Tag: பகவான்

  • Kalinga narthan krishnar koil abishegam

    மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 103ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு முலவர் உற்சவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    மயிலாடுதுறை ரயிலடி மேலஒத்தசரகு தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயமான ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில்  103 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஶ்ரீகாளிங்க நர்த்தன வடிவில் உள்ள கிருஷ்ணன் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், மற்றும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தது பக்தர்களை கவர்ந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை குழந்தை கிருஷ்ணன் மலர் தொட்டியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

  • August 26 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         – பாசம்
    மிதுனம்     – அசதி
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   பாசம்
    கன்னி         –    கவனம்
    துலாம்         –     பயம்
    விருச்சிகம்     –  பெருமை  
    தனுசு         –    சிந்தனை
    மகரம்         –   முயற்சி
    கும்பம்         –     ஆதரவு
    மீனம்         –    சுபசெலவு     
    சந்திராஷ்டமம்    –         உத்திரம், அஸ்தம்

  • August 26 2024 Krishna Jayanthi

    ஆகஸ்ட் 26 – கிருஷ்ண ஜெயந்தி
    குரோதி வருடம் – ஆவணி 10
    ஆகஸ்ட் 26 – 2024
    திங்கள்
    கிருஷ்ண ஜெயந்தி
    கார்த்திகை
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் :கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் :  சப்தமி கா 9.12
    நட்சத்திரம் :  கார்த்திகை இ 9.40
    யோகம் : மரண-அமிர்த
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • August 25 2024 Indrayanaal

    ஆகஸ்ட் 25 – இன்றைய நாள் எப்படி?.
    குரோதி வருடம் – ஆவணி 09
    ஆகஸ்ட் 25 – 2024
    ஞாயிறு
    கரிநாள்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் :ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : சப்தமி
    திதி நேரம் :  சஷ்டி கா 11.12
    நட்சத்திரம் :  அசுவினி அ.கா 12.03
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • August 25 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  உயர்வு
    ரிஷபம்         – பாராட்டு
    மிதுனம்     – நலம்  
    கடகம்         –  தோல்வி
    சிம்மம்         –   இரக்கம்
    கன்னி         –    அலைச்சல்  
    துலாம்         –     பொறுமை
    விருச்சிகம்     –  சோதனை
    தனுசு         –    சினம்
    மகரம்         –   நிம்மதி
    கும்பம்         –     பகை
    மீனம்         –    வெற்றி
    சந்திராஷ்டமம்    –         பூரம், உத்திரம்

  • Then Thirupathy Pavitrochavam

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென்  திருப்பதி என்றழைக்கப்படும்  ஸ்ரீவாரி மலையப்ப சுவாமி ஆலயத்தில்  பவித்ரோற்சவ உற்சவம் இன்று  மாலை விமர்சையாக நடைபெற்றது..

    ஆவனி  மாதத்தில் நடைபெறும் இந்த பவித்ரோற்சவம் நிகழ்ச்சி துவங்கிய நிலையில் புண்ணியாக வாஜனம், மேதினி பூஜை, பூர்ணாஹூதி, திருவாராதனம், மந்திர புஸ்பம், பிரபந்த சாற்று முறை,  ஏகாந்த சேவை என நிகழ்வுகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து  வாஜனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், ஸ்ரீ மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபன திருமஞ்சனமும் நடைபெற்றது. இதனையடுத்து இன்று விழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பவித்ர மாலையுடன் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது..

    அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருள  இசைவாதியங்கள் முழங்க வேத விற்பனர்களின் மந்திரங்கள் முழங்க நான்கு மாட வீதிகளின் வழியாக  வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்..பின்னர் யாக சாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்..

  • August 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி
    ரிஷபம்         – உயர்வு
    மிதுனம்     – பெருமை
    கடகம்         –  அமைதி
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    ஆதரவு  
    துலாம்         –     போட்டி
    விருச்சிகம்     –  அனுகூலம்  
    தனுசு         –    அச்சம்
    மகரம்         –   பகை
    கும்பம்         –     பாசம்
    மீனம்         –    சுகம்  
    சந்திராஷ்டமம்    –         மகம், பூரம்

  • August 24 2024 Indrayanaal

    ஆகஸ்ட் 24 – இன்றைய நல்லநேரம்….
    குரோதி வருடம் – ஆவணி 08
    ஆகஸ்ட் 24 – 2024
    சனி
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் :ம 1.30 – 3.00
    குளிகை : கா 6.00 – 7.30
    ராகு : கா 9.00 – 10.30
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் :  பஞ்சமி ம 1.25
    நட்சத்திரம் :  ரேவதி அ.கா 1.35
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • Agasteeswarar koil kumbabishegam

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கூழையூர் எனப்படும் கொழையூர் கிராமம் உள்ளது. உருவத்தில் குள்ளமான அகத்திய முனிவர் தனது பாவங்களை போக்கிக் கொள்ள வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர் கூழையூர் என்றும் இத்தலத்து இறைவன் அகஸ்தீஸ்வரர் என்றும் பெயருடனும் அழைக்கப்படுகிறது. மேலும், இந்த தலம் மார்க்கண்டேயரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்கு  உரியதும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமும் ஆகும்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் திருப்பணி தொடங்கி அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    கும்பாபிஷேக தினமான இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

  • August 23 2024 Subamuhurtha naal

    ஆகஸ்ட் 23 – சுபமுகூர்த்த நாள்….
    குரோதி வருடம் – ஆவணி 07
    ஆகஸ்ட் 23 – 2024
    வெள்ளி
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் :ம 3.00 – 4.30
    குளிகை : கா 7.30 -9.00
    ராகு : கா 10.30 – 12.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் :  சதுர்த்தி ம 3.48
    நட்சத்திரம் :  உத்திரட்டாதி அ.கா 3.13
    யோகம் : அமிர்த
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்