ஸ்ரீசைலத்திலுள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது, ஆந்திரத்திலுள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவர்களுக்காக, காலை முதல் இரவு வரை பல வகையான தரிசன சேவைகளை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டணத்தை திடீரென உயர்த்தி கோயில் நிர்வாகம் உத்தவிட்டுள்ளது.
இனி, வரும் காலங்களில் ஸ்பரிச தரிசனம் காலை 6.30 முதல் 10.30 மணி வரையும், மீண்டும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நேரங்களில் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், மற்ற பக்தர்களுடன் சேர்ந்து அலங்கார தரிசனத்தில் மட்டும் சிவனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட்டின் கட்டணம் குறைவாக இருப்பதால், கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகம் உள்ளதாகவும், கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்தவும், கோயிலின் மற்ற செலவுகளை சமாளிக்கவும் தரிசன டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. விரைவில், ரூ. 10 ஆயிரத்தில் புதிய தரிசன சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: பகவான்
-
2016-09-23-14-16-19
-
2016-09-23-14-16-19
ஸ்ரீசைலத்திலுள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது, ஆந்திரத்திலுள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவர்களுக்காக, காலை முதல் இரவு வரை பல வகையான தரிசன சேவைகளை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டணத்தை திடீரென உயர்த்தி கோயில் நிர்வாகம் உத்தவிட்டுள்ளது.
இனி, வரும் காலங்களில் ஸ்பரிச தரிசனம் காலை 6.30 முதல் 10.30 மணி வரையும், மீண்டும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நேரங்களில் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், மற்ற பக்தர்களுடன் சேர்ந்து அலங்கார தரிசனத்தில் மட்டும் சிவனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட்டின் கட்டணம் குறைவாக இருப்பதால், கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகம் உள்ளதாகவும், கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்தவும், கோயிலின் மற்ற செலவுகளை சமாளிக்கவும் தரிசன டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. விரைவில், ரூ. 10 ஆயிரத்தில் புதிய தரிசன சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -
2016-09-22-13-59-35
“சீரறிந்து தோழிமீர்! சென்று கொணர்ந்தெனக்குப்
போரமுலை முகட்டிற் பூட்டுமினோ- தேரவுணர்
பொன்றவூர்புட் கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர்.’
108 திவ்விய தேசங்களில் 58-ஆவது திருத்தலமாக விளங்குகிறது திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில்.
பகவத் ஸ்ரீராமானுஜர் வடமொழியில் மங்களா சாசனம் செய்திருப்பது இந்த கோயிலுக்கு கூடுதல் சிறப்பு.
திருமங்கையாழ்வார் திருவள்ளூருக்கு வந்து சிலநாள் தங்கியிருந்து, திரு எவ்வுள் கிடந்தான்மீது “பலச்சுருதி’ யுடன் பதினோரு பாசுரங்கள் பாடி னார். பிறகு தென்கிழக்காய் பத்து கல் தொலைவிலுள்ள திருநின்றவூருக்குச் சென்றார்.
ஆழ்வார் அங்கு வந்தபோது இரவு நேரமானதால், திருக்கோவில் நடையடைக் கப்பட்டு பெருமாள் ஏகாந்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எனவே ஆழ்வார் பயணத்தைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்து சேர்ந்தார்.
திருமங்கையாழ்வார் திருநின்றவூரில் சேவை சாதிக்கும் திருமகளையும் பக்தவத்சலப் பெருமாளையும் சேவிக்காமல்- பாசுரங்கள் செய்யாமல் போனது திருமகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது.
அவள் பெருமாளை உசுப்பி, கடல்மல்லைக்குச் சென்று திருமங்கையாழ்வாரிடம் தங்களுக்கான பாசுரங்களைப் பெற்றுவருமாறு சொல்ல, பிராட்டியின் சொல்தட்ட முடியாத பெருமாள், கடல்மல்லைக்குச் சென்றார். அப்போது, திருமங்கையாழ் வார் தலச்சயனப் பெருமாள் சந்நிதியில் நின்று சேவித்துக் கொண்டிருந்தார். தான் வந்திருப்பதை ஆழ்வாருக்கு குறிப்பால் உணர்த்திய திருநின்றவூர் பெருமாள், தான் வந்த நோக்கத்தை சூசகமாகத் தெரிவித்தார்.
