடஷ அபிஷேகம், சோடஷ உபச்சாரம் செய்யப்பட்டு மகா அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரமும் செய்யப்பட்டது. இரவு 9 மணியளவில் வெள்ளித்தேரில் அம்மன் ஏற்றம் செய்யப்பட்டு நான்கு ரதவீதி உலா எழுந்தருளினார். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நகைகள், மலர்கள், பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் கைதட்டி ஓம்சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பினர். அதேபோல பழனி ஸ்ரீரண காளியம்மன் கோவிலிலும் தங்கரத உலா நடைபெற்றது. தேரில் ரணகாளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார் நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்களும், திருக்கோயில் அதிகாரிகளும், அலுவலர்களும் பங்கேற்றனர்.
-
August 17 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பொறாமை
மிதுனம் – இன்பம்
கடகம் – தனம்
சிம்மம் – கோபம்
கன்னி – நிறைவு
துலாம் – பயம்
விருச்சிகம் – மேன்மை
தனுசு – செலவு
மகரம் – சுகம்
கும்பம் – வெற்றி
மீனம் – ஆதரவு
சந்திராஷ்டமம் – மிருகசீரிடம் -
August 17 2024 Maha Pradhosham
ஆகஸ்ட் 17 – மகா பிரதோஷம்
குரோதி வருடம் – ஆவணி 01
ஆகஸ்ட் 17 – 2024
சனி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : சூன்ய
திதி நேரம் : துவாதசி அ.கா 5.25
நட்சத்திரம் : பூராடம் கா 10.35
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Varalakshmi viradham poojai murai
மகாலட்சுமியே நேரில் வந்து தன் பக்தர்களுக்கு உபதேசம் செய்த மிகச்சிறந்த ஒரு விரதமுறை ‘வரலட்சுமி விரதம்’ ஆகும். இதனை காலம் காலமாக கடைப்பிடித்து வருபவர்களும், ஒவ்வொரு வருடமும் புதிதாக ஆரம்பிப்பவர்களும் உண்டு. இந்த விரதம் சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்கள் நல்ல வரன் அமையவும், மற்றவர்கள் குடும்பத்தின் நலன் கருதியும், செல்வ செழிப்பு ஓங்கவும் கடைபிடிக்கும் ஒரு எளிய நோன்பு முறையாகும்.
மகாலட்சுமியை கலசம் அமைத்து முகம் வைத்து அல்லது அதற்கு பதிலாக தேங்காய் வைத்து அழகாக அலங்காரம் செய்து வீட்டிற்கு அழைப்பது வழக்கம். புதிதாக ஆரம்பிப்பவர்கள் அல்லது இதை பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு கலசம் வைக்க வேண்டிய அவசியமில்லை. மகாலக்ஷ்மியின் படம் வைத்து அவர்கள் வழிபடலாம். கலசம் அமைப்பவர்கள் தொடர்ந்து மூன்று வருடம் இந்த பூஜையை செய்வது மிகவும் சிறப்பு. மகாலட்சுமியை முந்தைய நாள் வீட்டிற்கு அழைப்பது உண்டு. இல்லையேல் விரதம் அன்றைய நாள் அழைத்தும் பூஜைகளை மேற்கொள்ளலாம்.
கலசம் அமைக்கும் முறை:
பூரண கும்பத்தில் தோன்றிய மகாலட்சுமியை கும்பத்தில் எழுந்தருளச் செய்ய கலசம் அமைப்பார்கள். பித்தளை, வெள்ளி, தங்கம், செம்பு ஆகிய உலோகங்களில் ஒரு கலசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம் அல்லது அரிசி நிரப்பி வைக்கலாம். தண்ணீர் ஊற்றுபவர்கள் அதனுள் மஞ்சள், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்கள், வெள்ளி நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம், பச்சை கற்பூரம் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி நிரப்பி வைக்க வேண்டும் என்றால் அரிசியுடன் ஒரு சிறிய அளவிலான பொட்டலத்தில் பருப்பு போட்டு வைக்க வேண்டும். அவற்றுடன் ஒரு ரூபாய் நாணயம், எலுமிச்சைபழம், ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மஞ்சள் கிழங்கு, வெற்றிலை, பாக்கு, பூ, கருகமணி ஆகியவற்றை போட்டு வைக்க வேண்டும்.
பின்னர் மாவிலை அல்லது வெற்றிலை வைத்து நடுவே கலசத்தின் மீது தேங்காயை மஞ்சள் தடவி குங்குமம் பொட்டு வைத்து மகாலட்சுமியின் முகமாக ஆவாகனம் செய்ய வேண்டும். மகாலட்சுமியின் திருமுகம் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. வாங்கி அழகாக அலங்கரித்து கொள்ளலாம். மகாலட்சுமிக்கு பட்டு பாவாடை அல்லது பட்டு புடவை, ரவிக்கை போன்றவற்றால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பம் போல கம்மல் மாட்டுவது, வளையல் போடுவது, சவுரி முடி தரிப்பது போன்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த அளவிற்கு அழகாக மகாலட்சுமியை உருவகப்படுத்த முடியுமோ! அந்த அளவிற்கு உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.
மஹாலக்ஷ்மியை அழைக்கும் முறை:
கலசம் அமைப்பவர்கள் கலசத்தை தயார் செய்து அதனை ஒரு மனையின் மீது அமர்த்த வேண்டும். மனையை அலங்கரித்து மஞ்சள் தடவி கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது வாழை இலை விரித்து நெல்மணி அல்லது பச்சரிசி பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது கலசம் அல்லது நீங்கள் தயார் செய்த மகாலட்சுமியின் படம் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். மனையுடன் அப்படியே கொண்டு போய் வெளியில் வாசற்படியில் வைக்க வேண்டும். முந்தைய நாள் மகாலட்சுமியை அழைப்பதாக இருந்தால் வியாழன் கிழமை அன்று மாலை அலங்காரம் செய்து வாசலில் ஒரு கற்பூரம் ஏற்றி மகாலட்சுமியை எழுந்தருளும்படி உங்களுக்கு தெரிந்த முறையில் ஆவாகனம் செய்யுங்கள்.
பின்னர் வீட்டிற்குள் அழைத்து வந்து நீங்கள் எந்த இடத்தில் வைத்து பூஜை செய்ய நினைக்கிறீர்களோ! அந்த இடத்தை கோலமிட்டு அலங்காரம் செய்து மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அழைப்பவர்கள் இதே முறையில் அழைத்து வந்து பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். முந்தைய நாள் அழைப்பவர்கள் வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து எளிமையான முறையில் அன்று பூஜைகளை முடித்து கொள்ளலாம்.
-
August 16 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – இன்பம்
ரிஷபம் – பெருமை
மிதுனம் – அன்பு
கடகம் – வெற்றி
சிம்மம் – போட்டி
கன்னி – அசதி
துலாம் – சாந்தம்
விருச்சிகம் – முயற்சி
தனுசு – ஓய்வு
மகரம் – பாராட்டு
கும்பம் – பரிவு
மீனம் – பாசம்
சந்திராஷ்டமம் – ரோகிணி