இன்றைய ராசிபலன்
மேஷம் – தனம்
ரிஷபம் – நட்பு
மிதுனம் – சுபம்
கடகம் – பயம்
சிம்மம் – பரிசு
கன்னி – வெற்றி
துலாம் – ஏமாற்றம்
விருச்சிகம் – ஓய்வு
தனுசு – நலம்
மகரம் – அமைதி
கும்பம் – சலனம்
மீனம் – ஆக்கம்
சந்திராஷ்டமம் – சதயம், பூரட்டாதி
Tag: பகவான்
-
October 04 2024 Rasipalan
-
Palani navarathri starts
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒன்பது நாள் திருவிழாவை முன்னிட்டு வரும் அக்.11 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்.12 ம் தேதி விஜயதசமி அம்புபோடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி மலைக்கோயிலில் உச்சிக்காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள வினாயகர், மூலவர், உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் ஆகியோருக்கும், பாரவேல் மண்டபத்தில் உள்ள துவாரபாலகர், கொடிக்கம்பம், மயில்வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது. நவவீரர்கள், பரிவார மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அக்.11 ம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையும், அக். 12 ம் தேதி விஜயதசமி அம்புவில் போடுதலும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. காப்புக்கட்டு விழாவில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
-
siva peruman vazhipatta soorya bagavan
அனந்தலை கிராமத்தில் அகத்திய முனிவர் வழிபட்ட சுயம்பு சிவ பெருமானை சூரிய ஒளியால் வழிபட்ட சூரிய பகவான்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி உடனுறை சுயம்பு நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் அகத்திய முனிவரால் வழிபட்ட சிறப்புக்குரிய திருத்தலமாகும்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிவனின் திருமேனியின் மீது சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் இதேபோல வார காலமாக காலை 6.30 மணி முதல் சூரியன் உதயமாகி 6.45 வரை மூலவர் சிவலிங்கத்தின் திருமேனி மீது படர்ந்து ஜொலித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
இதுபோன்ற சூரிய ஒளி கதிர்கள் வழிபடும் நேரத்தில் பக்தர்களுடைய திருமண தடை குழந்தை பாக்கியம் அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனால் அனந்தலை கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் இந்த தகவலை அறிந்ததும் கோவிலுக்கு வருகை தந்து காத்திருந்து சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபட்ட நிகழ்வை கண்டு மெய்சிலிர்த்து சுவாமியை வழிபட்டனர் மேலும் சூரியக் கதிர்கள் வழிபடும் நிகழ்வை முன்னிட்டு கருவறையில் இருக்கும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மங்கல தீபராதனைகள் நடைபெற்றது..
-
October 02 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – தாமதம்
ரிஷபம் – லாபம்
மிதுனம் – ஆதரவு
கடகம் – சிந்தனை
சிம்மம் – தனம்
கன்னி – வெற்றி
துலாம் – நன்மை
விருச்சிகம் – பொறுமை
தனுசு – நஷ்டம்
மகரம் – பயம்
கும்பம் – பக்தி
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம் -
October 02 2024 mahalaya amavasai
அக்டோபர் 02 – மகாளய அமாவாசை
குரோதி வருடம் – புரட்டாசி 16
அக்டோபர் 02 – 2024
புதன்
காந்தி ஜெயந்தி
மகாளய அமாவாசை
நவராத்திரி கொலு வைக்க காலை 10.00 – 10.30 மணி
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : கா 7.30 – 9.00
குளிகை : கா 10.30 – 12.00
ராகு : ம 12.00 – 1.30
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை முழுவதும் 0.00
நட்சத்திரம் : உத்திரம் ம 1.44
யோகம் : அமிர்த-மரண
சந்திராஷ்டமம் : அவிட்டம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
thirupathy azwar thirumanjanam
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுவது வழக்கம். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது.
யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலை ஒரு ஆழ்வாராக கருதி அதனை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் இம்மாதம் 4 ம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோவில் சுவர்களுக்கு தெளித்தனர்.
-
Vellore pradhosham
வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத சோமவார பிரதோஷம் நந்திபகவானுக்கு பால்,தயிர் ,தேன்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரங்களை மகாதீபாராதனைகள் பக்தர்கள் சுவாமிதரிசணம் செய்தனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர்,தேன்,சந்தனம்,விபூதி,கரும்புசாறு ,பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து அருகம்புல்,வில்வ இலைகள் ,தாமரை மலர்கள்,மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.
பின்னர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரி அகிலாண்டீஸ்வரி அம்மன் சுவாமி உட்பிரகார உலாவும் வந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.
-
October 01 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பகை
ரிஷபம் – வரவு
மிதுனம் – பயம்
கடகம் – நன்மை
சிம்மம் – ஆதாயம்
கன்னி – சிந்தனை
துலாம் – தாமதம்
விருச்சிகம் – சுகம்
தனுசு – லாபம்
மகரம் – அச்சம்
கும்பம் – ஆர்வம்
மீனம் – வாழ்வு
சந்திராஷ்டமம் – உத்திராடம், திருவோணம் -
September 30 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – பரிசு
ரிஷபம் – தனம்
மிதுனம் – தேர்ச்சி
கடகம் – செலவு
சிம்மம் – ஓய்வு
கன்னி – சினம்
துலாம் – நன்மை
விருச்சிகம் – மறதி
தனுசு – ஆதரவு
மகரம் – பக்தி
கும்பம் – சலனம்
மீனம் – உயர்வு
சந்திராஷ்டமம் – உத்திராடம் -
September 30 2024 Pradhosham
செப்டம்பர் 30 – பிரதோஷம்
குரோதி வருடம் – புரட்டாசி 14
செப்டம்பர் 30 – 2024
திங்கள்
பிரதோஷம்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 8.45
நட்சத்திரம் : மகம் கா 9.01
யோகம் : மரண-சித்த
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்