பெருமாள் வருகையைப் புரிந்துகொண்ட ஆழ்வார் பூரித்துப் போனார். மாமல்ல புரத்திலிருந்து கொண்டே, திருநின்றவூர் பெருமாள்மீது பாசுரம் செய்தார்.பாசுரத்துடன் திரும்பிவந்த திருமாலிடம் தாயார், “”எல்லா திவ்விய தேசங்களுக்கும் ஆழ்வார் பத்திற்கு மேற்பட்ட பாசுரங்கள் பாடியவர். நமக்கு மட்டும் ஏன் ஒரு பாசுரத்து டன் நிறுத்திக்கொண்டார்?” என்று கேட்டு, மேலும் பாசுரங்களைப் பெற்று வருமாறு எம்பெருமாளை அனுப்பி வைத்தாள்.
அதற்குள் திருமங்கையாழ்வார் பல திவ்விய தேசங்களைப் பாடியும், சேவித்துக்கொண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கண்ண மங்கைக்கு வந்துசேர்ந்தார்.
இங்கே ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், திருக்கண்ணமங்கை பெருமாளின் திருநாமமும் ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள்தான். திருநின்றவூர் பெருமாள் திருக்கண்ணமங்கை பெருமாளின் சந்நிதியில் நின்றிருந்த திருமங்கை ஆழ்வாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தோடு, நோக்கத்தையும் உணர்த்தினார். பரவசத்தால் நெகிழ்ந்துபோன மங்கை மன்னன், கீழ்வரும் பாசுரத்தை அருளிச் செய்தார்.
இருப்பினும் இந்த கோயிலுக்கு தல வரலாற்றிலோ அல்லது புராணங்களிலோ கட்டியவர்களைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
ஆனாலும் சரித்திரப் பின்னணியும் இத்திருக் கோவிலுக்கு உண்டு. இரண்டு பாசுரங்களைப் பாடிய திருமங்கை ஆழ்வார் 8-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தவர் என்பதும்; கி.பி. 690-728 வரை- அதாவது 38 ஆண்டுகள் அரசாட்சி செய்த பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்தில் இத்திருக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதையும் அறிகிறோம். -
2016-09-22-10-41-15
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 61 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
சிவனின் அக்னி தலமாக விலங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கோயிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள், கிரிவலப்பாதை அஷ்டலிங்க சந்நிதிகளில் இருந்த உண்டியல்கள், துர்க்கையம்மன் கோயில் உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், 60 லட்சத்து 97 ஆயிரத்து 597 ரூபாய் ரொக்கம், 220 கிராம் தங்கம், 640 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தது தெரியவந்தது.காணிக்கையாக கிடைத்த ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
2016-09-21-05-15-50
சபரிமலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக, பம்பையில் மரம் செதுக்கும் பணி துவங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயில் முன் கொடிமரம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கொடிமரம் வலுவிழந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தினால் ஆன புதிய கொடிமரம் அமைக்க ரான்னி வனப்பகுதியிலிருந்து ஒரு தேக்கு மரம் வெட்டி பம்பைக்கு கொண்டு வரப்பட்டது.இந்த மரத்தை செதுக்குவதற்கான பணிகள் துவங்கின. மரத்தை உருட்டி செதுக்கி முடிந்த பின், பச்சிலை மருந்துகள் கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்படும். இதற்காக, 42 அடி நீளமும், 2 அடி அகலத்திலும் எண்ணெய் தோணி தயாராகிறது.
மரத் தின் நீளம், 40 அடி. எண்ணெயில், 32 வகை பச்சிலை மருந்து சேர்க்கப் படும். அக்., 20-ல், தோணியில் மரம் போடப்படும்.2017ஆம் வருடம் ஜூன் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.50க்கும் மதியம் 1.40க்கும் இடையே உள்ள நேரத்தில் புதிய தங்க கொடிமரம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
2016-09-21-04-52-01
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.
வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் குவிகிறார்கள்.
திருப்பதியில் ஆண்டுதோறும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 10 லட்சம் மக்கள் தங்களது தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாக முடி ஒவ்வொரு மாதமும் ஏலம் விடப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களாக காணிக்கையாக வழங்கிய முடி ரூ.17.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் முடி ரூ.11.88 கோடிக்கும், ஆகஸ்ட் மாதம் முடி ரூ.5.94 கோடிக்கும் ஏலம் சென்றதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். -
2016-09-20-09-50-49
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் உள்ள மடத்துக்கு சிறப்பு பூஜைக்காக சென்றிருந்த ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள், அங்கு பூஜைகள் முடிந்து செப்டம்பர் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குத் திரும்பினார்.
அங்கு அவருக்கு பக்தர்கள், மடத்தின் நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி பிற்பகலில், காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஜயேந்திரர் சென்றார். அங்கு கோயில் நிர்வாகிகள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சங்கராச்சாரியார் கலந்து கொண்டு வழிபட்டார்.
-
2016-09-20-09-29-44
பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்டோபர் மாதம் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டு தசரா திருவிழா அக்டோபர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு செப்டம்பர் 30ம் தேதி காலை 10 மணிக்கு காளி பூஜை நடக்கிறது. அக்டோபர் 1ம்தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா நடக்கிறது.
காலை 8 மணிக்கு நடக்கும் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவங்குவர். இதையொட்டி காலை 6 மணி, மதியம் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அபிஷேக, அலங்கார தீபாராதனையும் மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவும், இரவு பரதநாட்டியமும், பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் திடலுக்கு எழுந்தருளி சூரனை வதம் செய்யும் மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
-
2016-09-19-15-56-20
கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக கோயில்களில் சேவை புரிந்துவரும் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி, அவர்களின் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த 5 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 3 ஆயிரத்தி 700 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாகை எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.95 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டப்படும். அதன் பின்னர் கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி காணொளிக் கடசிகளுடன் காண சிறப்பு இணையதளம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோயில் சிற்பிகள், அர்ச்சகர்கள், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ. 5கோடியில் திட்டமும், மேலும் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சேவர்த்திகள் மண்டபம், பாதுகாப்பு அறை கட்டப்படும்.தேனி மாவட்டம் குச்சனுர் கோயிலில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபம் கட்டப்படும்.மேலும் 241 கோயில்களில் ஒரு கால பூஜை வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
2016-09-18-11-55-26
இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விசுவ இந்து பரிஷத் சார்பில் திருக்குடை ஊர்வலம் ஆண்டுதோறும் சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்கு பிரமோற்சவத்தன்று சென்றடையும்.
இதன்படி இந்தாண்டு செப்டம்பர் 26ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று 21 திருக்குடைகளுடன் ஊர்வலம் தொடங்குகிறது.
திருக்குடை ஊர்வலம் சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை, பைராகி மடம் பெருமாள் கோயில்-வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு குடைகள் யானைக்கவுனியை கடக்கிறது. அன்று இரவு அயனாவரம் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் தங்குகிறது.
செப்டம்பர் 27ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஏகாங்கிபுரம் துளசிவணமால ஸ்ரீ பெருமாள் கோயிலில் சுப்ரபாதம் பூஜை முடிந்து திருக்குடை ஊர்வலம் புறப்படும். அன்றைய தினம் இரவு ஆவடி ஸ்ரீ கல்யாணராமர் கோயிலில் தங்குகிறது.
செப்டம்பர் 28ம் தேதி காலை ஆவடி சிவா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. அன்றைய தினம் திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில் திருவள்ளூர் வீரராகவர் கோயில் சென்று இரவு புத்தூர் தர்மராஜா கோயிலில் தங்குகிறது. 29ம் தேதி காலை 7 மணிக்கு தர்மராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் அலமேலு மங்காபுரம் வழியாக திருப்பதிக்கு சென்றடைந்து பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது. 30ம் தேதி திருப்பதி கோயிலில் உற்சவம் நடைபெறுகிறது.