அக்டோபர் 07 – இன்றைய நல்லநேரம்…
குரோதி வருடம் – புரட்டாசி 21
அக்டோபர் 07 – 2024
திங்கள்
நல்ல நேரம் : கா 6.00 – 7.30
எமகண்டம் : கா 10.30 – 12.00
குளிகை : ம 1.30 – 3.00
ராகு : கா 7.30 – 9.00
திதி : பஞ்சமி
திதி நேரம் : சதுர்த்தி கா 7.22
நட்சத்திரம் : அனுஷம் முழுவதும் 0.00
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: பகவான்
-
October 07 2024 Indrayanaal
-
Vellore Durgai Amman Alangaram
வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி 4 ஆம் நாள் துர்கை அம்மன் அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் ஆன்மிக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று நவராத்திரி விழா 4 ஆம் நாளான இன்று அம்மனுக்கு , துர்கை அம்மன் அலங்காரம் செய்து குங்கும லட்ச்சார்ச்சணைகளும் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகங்களும் நடந்தது.
பின்னர் மகாதீபாராதனைகளும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர் பின்னர் ஆன்மிக பாரம்பரிய இசைகலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் மாணவ,மாணவிகள் பங்கேற்று இசைகருவிகளை இசைத்தும் ஆன்மிக பாடல்களையும் பாடினார்கள் இதனை மக்கள் கண்டு ரசித்தனர்.
-
October 06 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – செலவு
ரிஷபம் – குழப்பம்
மிதுனம் – ஆரோக்கியம்
கடகம் – வெற்றி
சிம்மம் – சுகம்
கன்னி – நட்பு
துலாம் – அமைதி
விருச்சிகம் – கவனம்
தனுசு – முயற்சி
மகரம் – ஆர்வம்
கும்பம் – பயம்
மீனம் – அனுகூலம்
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி, ரேவதி -
October 06 2024 Chadurthi Viradham
அக்டோபர் 06 – சதுர்த்தி விரதம்
குரோதி வருடம் – புரட்டாசி 20
அக்டோபர் 06 – 2024
ஞாயிறு
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 12.00 – 1.30
குளிகை : ம 3.00 – 4.30
ராகு : மா 4.30 – 6.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 6.04
நட்சத்திரம் : விசாகம் இ 11.03
யோகம் : மரண
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
Saraswathi Vaganam Thirupathi Ezhumalayan
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அன்ன பறவை பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பிக்கை. சுவாமி வீதிஉலாவில் கர்நாடக, ஆந்திரா ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நாளை காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
-
October 05 2024 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – சுகம்
ரிஷபம் – புகழ்
மிதுனம் – பாராட்டு
கடகம் – ஆதாயம்
சிம்மம் – தாமதம்
கன்னி – விருப்பம்
துலாம் – விவேகம்
விருச்சிகம் – தோல்வி
தனுசு – அலைச்சல்
மகரம் – வெற்றி
கும்பம் – நன்மை
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி -
October 05 2024 Indrayanaal
அக்டோபர் 05 – இன்றைய நல்லநேரம்
குரோதி வருடம் – புரட்டாசி 19
அக்டோபர் 05 – 2024
சனி
நல்ல நேரம் : கா 7.31 – 9.00
எமகண்டம் : ம 1.30 – 3.00
குளிகை : கா 6.00 – 7.30
ராகு : கா 9.00 – 10.30
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை அ.கா 2.33
நட்சத்திரம் : சுவாதி இ 9.06
யோகம் : அமிர்த-சித்த
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
Periya shesha vaganathil ezhumalayan
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமியின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
பெரிய சேஷ வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகனமண்டபத்தை அடைந்தார். அங்கு பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு சமர்ப்பணம் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் பெரியசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய சேஷ வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
-
Thirupathy pattu vasthiram
ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு. திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த நிலையில் வழக்கத்தின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார். அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க மனைவி புவனேஸ்வரியுடன் கோவில் எதிரில் இருக்கும் பேடி ஆஞ்சநேய சுவாமி கோவில் வந்த முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி பட்டு வஸ்திரங்களை வெள்ளி தட்டில் வைத்து முதல்வர் தலை மேல் ஏற்றி வைத்தனர். அங்கிருந்து பட்டு வஸ்திரங்களுடன் கூடிய வெள்ளி தட்டை சுமந்து நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
-
October 04 2024 Chandra Dharisanam
அக்டோபர் 04 – சந்திர தரிசன நாள்
குரோதி வருடம் – புரட்டாசி 18
அக்டோபர் 04 – 2024
வெள்ளி
சந்திர தரிசனம்
நல்ல நேரம் : கா 9.00 – 10.30
எமகண்டம் : ம 3.00 – 4.30
குளிகை : கா 7.30 -9.00
ராகு : கா 10.30 – 12.00
திதி : துவிதியை
திதி நேரம் : பிரதமை அ.கா 2.38
நட்சத்திரம் : சித்திரை மா 6.48
யோகம் : சித்த
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்